விஞ்ஞான மறுமலர்ச்சியில், முஸ்லிம் விஞ்ஞானிகளின் பங்களிப்பு.


ஐரோப்பிய விஞ்ஞான மறுமலர்ச்சியில், முஸ்லிம் விஞ்ஞானிகளின் பங்களிப்பு.

நவீன உலகில் மருத்துவம்,விஞ்ஞானம்,கணிதம,வானவியல் போன்ற பல்வேறுபட்ட துறைகளில் உயர்ந்ததரத்தில் ஐரோப்பா காணப்படுகின்றது. எனினும் ஐரோப்பாவுக்கு நாகரீகத்தையும்,மேற்கூறப்பட்ட பல்வேறு கலைகளையும் கற்றுக்கொடுத்த முன்னோடிகள் முஸ்லிம்களே என்பதை எத்தனை பேர் அறிவர்.புனித அல்குர்ஆன் இறக்கப்பட்டதிலிருந்து அதாவது கி.பி.750 முதல் உலகில் தொடர்ச்சியாக முஸ்லிம் விஞ்ஞானிகள் தோண்றினர்.அவர்களில் ஜப்பார்,கரிஸ்மா, ராய்ஸ்,முஆத்,அபார், அல்பிரூனி மற்றும் அவீசின்னா(அலி இப்னு ஸீனா) போன்றவர்கள் முக்கியமானவர்கள் ஆவர்.கி.பி 13ம்நூற்றாண்டு வரை முஸ்லிம்கள் இரசாயனவியல்,கணிதம்,புவியியல், பௌதீகவியல்,வானியல் மற்றும் மருத்துவம் போன்ற பல துறைகளில் சிறந்து விளங்கினார்கள்.


அல் ஜீப்ரா எனப்படும் அட்சரகணிதத்தை கண்டுபிடித்த பெருமை முஹம்த் பின் கரிஸ்மாவைச்சாரும். மடக்கைகள்,வானியல் மற்றும் அதன் பிரயோகங்கள் போன்ற துறைகளில் புகழ்பூத்த விஞ்ஞானியகத் திகழும் முஹம்மத் பின் ஜப்பார் அல் பத்தானி விளங்குகின்றார். வானியல் நாள் காட்டியை கண்டுபிடித்தார். இது திருத்தப்பட்ட வானியல் நாள் காட்டிப்புத்தகம்(கிதாப் அல்ஜீஸ் அஸ்ஸப்பி) என அறியப்படுகிறது.
பூமி,சூரியனை நீள்வட்டப்பாதையில் ஒரு முறைசுற்றி வருவதற்கு எடுக்கும் கால அளவை 365நாட்கள் 5 மணித்தியாலங்கள் 24வினாடிகள் எனக்கணக்கிட்டார். இக்கணிப்பீடானது 19ம் நூற்றாண்டில் கணிக்கப்பட்ட அளவீட்டில் இருந்து 2நிமிடங்கள் 24வினாடிகளே வித்தியாசத்தை காட்டியது. மேலும் சூரிய கிரகணம் மற்றும் சந்திர கிரகணம் பற்றிய முக்கியமான ஒரு ஆய்வையும் அல் பத்தானி மேற்கொண்டார். கலீபா மஹ்மூனின் காலத்தில் ஆய்வுகளை மேற்கொள்வதற்காக பல்வேறு ஆய்வுகூடங்கள் நிறுவப்பட்டன. மூஸா பின் ஷாகிரும் அவரது மகன் கரிஸ்மாவும் பூமியின் சுற்றளவு, அகலாங்கு,நெட்டாங்கு என்பவற்றை கணக்கிட்டார்.

மருத்துவ மேதை அலி இப்னு ஸீனா

இஸ்லாமிய மருத்துவ மேதை அலி இப்னு ஸீனா 

இஸ்லாமிய மருத்துவ மேதை அலி இப்னு ஸீனா


முஸ்லிம் மருத்துவ வரலாற்றில் அலி இப்னு ஸீனாவுக்குத் தனிச் சிறப்பிடம் உண்டு. அவரது அல் கானூன் பீல் தீப் என்ற மருத்துவக் கலைக்களஞ்சியமானது, மருத்துவத்துறையின் வேத நூலாகக் கொள்ளப்படுவதாக ஒஸ்லெர் என்னும் மேற்கத்திய அறிஞர் குறிப்பிடுகின்றார்.

எமது இளம் சந்ததியினர் மூதாதையர் பற்றிய வரலாறுகளைப் படிப்பதில் ஆர்வம் குன்றியவர்களாக காணப்படுவது எதிர்காலத்தில் எமது வரலாற்றை நாம் சூன்யமாக்கிக் கொள்ளக் கூடிய ஒரு பயங்கர நிலையை உருவாக்கிவிடலாம். எமது வரலாற்றை மீட்டிப் பார்ப்பதற்கு வரலாற்றில் வந்துபோன நாயகர்களை நாம் நினைவுபடுத்திப் பார்ப்பதும், அவர்களின் பணிகளை நினைவு கூர்வதும் அவற்றை எமது சந்ததியினருக்கு எத்தி வைப்பதும் எமது கடமையாகும். எமது சமூகத்திற்காகப் பாடுபட்டு பணிகள் புரிந்த எமது முன்னோர் எமக்காக விட்டச் சென்றவைகள் பற்றிய தெளிவை நம் எதிர்காலச் சந்ததியினருக்கு நினைவுபடுத்தி வைக்கப்பட வேண்டும். உலகில் முன்னுதாரணமாகத் திகழப்பட வேண்டிய பலரது வாழ்க்கை வரலாறுகள் அவ்வப்போது எமது இளைய தலைமுறையினரால் மீட்டிப் பார்க்கப்பட வேண்டும். அந்த வகையில் அலி இப்னு ஸீனா அவர்களைப் பற்றி சுருக்கமானதொரு விளக்கத்தை இங்கே தருகின்றோம்.

இஸ்லாத்தின் வருகைக்கு முன்னர் ஜாஹிலியக் காலப்பகுதி மருத்துவத்துறை இல்லாதிருந்த காலப் பகுதியாகும். நோய் சுகமாக்கும் துறைகளாக மாந்திரீகம், சூனியம் போன்ற துறைகள் கையாளப்பட்ட காலம், சுகாதாரம், உடல் நலம் பேணுவதில் அக்கால சமூகம் அவ்வவு அக்கறை காட்டியதாக இல்லை.



இஸ்லாத்தின் வருகையின் பின் மனித சிருஷ்டியின் தோற்றம், உடலமைப்பு பற்றியெல்லாம் அல்குர்ஆன் முஸ்லிம்களைச் சிந்திக்கத் தூண்டியமையும் பெருமானார். (ஸல்) அவர்கள் அவ்வப்போது நோய் நிவாரணிகள் பற்றி விளக்கியமையுமே மருத்துவத்துறையில் எண்ணற்ற முஸ்லிம் மேதைகள் உருவாகி ஆயிரக்கணக்கான ஆக்கங்களை வெளிப்படுத்தக் காரணமாக இருந்ததெனலாம். பெருமானார் (ஸல்) அவர்களின் நோய் நிவாரணிகள் பற்றிய ஹதீஸ்கள் திப்பு நவவியா என்னும் தலைப்பில் தொகுக்கப்பட்டுள்ளது.

முஸ்லிம்களின் அறிவியற் பொற்காலமாக கி.பி. 750- 850 கொள்ளப்படுகின்றது. இது அப்பாஸியக் காலப் பிரிவாகும். இக்காலப் பிரிவிலேயே பைத்துல் ஹிக்மா என்னும் மொழிப்பெயர்ப்பு நிலையம் நிறுவப்பட்டு விஞ்ஞானம், மருத்துவம், தத்துவம் சார்ந்த கிரேக்க நூற்கள் அரபியில் மொழிபெயர்க்கப்பட்டன. ஆரம்ப கால முஸ்லிம் அறிஞர்கள் கிரேக்க நூல்களின் மொழிபெயர்ப்பாளர்களாக மாத்திரம் அல்லாமல் அந்த நூல்களிலுள்ள தவறுகளை ஆராய்ந்து திருத்தியும் பல புதிய மருத்துவ, அறிவியல், கருத்துக்களைப் புகுத்தியும் மருத்துவ, அறிவியல் துறைகளுக்குத் தமது பங்களிப்பை செய்துள்ளனர்.

மருத்துவ விஞ்ஞானம் இன்றைய உன்னத நிலையை அடைவதற்குக் காரணமாக இருந்த அன்றைய அறிஞர்களுள் அலி இப்னு ஸீனா முக்கியமானவராவார். இவர் கி.பி. 980 ஆம் ஆண்டு மத்திய ஆசியாவில் இன்று உஸ்பெகிஸ்தான் என்றழைக்கப்படும் அன்றைய புகாரா என்ற இடத்தில் பிறந்தார், இவரது இயற்பெயர் அபூ அலி அல் ஹுஸைன் இப்னு அப்துல்லாஹ் இப்னு ஸீனா என்பதாகும். ஐரோப்பியர் இவரை அவிஸென்னா (Avicenna) என்றழைப்பர். அலி இப்னு ஸீனா என்ற அரபுப் பதம் ஹிப்ரூ மொழியில் அவென்ஸீனா என்று குறிப்பிடப்படுகின்றது. அவிஸென்னா என்பது இலத்தீன் மொழி வழக்காகும்.

பத்து வயதாகும்போதே அலி இப்னு ஸீனா அவர்கள் அல்குர்ஆனை கற்றுத் தேர்ந்து, அரபு இலக்கணம், இலக்கியம் ஆகியவற்றில் தேர்சியும் பெற்றார். இருபதாம் வயதாகும்போது மருத்துவத்துறையில் மிகுந்த ஆற்றல் கொண்டிருந்தார். அதனால் அப்பிரதேச ஆட்சியாளரின் நோயைக் குணமாக்கும் சந்தர்ப்பம் அலி இப்னு ஸீனா அவர்களுக்குக் கிட்டியது. அதுவே ஆட்சியாளரது குடும்ப நூலகத்தைப் பயன்படுத்தும் வாய்ப்பை இவருக்களித்ததோடு கிரேக்கத்தின் தத்துவம், கணிதம் போன்றவற்றில் அறிவையும் அரிஸ்டோட்டலின் பௌதீகவியலையும் வாசித்தறியும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்தியது.

முஸ்லிம் மருத்துவ வரலாற்றில் இப்னு ஸீனாவுக்குத் தனிச் சிறப்பிடம் உண்டு.அவரது `அல் கானூன் பீல் தீப்' என்ற மருத்துவக் கலைக்களஞ்சியமானது, மருத்துவத்துறையின் வேத நூலாகக் கொள்ளப்படுவதாக ஒஸ்லெர் என்னும் மேற்கத்திய அறிஞர் குறிப்பிடுகின்றார். ஐந்து பெரும் பாகங்களைக் கொண்ட கானூனின் முதற் பாகத்தில் வரை விலக்கணங்களும், மனித உடல், ஆன்மா, நோய்கள் பற்றியும் இரண்டாம் பாகத்தில் அகர வரிசையில் நோய்களுக்கான அறிகுறிகளும் மூன்றாம் பாகத்தில் கால்முதல் தலைவரை உள்ள உறுப்புக்களை பாதிக்கும் நோய்கள் பற்றிய விளக்கங்களும் பொது நோய்கள் பற்றிய குறிப்புகளும் ஐந்தாம் பாகத்தில் கலவை முறையான மருந்துகளும் சிகிச்சை முறைகளும் அடக்கப்பட்டுள்ளன. மருத்துவம் பற்றிய கோட்பாடுகளே இந்நூலின் அடிப்படையாக இருந்தன.

கெலனின் நூலில் இடம்பெறாத பல விடயங்கள் இதில் இடம் பெற்றிருந்தன. அதனாலேயே `அல் கானூன் பீல் தீப்' 17 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரை தலைசிறந்த மருத்துவக் கலைக் களஞ்சியமாக ஐரோப்பியர்களால் போற்றப்பட்டு வந்துள்ளது.

அலி இப்னு ஸீனா அவர்களின் மற்றுமொரு மருத்துவ நூல் `கிதாப் அஷ்ஷிபா'வாகும். அக்காலம் வரை உலகில் விருத்தியடைந்திருந்த அத்தனை அறிவையும் கிதாப் அஷ்ஷிபாவில் தொகுத்துத் தந்துள்ளார். இந் நூலின் முதற்பகுதியில் தர்க்கவியல், பௌதீகவியல், கணிதம், அதீத பௌதீகம் என்ற நான்கு பிரிவுகளும் இரண்டாம் பகுதியில் உளவியல், தாவரவியல், விலங்கியல் என்பனவும் அடக்கப்பட்டுள்ளன. பௌதீகவியல் பிரிவில் அண்டவியல்வளி மண்டலவியல், விண்வெளி நேரம், வெற்றிடம், இயக்கம் என்பன பற்றிய கோட்பாடுகளும் விளக்கப்பட்டுள்ளன.

அலி இப்னு ஸீனா அவர்களின் `உர்ஜுதா பித் திப்' என்பது மருத்துவ கலை வளர்ச்சி பற்றி விளக்கும் கவிதை நூலாகும். இதுவும் ஐரோப்பியர்களால் மதிக்கப்பட்ட ஒரு நூலாகக் கொள்ளப்படுகின்றது. மருத்துவக் கலை பற்றி இவர் 19 நூற்களையும் ஏனைய துறைகள் பற்றி 90 நூல்களையும் ஆக்கி உலகிற்கு அளித்துவிட்டு கி.பி. 1037 இல் தனது 57 ஆவது வயதில் ஹமதான் என்ற இடத்தில் காலமானார்.

இன்று முதல்!


எனது வாசகர்களுக்கு ஓர் நற்செய்தி மருதமுனை செய்திகள் அனைத்தையும் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம்....

ஊடகவியலாளர் ஜெஸ்மி மூஸா அவர்களால் இனி தொடர்ந்து மருதமுனை ஜனாஸா, அரசியல்,சம்பவங்கள் இன்னும் பல...........



அலிஸ் நியுஸ்எனும் பெயரில் எதிர்பாருங்கள்



பெருவெடிப்புக் கொள்கை

பெருவெடிப்புக் கொள்கையும்  Big Bang Theory  உண்மைப்படுத்தும் இறைவேதமும்



“வானங்களும், பூமியும் இணைந்திருந்தன என்பதையும், அவ்விரண்டையும் நாமே பிரித்தோம் என்பதையும், உயிருள்ள ஒவ்வொரு பொருளையும் தண்ணீரிலிருந்து அமைத்தோம் என்பதையும் (நம்மை) மறுப்போர் சிந்திக்க வேண்டாமா? அவர்கள் நம்பிக்கை கொள்ள வேண்டாமா?” (அல்குர்ஆன் 21:30)



அற்புத இறைவேதம்

கி.பி.570ல் அரேபிய தீபகற்பத்தில் அகிலத்தின் அருட்கொடை அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பிறந்தார்கள். இக்காலகட்டத்தில் அன்றைய அரேபியப் பாலை நிலம் அறியாமைப் பேரிருளில் மூழ்கிக் கிடந்தது. அந்த அரபகத்தில் பகுத்தறிவு சிந்தனையும், அறிவாராய்ச்சியும் மருந்துக்கு கூட காணப்படவில்லை.

இவ்வாறான சூழ்நிலையில் பிறந்த எம்பெருமனார் (ஸல்) அவர்கள் தமக்கு இறைவனிடமிருந்து வந்த இறை வேதம் என்று ஒன்றை அறிமுகம் செய்கிறார்கள். அந்த இறைவேதத்தை ஆய்வு செய்கின்ற ஒவ்வொருவரும் அது அனைத்து மனித பலவீனங்களுக்கும் அப்பாற்பட்டு தனித் தன்மையோடு விளங்குவதை அறிந்து கொள்ளலாம். மேலும், அவ்வேதம் அதில் சந்தேகம் கொள்பவர்களைப் பார்த்து அதுபோன்ற ஒன்றை கொண்டு வருமாறு சவால் விடுகின்றது.

அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறைவேதம் என அறிமுகப்படுத்திய அல்குர்ஆன் ஆன்மீகத்தைப் பற்றி மட்டும் பேசவில்லை. மாறாக, வானவியல் (Astronomy), மருத்துவம் (Medicine), புவியியல் (Geography), இயற்பியல் (Physics), வேதியல் (Chemisty), விலங்கியல் (Zoology), தாவரவியல் (Botany), உயிரியல் (Biology), கருவியல் (Embryology), சமுத்திரவியல் (Oceanography), மண்ணியல் (Geology) உட்பட அனைத்து துறைகளைப் பற்றியும் மிக அழகாகவும், ஆணித்தரமாகவும் பேசுகின்றது. ஒவ்வொரு துறையைப் பற்றியும் அல்குர்ஆன் குறிப்பிடும் போதும் ஒவ்வொரு துறைசார்ந்த நிபுணர்கள், மாமேதைகள் குறிப்பிடுவதனை விட மிக அழகாகவும், துள்ளியமாகவும் பேசுகின்றது.

அருள்மறைக் குர்ஆன் குறிப்பிடுகின்ற இந்த அறிவியல் உண்மைகளையும், திருமறைக்குர்ஆன் இறங்கிய ஆறாம் நூற்றாண்டையும் இணைத்து ஒரு கணம் சிந்திக்கின்ற ஒவ்வொருவரும் நிச்சயமாக, இது மக்காவில் வாழ்ந்த, எழுதப்படிக்கத் தெரியாத முஹம்மது நபி (ஸல்) அவர்கள் சுயமாக பேசியது கிடையாது. பேசவும் முடியாது. மாறாக, இது முக்காலமும் உணர்ந்தவனான அருளாளன் அழ்ழாஹ்விடமிருந்து வந்த இறைசெய்திதான் என்பதை மிகத் தெளிவாகப் புரிந்துகொள்ள முடியும்.

மேலும், இந்த அத்தாட்சிகள் நிறைந்த அற்புத வேதமான அல்குர்ஆன் நிரூபிக்கப்பட்ட விஞ்ஞான உண்மையான பெருவெடிப்புக் கொள்கை பற்றி என்ன சொல்கின்றது என நோக்குவோம்.
பெருவெடிப்பிற்கு முந்திய பிரபஞ்சத்தின் நிலை




இப்பிரபஞ்சமானது கோள்கள், சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் போன்ற விண்பொருட்கள் தோன்றுவதற்கு முன்னர், அடர்ந்த சூடான வாயுக்களை கொண்டதாக, புகைப் படலமாய் இருந்தது. (The First There Minutes a Modern View of the Origin of the Univere Weinberg PP 94-105) இவ்விஞ்ஞான உண்மையை அருள்மறைக் குர்ஆன் பின்வருமாறு உறுதி செய்கின்றது.

“பின்னர் வானம் புகையாக இருந்த போது அதை நாடினான். விரும்பியோ, விரும்பாமலோ நீங்கள் கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்று அதற்கும், பூமிக்கும் கூறினான். விரும்பியே கட்டுப்பட்டோம் என்று அவை கூறின.” (அல்குர்ஆன் 41:11)
பெருவெடிப்புக் கொள்கை (Big Bang Theroy)

நாம் இன்று பார்க்கின்ற இப்பிரபஞ்சமானது கிட்டத்தட்ட சுமார் பதினான்கு பில்லியன் வருடங்களுக்கு முன்னர், மனித கண்களுக்குப் புலப்படாத அடர்த்தி குறைந்த வாயுக்களும், அண்டத் துகள்களும் இணைந்து புகைப்படலமாய் (Nebula) காட்சியளித்தது. மேலும், கடினமான பொருட்கள் யாவும் ஒன்று சேர்ந்து ஒரு சக்தி திரலாக (Ball of Energy) காணப்பட்டன. இவையனைத்தும் சேர்ந்து இப்பிரபஞ்ச புகையுரு கோளத்தின் மத்தியில் நெருப்புப் பிண்டமாக காட்சியளித்தன.

இப்பொருட்களின் வெப்பநிலையானது மனிதன் கற்பனை பண்ண முடியாத அளவிற்கு அதிகமாகக் காணப்பட்டது. இப்பொருட்கள் இரசாயன மாற்றத்தாலும், அழுத்தம் மற்றும் வானியல் காரணத்தினாலும் அணுக்கள் சிதைவடைந்து திடீரென வெடித்துச் சிதறி இப்பிரபஞ்சம் முழுவதும் ஒரே தூசு மண்டலமாய் பரவியது. புகை மண்டலமாய் காட்சியளித்த வாயுக்கள் மற்றும் அண்டத் துகள்கள் ஈர்ப்பு விசையின் காரணமாக படிப்படியாக பெரிதாகி நாம் வாழுகின்ற இப்பூமி மற்றும் சூரியன், சந்திரன், உடுக்கூட்டங்கள் மற்றுமுள்ள கோள்களாகவும் மாறியது என்பதுவே பெருவெடிப்புக் கொள்கையாகும்.

இப்பெருவெடிப்புக் கொள்கையானது 1973ம் ஆண்டு விஞ்ஞானிகளால் நிரூபிக்கப்பட்டது. இப்பிர பஞ்சத்தின் உருவாக்கம் பற்றிய விஞ்ஞான உண்மைகளை முதன் முதலில் வெளியிட்டவர்கள் எட்வின் பி ஹுப்பிள் (Edvin P Hubble), ஜோஜஸ் காமோவ் (Geoges Gomow), ஜோஜஸ‌ லமேட்ரி (Geoges Lamaitro) என்கின்ற விஞ்ஞானிகள் ஆவார்கள். பெருவெடிப்புக் கொள்கை என்கின்ற விஞ்ஞான உண்மை விஞ்ஞானிகளால் நிரூபிக்கப்படும் வரை பிரபஞ்சத்தின் தோற்றம் தொடர்பாக பல்வேறு கற்பனைகளையும், கட்டுக்கதைகளையும் அடிப்படையாகக் கொண்டு பல்வேறு நூற்கள் வெளியிடப்பட்டன.

ஆனால், அருள்மறைக் குர்ஆனோ 1400 ஆண்டுகளுக்கு முன்னரே இன்றைய விஞ்ஞானிகள் கூறுகின்ற ‘பெருவெடிப்பு’ என்கின்ற நிகழ்வின் மூலமான உலக உருவாக்கம் பற்றி இந்த நூற்றாண்டின் மாபெரும் விஞ்ஞான மேதை பேசுவதனை விட மிகத்துள்ளியமாகவும், அழகாகவும் குறிப்பிடுகின்றது. இதனை அற்புத இறைமறை பின்வருமாறு கூறுகின்றது.

“வானங்களும், பூமியும் இணைந்திருந்தன என்பதையும், அவ்விரண்டையும் நாமே பிரித்தோம் என்பதையும், உயிருள்ள ஒவ்வொரு பொருளையும் தண்ணீரிலிருந்து அமைத்தோம் என்பதையும் (நம்மை) மறுப்போர் சிந்திக்க வேண்டாமா? அவர்கள் நம்பிக்கை கொள்ள வேண்டாமா?” (அல்குர்ஆன் 21:30)

இப்பெருவெடிப்புக் கொள்கை கண்டுபிடிக்கப்படும் வரை படைப்பாளனான இறைவனை மறுக்கும் நாத்திக சிந்தனையானது இப்பிரபஞ்சத்திற்கு ஆரம்பமும் முடிவும் இல்லை (நிரந்தர பிரபஞ்ச திட்டம்) என வாதிட்டு வந்தது. பெருவெடிப்புக் கொள்கை விஞ்ஞானிகளால் நிரூபிக்கப் பட்டதைத் தொடர்ந்து நிரந்தர பிரபஞ்சத்திட்டம் என்கின்ற வாதம் புதைகுழிக்கு அனுப்பப்பட்டது.

மேலும், பிரபஞ்சத்திற்கு தோற்றம் மற்றும் ஆரம்பம் இருந்தது என்பது பிரபஞ்சம் படைக்கப்பட்டது என்பதனை உணர்த்துகின்றது.


படைக்கப்பட்ட பொருள் உண்டு எனில் நிச்சயமாக படைப்பாளன் இருக்க வேண்டும் என்பதும் நாத்திக சிந்தனை என்கின்ற போலி வாதத்தை தகர்தெறிந்து, இப்பிரபஞ்சத்தைப் படைத்து பரிபாலித்து, ஆட்சி செலுத்துகின்ற அழ்ழாஹ்வின் வல்லமையையும், ஆற்றலையும் பறைசாற்றி நிற்கின்றது. இப்பெருவெடிப்புக் கொள்கையைப் பற்றி கலிபோனியா பல்கலைக்கழக பேராசிரியர் ‘ஜோர்ஜ் ரபல்’ கூறுகையில், ‘பெருவெடிப்பின் காரணமாக பிரபஞ்சமானது பலகோடி ஆண்டுகளுக்கு முன்னால் தோன்றியது என்பதை இன்றைய நவீன விஞ்ஞான உண்மைகள் பறைசாற்றுகின்றன.’ என்று கூறுகின்றார்.

இறுதியாக, இம்மாபெரும் விஞ்ஞான உண்மைகளை அறியாமை இருளில் மூழ்கிக் கிடந்த அரேபியப் பாலைவனத்தில் வாழ்ந்த ஒரு மனிதர் சுயமாக கூறியதாக இருக்க முடியாது என்பதையும், முஹம்மது நபி (ஸல்) அவர்கள் அழ்ழாஹ்வின் தூதர்தான் என்பதையும், அருள்மறைக்குர்ஆன் இறைவேதம்தான் என்பதையும் இதுபோன்ற விஞ்ஞான கண்டுபிடிப்புக்கள் இன்றைய நவீன உலகிற்கும், நாத்திக சித்தாந்தத்திற்கும் பறைசாற்றிக் கொண்டிருக்கின்றன.


Popular Posts

Popular Posts