மஸ்ஜித்தை மூடமுடியாது! கொழும்பு பிரதி பொலிஸ் மா அதிபர்


மஸ்ஜித்தை மூடமுடியாது: இன்றைய வெலிக்கடை கூட்டத்தில் கொழும்பு பிரதி பொலிஸ் மா அதிபர்


ஏ.அப்துல்லாஹ்: 
ராஜகிரிய, ஜாமியுல் தாருள் ஈமான் பள்ளிவாசல் தொடர்பான விசேட கூட்டம் ஒன்று கொழும்பு பிராந்தியத்துக்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் தலைமயில் இன்று காலை 03.08.2012-வெலிக்கடையில்   இடம்பெற்றுள்ளது. அதில் மஸ்ஜிதின் இருப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பெளத்த குருக்கள் தலைமையிலான குழுவினரும் , ஜாமியுல் தாருள் ஈமான் பள்ளிவாசல் நிர்வாகம் , முஸ்லிம் அரசியல் வாதிகள் ஜம்இயதுல் உலமாவின் பிரதிநிதிகள் ஆகியோரும் கலந்து கொண்டுள்ளனர்.
அந்த கூட்டத்தில் பெளத்த குருக்கள் தலைமையிலான குழுவினர் மஸ்ஜித்தை உடனடியாக மூடவேண்டும் என்று தெரிவித்துள்ளனர் , இருந்தபோதும் கொழும்பு பிராந்தியத்துக்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் இந்த மாதம் முஸ்லிம்களின் புனித ரமழான் மாதம் அவர்களின் எந்த வணக்க வழிபாட்டுக்கும் இடையூறை ஏற்படுத்த அனுமதிக்க முடியாது. மஸ்ஜித்தை மூடமுடியாது என்று தெரிவித்துள்ளார்.
இதை ஏற்க மறுத்த பெளத்த குழுவினர் தமது வாதத்தை தொடர்ந்தும் முன்வைத்துள்ளனர் . இதன் போது மீண்டும் வலியுறுத்தியுள்ள பிரதி போலீஸ் மா அதிபர் எந்த வகையிலும் மக்களுக்கு இடையூறாக இல்லாத மஸ்ஜிதை மூட அனுமதிக்க முடியாது , குறித்த மஸ்ஜித் தொடர்பாக போலீசில் எந்த முறைப்பாடுகளும் இல்லை , மஸ்ஜித் தொடர்ந்து இயங்கும் என்று தெரிவித்துள்துடன் ரமழான் மாதம் முடித்ததும் (எதிர்வரும் 25 ஆம் திகதிக்கு பின்னர்) இது தொடர்பான மேலதிகமான விடயங்கள் பற்றி ஆராயப்படும் என்றும் தெரிவித்துள்ளார் .
நேற்று இரவு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ள நிலையில் ராஜகிரிய, ஜாமியுல் தாருள் ஈமான் பள்ளிவாசலுக்கு சென்ற அகில இலங்கை ஜம்இயதுல் உலமாவின் பிரதிநிகள் முன்னிலையில் பள்ளி திறக்கப்பட்டு, தராவிஹ் தொழுகைகளும் இடம்பெற்றுள்ளது. மஸ்ஜித் திறக்கப்பட்டவுடன் மஸ்ஜிதுக்கு முன் கூடிய ஒரு பெளத்த குழுவினர் தொழுகைக்கு எதிர்ப்பு தெரிவித்து குறித்த பள்ளிசாலை சூழ்ந்துகொண்துள்ளனர் . அவர்கள் இடம்பெற்ற தொழுகைக்கு எதிர்ப்பை தெரிவித்ததுடன் பள்ளிக்கு வந்தவர்களை எல்லாம் படம் எடுத்துள்ளனர் . அதேவேளை முஸ்லிம் தரப்பில் அதற்கு எவரும் எதிர்ப்பை வெளிப்படுத்தவில்லை . குறித்த சமையம் பாராளுமன்ற உறுப்பினர் அஸ்வர் , ஐக்கிய தேசிய கட்சியின் மேல் மாகாண சபை உறுப்பினர் முஜீபுர் ரஹ்மான் ஆகியோரும் அந்த சமயம் அங்கு சென்றுள்ளனர் .தற்போது பள்ளிக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது . தொழுகைக்காக தொடர்ந்தும் இயங்கி வருகிறது .
இது தொடர்பாக lankamuslim.org க்கு தகவல் வழங்கிய அகில இலங்கை ஜம்இயதுல் உலமாவின் துணை செயலாளர் தாஸீம் மௌலவி . நாங்கள் நேற்று போலீஸ் பாதுகாப்பு மத்தியில் மஸ்ஜிதை திறந்து தொழுகை நடாத்தினோம் . அதற்கு ஒரு குழுவினர் எதிர்ப்பை தெரிவித்து கொண்டிருந்தனர். அங்கு வருபவர்களை எல்லாம் படம் எடுத்துகொண்டும் இருந்தனர் என்று தெரிவித்தார் . குறித்த மஸ்ஜித் சகல சட்ட ஆவங்களையும் கொண்டுள்ளது , அது சட்டப்படியே இயங்குகிறது. வக்பு சபையிலும் பதிவு செய்யப் பட்டு அந்த மஸ்ஜிதின் நிர்வாகிகள் கூட வக்பு சபையில் தங்களை பதிவு செய்து அங்கீகாரம் பெற்றுள்ளார்கள் . மஸ்ஜித் தொடர்ந்தும் அங்கு இயங்கும் அதற்கு போலீசார் முழு ஒத்துழைப்பை வழங்குகிறார்கள் . நேன்பின் பின்னரும் எந்த தடைகளும் இன்றி இன்ஷா அல்லாஹ் இயங்கும் . இது தொடர்பான சட்ட நடவடிக்கைகள் தொடர்பாக ஜம்இயதுல் உலமாவின் விசேட குழு ஆராய்ந்து வருகிறது .எந்த சிக்கலும் இன்றி மஸ்ஜித் தொடர்ந்தும் இயங்க நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டுவருகிறது என்று தெரிவித்தார் .
இதன்போது சட்ட நடவடிக்கை என்றால் அத்துமீறுபவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படுமா ? என்று கேட்டமைக்கு இல்லை , நீதிமன்றம் செல்லாமல் சட்ட ஆவணங்களை கொண்டு இலகுவாக எமது உரிமைகளை நிலைநாட்ட முடியும் அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகிறது என்று தெரிவித்தார் .
அதேவேளை சிங்கள பிரதேசங்களிலுள்ள பள்ளிவாசல்களுக்கு எதிராக செயற்படுவர்களுக்கு எதிராக இதுவரை ஏன் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை என ஐக்கிய தேசிய கட்சியின் மேல் மாகாண சபை உறுப்பினர் முஜீபுர் ரஹ்மான் கேள்வி எழுப்பியுள்ளார் .

0 Response to "மஸ்ஜித்தை மூடமுடியாது! கொழும்பு பிரதி பொலிஸ் மா அதிபர்"

Popular Posts

Popular Posts