![]() |
| Add caption |
தவக்குல் கர்மான் – நோபல் பரிசு வென்ற முதல் அரபு பெண்மணி. 32 வயதான இவர் எமன் தேசத்தை சார்ந்தவர். அவர் அந்நாட்டின் புரட்சி தாய் என்றும் இரும்பு பெண்மணி என்றும் வர்ணிக்கப்படுகிறார்.
இவரிடம் ஒரு பத்திரிகையாளர் அவரது ஹிஜாப் பற்றிக் கேட்டார். அவர் கேட்டார் உங்களது அறிவுக்கும், படிப்புக்கும் எந்தவிதத்திலும் சம்பந்தமில்லாமல் உங்களது ஆடை உள்ளதே என்று. தவக்குல் கர்மானின் அழகான, அறிவான பதிலை கேளுங்கள்..தவக்குல் கூறினார்,
ஒரு காலத்தில் மனிதர் முழு நிர்வாணமாக இந்த உலகில் வாழ்ந்தான். அவனுக்கு எப்போது அறிவாற்றல் வளர ஆரம்பித்ததோ அப்போது அவன் தனது வெட்கத்தலங்களை மறைக்க ஆரம்பித்தான். நான் அணிந்திருக்கும் ஆடை மனிதனின் நாகரிக்கத்தை, உயர்ந்த அறிவாற்றலை காண்பிக்கிறது என்றார். இது பின்னோக்கிச் செல்வதல்ல என்றும் கூறினார். ஆடைகளை குறைப்பதென்பது மீண்டும் பழைய, நாகரீகமடையாத உலகை நோக்கி பின்னோக்கி செல்வது என்றும் கூறினார்.
என்னவொரு அழகான, அறிவான, ஆணித்தரமான, சிந்திக்க வைக்கும் வார்த்தைகள் இவை.
இன்று நமது கலாச்சாரம் அந்த முந்திய உலகை நோக்கி செல்கிறது. இஸ்லாமிய சமுதாயமும் க
லாச்சார சீரழிவை நோக்கி போய்க் கொண்டிருக்கிறது. ஹிஜாபை பேணி நடக்க வேண்டிய நமது சமுதாயம் கொஞ்சம், கொஞ்சமாக கற்கால மனிதர்கள் போல ஆடை குறிப்பில் செல்கிறது. சிறிய வயது முதலே ஹிஜாபை சொல்லிக் கொடுக்க வேண்டிய பெற்றோர்கள், சிறிய வயதிலேயே ஹிஜாபை நடைமுறைப் படுத்த வேண்டிய பெற்றோர்கள் சிறியவள்தானே, இப்போதுதானே இது போன்ற ஆடைகளை அணியமுடியும் என்று கூறி தொடை தெரியும் படியும், கைமுழுவது தெரியும் படியும் FASHION என்ற பெயரில் பெண்குழந்தைகளை வளர்த்து வருகிறது. பள்ளிச் சீருடைகளும் பள்ளிக்கு கட்டுப்பட்டு, தலையை மறைக்காமல், முட்டளளவு ஆடை உடுத்தி, ஆண்களுடன் CO-EDUCATIONசெல்லும் நிலையில்தான் நமது சமுதாயத்தில் பெரும்பாலோர்களின் நிலை உள்ளது.
இஸ்லாம் வெட்;கமெனும் பண்புக்கு கூடிய முக்கியத்துவம் அளிக்கிறது.
‘ஒவ்வொரு மதத்திற்குமுரிய ஒரு விஷேட ஒழுக்கப் பண்பு உண்டு. இஸ்லாத்திற்குரிய ஒழுக்கப் பண்பு வெட்கமாகும் என்றார்கள் நபி (ஸல்) அவர்கள்.’ (முவத்தா)
‘வெட்கம் ஈமான் சார்ந்தது. ஈமான் சுவனத்திற்குரியது’ என்பதும் ஒரு நபிமொழி. (திர்மிதி)
‘வெட்கமும் ஈமானும் ஒன்றோடொன்று இணைந்தவை. பின்னிப்பிணை ந்தவை. இவற்றுள் ஒன்றை எடுத்துவிட்டால் மற்றதும் எடுபட்டு விடும்’ என்ற ஹதீஸும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும். (ஹாகிம்)
இந்தளவு முக்கியத்துவம் வாய்ந்த வெட்க உணர்வு ஆண்களை விட பெண்களிடம் அதிகம் எதிர்ப்பார்க்கப்படுகிறது. அத்தகைய வெட்க உணர்வின் அடையாளமாகவும் வெளிப்பாடாகவும் இருப்பதே பெண்களுக்குரிய இஸ்லாமிய உடையாகும்.
உடை அணிந்தும் அணியாதது போன்ற பெண்கள்:-
இறுக்கமான அல்லது மெல்லிய உள்ளே உள்ளவைகளை காண்பிக்கும் அல்லது மறைப்பதை விட அதிகம் வெளிப்படுத்திக் காண்பிக்கும் உடைகளை அணிபவர்கள் உடை அணிந்தும் அணியாதது போன்றவர்களாவார்கள்.
நபி (ஸல்) அவர்களால் சபிக்கப்பட்டவர்கள்:-
நபி (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்: ‘உடை அணிந்தும் அணியாதது போன்றும் ஒட்டகத்தின் மிதிலைப் போன்று தங்களின் தலையில் ஏற்படுத்திக் கொண்டு பெண்கள் என் சமுதாயத்தில் தோன்றுவார்கள். அவர்களை சபியுங்கள். அவர்கள் சபிக்கப்பட்டவர்கள் ஆவார்கள்’ ஆதாரம்: தபரானி.
சுவர்க்கத்தின் நறுமணத்தைக் கூட நுகராத பெண்கள்:-
மற்றொரு நபிமொழியில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இந்த பெண்களை (அதாவது மேற்கூறப்பட்ட பெண்களைக்) குறிப்பிட்டுக் கூறுகிறார்கள்: ‘அவர்கள் சுவர்க்கத்தில் அனுமதிக்கப்பட மாட்டார்கள். மேலும், அதன் சுகந்தத்தைக் கூட நுகர மாட்டார்கள். அதன் சுகந்தமோ நீண்ட தூரத்திற்கு பரவக்கூடியதாகும். அதாவது அவர்கள் சுவர்க்கத்தை விட்டு மிக அதிக தொலைவில் இருப்பார்கள்’ (ஸஹீஹ் முஸ்லிம்).
எல்லாம் வல்ல அல்லாஹ் நம் அனைவருக்கும் நேர்வழி காட்டி, நம்மையும் நம் குடும்பத்தாரையும் சுவர்க்கத்தில் புகுத்துவானாக.

0 Response to " சமுக கதாநாயகர்- தவக்குல் கர்மான் – நோபல் பரிசு வென்ற முதல் அரபு பெண்மணி "
Post a Comment