- இம்தியாஸ்
ஸலபிஉங்கள் வீடுகளில் உங்களுக்கு அல்லாஹ் நிம்மதியை ஏற்படுத்தினான். (16:80)
வீடுகள்
அமைதிக்குரியதாகவும் நிம்மதிக் குரியதாகவும் அமைய வேண்டும் என்றே
எல்லோரும் எதிர்பார்க்கின்றனர். வீட்டை விட்டு வெளியில் செல்லக் கூடிய
எவரும் தங்களுடைய வேலைகளை முடித்து விட்டு வீடு
திரும்பி அமைதி
பெற வேண்டும் என்றே விரும்புகின்றனர்.
வீட்டுக்குள் இருப்பவர்களாலோ அயலவர்களாலோ அல்லது சூழலில் உள்ளவர்களாலோ
எந்த பிரச்சினையுமில்லாமல் நிம்மதியாக இருக்க வேண்டும் என்றே பெரிதும்
விரும்புகின்றனர்.