ரஜப் மாதம் வந்து விட்டால் பெரும்பாலான பள்ளிகளில் நபி (ஸல்) அவர்கள்
சென்ற மிஃராஜ் என்ற விண்ணுலகப் பயணத்தைப் பற்றி பல விதமான பயான்கள்
நடைபெறும். அதில் பெரும்பாலும் பொய்யான கற்பனைக் கதைகள், ஆதாரமற்றச்
செய்திகள், பலவீனமான செய்திகள் என பல வகைகள் நிறைந்திருக்கும். அவற்றில்
ஒன்று தான் நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வை மிஃராஜ் பயணத்தின் போது நேரடியாகப்
பார்த்தார்கள் என்பது.
நபி (ஸல்) அவர்கள் மிஃராஜ் என்ற பயணம் மேற்கொண்டு அங்கு
அல்லாஹ்விடம் உரையாடியது உண்மையான, திருக்குர்ஆன், ஆதாரப்பூர்மான
ஹதீஸ்களின் செய்தியாகும். ஆனால் நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வை திரையின்றி
நேரடியாகப் பார்த்தார்கள் என்று கூறுவது தவறான செய்தியாகும். மேலும்
திருமறைக் குர்ஆன் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களுக்கு எதிரான கருத்தாகும்.
