பெருநாள் தொழுகை

பெருநாள் தொழுகை


பெருநாள் தொழுகை

Post image for பெருநாள் தொழுகை
மாதம் ஒரு பண்டிகை நாள். ஊருக்கொரு திருநாள். ஒவ்வொரு குடும்பத்திற்கும் அவரவர் நேசிக்கும் அவ்லியாக்களுக்கொரு பெருநாள் என எந்த நன்மையும் இல்லாத பற்பல பெருநாட்களை கொண்டாடி வரும் இன்றைய முஸ்லிம்களுக்கு இறைத்தூதர் நபி அவர்கள் காட்டிச் சென்ற பெருநாட்களை தெளிவாக அறிந்து கொள்வோம்.


கடமையான ஃபித்ரா

கடமையான ஃபித்ரா


கடமையான ஃபித்ரா

Post image for கடமையான ஃபித்ராபசி தாகத்துடன் நோன்பு வைத்த நாம் பெருநாளுக்கு முன் தான தர்மத்தைக் கொண்டு ஆரம்பிக்க வேண்டும். அன்று எவரும் பசி பட்டினியுடன் இருக்கக்கூடாது. அன்று நோன்பு வைப்பதும் தடுக்கப்பட்டது என நபி  அவர்கள் அறிவுறுத்தினார்கள்.நபி  அவர்கள் அழைப்பாளர்களை மக்காவின் தெருக்களுக்கு அனுப்பி “தெரிந்து கொள்ளுங்கள்! நிச்சயமாக ஸதகத்துல் ஃபித்ர் ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கடமையாகும்” என்ற வாசகத்தை கூறச் சொன்னார்கள். ஆதாரம்: திர்மிதி
நோன்பில் நிகழ்ந்த தவறிலிருந்து தூய்மைப்படுத்துவதற்காகவும் ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும் என்பதற்காகவும் நபி  அவர்கள் ஸதகாத்துல் ஃபித்ரைக் கடமையாக்கினார்கள். ஆதாரம்: அபூதாவூத்
இறைவனையே இழிவுபடுத்தும்  ஒரு இறைவேதம் - பாகம் -02

இறைவனையே இழிவுபடுத்தும் ஒரு இறைவேதம் - பாகம் -02

கர்த்தருக்கு ஓய்வு தேவையா?

பலவீனமாகவே படைக்கப்பட்ட மனிதன் அளவுக்கு மீறிய வேலைகளை செய்வதால் அவனுக்கு கலைப்பு ஏற்படுவது இயல்பான ஒன்று. அதே போன்று அவனது பலவீனத்தின் காரணமாக அவனுக்கு ஓய்வும் உறக்கமும் அவசியமான ஒன்றாகிவிட்டது.

ஆனால், இந்த உலகம் மற்றும் இந்த அண்டசராசரங்கள் அனைத்தையும் படைத்து, பரிபாலித்து, இரட்சித்து வரும் ஏக இறைவனாகிய கர்த்தருக்கு இது போன்று பலவீனங்கள் இருக்குமா என்றால் கண்டிப்பாக இருக்காது - இருக்கவும் முடியாது. காரணம் பலவீனங்களுக்கெல்லாம் அப்பாற்பட்ட மகா சக்தி பொருந்தியவராகத்தான் கர்த்தர் இருப்பார் - இருக்க முடியும். இதில் எவருக்கும் எந்தவிதத்திலும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. அப்படியே எவரேனும் கர்த்தருக்கு கலைப்பு ஏற்படும் என்று கூறுவாரேயானால் அவர் சர்வ வல்லமைப் பொருந்திய கர்த்தரை குறைத்து மதிப்பிட்டுவிட்டார் என்பது தான் அர்த்தமாக இருக்க முடியும்.
கல்கி அவதாரம்

கல்கி அவதாரம்

இந்துக்களே,இது ஒரு இனிப்பான செய்தி!!!

ஹிந்துக்களின் வேதாகமத்தில் சொல்லப்படும், கடைசி அவதாரமான கல்கி, இறைதூதர் அப்துல்லாஹ்வின் மகன் முஹம்மதாவார்.

இதை நாம் சொல்லவில்லை, சமீபத்தில் ஹிந்தி மொழியில் வெளிவந்த புத்தகத்தின் சாராம்சமாகும். இந்த நூல் வெளியானபின், இந்தியாவே ஒரு கலங்கு கலங்கி விட்டது என்றால் மிகையல்ல. இதை ஒரு இஸ்லாமியர் எழுதியிருந்தால், அவர் இந்நேரம் சிறையிலடைக்கப்பட்டிருப்பதோடு, அந்த புத்தகத்தையும் தடை செய்திருப்பார்கள்.

ஆனால், கல்கி அவதாரத்தைப் பற்றிய இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டு, “பிரபஞ்ச இறைத்தூதின் வழிகாட்டி” என்னும் இந்த புத்தகம், வங்காளத்தில் இருந்து வெளிவந்ததாகும். இது அலஹாபாத் பல்கலைக்கழகத்தில் ஒரு முக்கிய அத்தாட்சியாக இருக்கிறது. இதை எழுதியது, தலைசிறந்த ஆய்வாளரான பண்டிட் வைத் ப்ரகாஷ் என்னும், ஒரு பிராமண சமஸ்கிருத பண்டிட்டாவார்.
இந்து புரோகிதர் இஸ்லாத்தில் இணைந்தார்

இந்து புரோகிதர் இஸ்லாத்தில் இணைந்தார்



இந்து புரோகிதர் இஸ்லாத்தில் இணைந்தார்
சுஷில் குமார் ஷர்மா எனும் அப்துர் ரஹ்மான் ஹரியானா மாநிலத்தில் உள்ள அமதல்பூர் எனும் குக்கிராமத்தை சேர்ந்தவர். அக்கிராமத்தில் உள்ள கோவிலில் மத சடங்குகளை செய்யும் இந்து வைதீக குடும்பத்தில் பிறந்தவர்.மே மாதம்12,2002 அன்று சவூதி அரேபியாவின் ஜித்தா நகருக்கு பணி நிமித்தமாக வந்தார்.
ஜித்தாவில் கம்பெனி இருப்பிடத்தில் தங்கி இருந்த போது உடன் வேலை செய்யும் ஒரு நண்பர் சில இஸ்லாமிய புத்தகங்களை கொடுத்துள்ளார். பிறகு சுஷில் குமார் சர்மா ரியாத் நகரில் உள்ள நௌரா மகளிர் பல்கலைகழகத்திற்கு பணி மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
அப்துர் ரஹ்மான் கூறுகிறார்.
நௌரா மகளிர் பல்கலைகழகத்தில் கம்பெனி கேம்ப்-ல் இஸ்லாத்தை பற்றி கூறிய நிறைய இந்தியா மற்றும் பாகிஸ்தானை சேர்ந்த பல நண்பர்களை சந்தித்தேன். அவர்கள் ஒய்வு நேரத்தில் இறைத்தூதர்கள் பற்றியும், இறைத்தூதர் முஹம்மது(ஸல்) அவர்களது பொன்மொழிகள் பற்றியும் கூறுவார்கள்
எனது இதயம் நடுக்கத்திற்கு உள்ளானது. எனது மரணத்திற்கு பிறகு எனது நிலை என்னவாகும்? என்னுடைய பாவங்கள் என்னை நரகத்திற்கு கொண்டு சேர்க்குமா? என்று என்னை நானே கேட்டு கொண்டேன்.நிராகரிப்பாளர்கள் மற்றும் பாவிகளின் மண்ணறை வேதனை பற்றி நான் மிகவும் அச்சப்படேன்.
தூக்கமின்றி இரவுகளை கழித்தேன். இஸ்லாத்தை தழுவவும், முஹம்மது நபி(ஸல்) அவர்களை உண்மையாக பின்பற்றுபவனாகவும் மாற இதுவே சரியான தருணம் என உணர்ந்தேன்.என்னுடைய வாழ்வின் உண்மையின் தேடுதல் இஸ்லாத்தில் முழுமை அடைந்தது.

இன வேறுபாடுகள் இல்லாமல் சகோதரத்துவத்தை பேணும் பண்பே இஸ்லாத்தை நோக்கி என்னை ஈர்த்தது.
அல் ஃபத்தாவில் உள்ள இஸ்லாமிய அழைப்பகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் என்னை கலிமா கூற இமாம் அவர்கள் அழைத்தார்.
“அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரிய இறைவன் வேறு யாரும் இல்லை. முஹம்மது (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் திருத்தூதர் ஆவார்” என்று முழுமனதுடன் கூறினேன்.இமாம் அவர்கள் அப்துர் ரஹ்மான் என்று எனது பேரை மாற்றி கொள்ள ஆலோசனை வழங்கினார்கள்.நானும் உடனே முழுமனதுடன் ஒப்புக்கொண்டேன்.
எனக்கு மனைவியும் 16 வயதில் மற்றும் 7 வயதில் இரு மகன்களும் உள்ளனர். இஸ்லாமிய தூதை என்னுடைய குடும்பத்திற்கு கொண்டு சேர்க்கும் பொறுப்பு என் முன்னால் இருக்கிறது. நான் தொலைபேசி மூலம் இஸ்லாத்தை தழுவியதை குடும்பத்தாரிடம் தெரிவித்தேன். அவர்கள் முதலில் நம்பவில்லை. என்னுடைய மனைவி நான் விடுமுறைக்கு இந்தியா வரும் போது முடிவு செய்வதாக கூறுகிறாள்.
ஒவ்வொரு நாளும் அல்லாஹ்விடம் என குடும்பத்தாருக்கு நேர்வழி காட்டவும் அவர்களுடைய இதயங்களை இஸ்லாத்தின் பால் இணக்கமாக்கவும் கண்ணீரோடு அழுது பிரார்த்தித்து கொண்டே இருக்கிறேன்.
ஊர்மக்கள், உறவினர்கள், குடும்பத்தாரின் எதிர்ப்புகளை நான் சந்திக்க வேண்டியிருக்கும்.ஆனால் அவற்றை எதிர்கொள்ள நான் உறுதியாக இருக்கிறேன். “அல்லாஹ் எனக்கு உதவி செய்வான்” என உறுதியாக நம்புகிறேன்.
“இம்மை மறுமையில் வெற்றி பெற இஸ்லாத்தை தழுவுங்கள் என்று முஸ்லிமல்லாத சகோதரர்களை பார்த்து அப்துர் ரஹ்மான் இறுதியாக அனைவருக்கும் அழைப்பு விடுத்தார்.”
-சவுதிகேசட் நியுஸ்
தமிழாக்கம்: அப்துல்லாஹ் முஹம்மது
tntj.net
http://onlyoneummah.blogspot.com/2010/11/blog-post_10.htm

ஏபல் சேவியர்! சத்தியபாதையை ஏற்றார்


சத்தியபாதையை ஏற்றார் ஏபல் சேவியர்!

புகழ்பெற்ற கால்பந்தாட்ட வீரர் ஏபல் சேவியர் கடந்தவாரம் தன்னுடைய அமீரக பயணத்தின்போது இஸ்லாம் மார்க்கத்திற்கு மாறினார். ஆப்பிரிக்க நாடான மொசாம்பிக்கில் பிறந்த இவர் லாஸ் ஏஞ்சல்ஸ் கேலாக்ஸி, போர்ச்சுகல், இத்தாலி, ஸ்பெயின், நெதர்லாந்து, இங்கிலாந்து, துருக்கி, ஜெர்மனி மற்றும் அமெரிக்கா அணிக்காகவும் விளையாடியவர். மேலும் தன்னுடைய 38வது வயதில் கால்பந்தாட்டத்திலிருந்து ஓய்வுப்பெறப்போவதாகவும் அறிவித்துள்ளார். ஓய்வு பெறுவது வருத்தமாக இருந்தாலும் என்னுடைய வாழ்கையின் புதிய கட்டத்திற்கு செல்வது மகிழ்ச்சியளிப்பதாகவும் தெரிவித்துள்ளார். அவர் தன்னுடைய பெயரை பைசல் சேவியர் என்று மாற்றியுள்ளார். இஸ்லாமிய மார்க்கமானது அமைதி, சமத்துவம், சுதந்திரம் மற்றும் நம்பிக்கை அளிப்பதாகவும் இவைகள் அடிப்படையில் முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் தெரிவித்துள்ளார்.

தற்போது இவர் ஐ.நா.வின் சார்பில் பல்வேறு சேவைகளில் ஈடுபட்டுள்ளார்.

தகவல்:
அல் அராபிய

தமிழில் : அபு இஸாரா 
கேள்வி எண் 1.
குர்ஆனின் பல பிரதிகள் உஸ்மான் (ரலி) அவர்கள் காலத்தில்; உஸ்மான் (ரலி) அவர்களால் எரிக்கப்பட்டது. குர்ஆன் இறைவனால் அருளப்பட்டதல்ல. மாறாக உஸ்மான் (ரலி) அவர்களால் தொகுப்பட்ட பிரதிதானே தற்போதுள்ள குர்ஆன்?.


பதில்:
இஸ்லாத்தின் மூன்றாவது கலிபா உஸ்மான் (ரலி) அவர்கள் காலத்தில் ஒன்றுக் கொன்று முரண்பட்ட பல குர்ஆனின் பிரதிகளை தொகுத்து ஒரே குர்ஆனாக உருவாக்கப் பட்டதுதான் இன்றைய அருள்மறை என்பது, குர்ஆனை பற்றி உலவுகின்ற கட்டுக்கதைகளில் ஒன்று. எந்த அருள்மறை முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ்வால் இறக்கியருளப்பட்டதோ அதே அருள்மறைதான், இஸ்லாமிய உலகத்தினரால் பெரிதும் போற்றி மதிக்கப்படும் அல்லாஹ்வின் வேதமாக இன்றும் இவ்வுலகில் திகழ்கின்றது. இன்றைக்கு இருக்கும் அருள்மறை குர்ஆன் அல்லாஹ்வின் தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் நேரடி கண்காணிப்பில் தொகுக்கப்பட்ட ஒன்று. கட்டுக்கதைக்கான ஆணிவேர் எது என்று நாம் இப்போது ஆய்வு செய்வோம்.



விவேகானந்தர் பார்வையில் இஸ்லாம்

விவேகானந்தர் பார்வையில் இஸ்லாம்


விவேகானந்தர் பார்வையில் இஸ்லாம்

நன்றி : மதுக்கூர் இராமலிங்கம்
சுவாமி விவேகானந்தர் ஒரு உண்மையான ஆன்மீகவாதி. உலகின் அனைத்து மதங்களின் உன்னதங்களையும், போற்றிப் பாராட்டியவர். ஆனால் இன்று மதவெறியைக் கிளறி நாட்டை சுடுகாடாக்க முயலும் இயக்கத்தினர் தனது பிரச்சாரத்திற்கு விவேகானந்தரை பயன்படுத்திக் கொள்கிறது. இது விவேகானந்தரை இழிவுபடுத்துவது ஆகும்.

இஸ்லாம் மதம் குறித்தும், முகலாய மன்னர்களின் ஆட்சி குறித்தும் அவர்கள் பொய்மூட்டைகளை அவிழ்த்து விடுகின்றனர். ஆனால் விவேகானந்தர் இஸ்லாம் மதம் குறித்து மிக உயரிய எண்ணம் கொண்டு இருந்தார்.

''சமத்துவத்தைப் பற்றி ஏதேனும் ஒரு மதம் பாராட்டத்தக்க முறையில் சொல்லியிருந்தால் அது இஸ்லாம் மட்டுமே என்பது தான் எனது அனுபவம்.''

முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், கம்யூனிஸ்டுகள் ஆகிய மூவரும் தான் எங்கள் பிரதான எதிரிகள் என்று கூறும் அவர்கள் விவேகானந்தர் பெயரை உச்சரிக்கக் கூட தகுதியற்றவர்கள் என்பதை இதன் மூலம் உணரலாம்.

இஸ்லாமிய மன்னர்கள் இந்துக்களைச் சித்ரவதை செய்து பலவந்தமாக மதம் மாற்றினர் என்ற பொய்யை வாய் வலிக்காமல் சொல்லி வருகின்றார்கள். ஆனால் விவேகானந்தர்..,

''பாமர மக்களுக்கு இஸ்லாம் ஒரு செய்தியாக வந்தது. முதல் செய்தி சமத்தவம், ஒரே மதம் தான் உள்ளது.., அது அன்பு, வம்சம், நிறம்.. அல்லது வேறு எதுபற்றியும் எந்தக் கேள்வியும் கிடையாது'' என்று கூறினார்.

ஜாதியக் கொடுமைகளின் வெப்பம் தாங்காமல் தான் பெரும்பகுதி மக்கள் இஸ்லாமியர்களாக மதம் மாறினார்கள் என்பதை விவேகானந்தர் இதயப்பூர்வமாக ஒப்புக் கொண்டிருக்கிறார் என்பதையே இது காட்டுகின்றது.

கேரள மாநிலம் மலபார் பகுதியைச் சேர்ந்த ஏராளமாக தலித் மக்கள் இஸ்லாம் மதத்தைத் தழுவினார்கள். இதைக் கண்ட சனாதனவாதிகள் எதிர்ப்பு கிளப்பிய போது விவேகானந்தர் அவர்களுக்கு அமைதியாகப் பதில் சொன்னார்..,

ஒலிம்பிக்ஸ் 2012 - இஸ்லாமை நோக்கி மக்கள்

பெங்களூர் - ஒலிம்பிக்ஸ் 2012 - இஸ்லாமை நோக்கி மக்கள்


நம் அனைவர் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமீன்...

பெங்களூர் மாநகரம். 

1. தன் கார் பழுதடைந்ததால் ஆட்டோவுக்காக காத்திருக்கின்றார் அந்த ஹிந்து சந்நியாசி. ஆட்டோ வருகின்றது. உட்காரும்போதே அவரை ஆச்சர்யம் தொற்றிக்கொள்கின்றது. தன் கண்ணெதிரே இருந்த இஸ்லாம் குறித்த துண்டுப்பிரசுரங்களை ஆர்வமாக எடுத்து படிக்க ஆரம்பிக்கின்றார். வியப்புடன் அந்த வார்த்தைகள் அவரிடம் இருந்து வெளிப்படுகின்றன "நீங்கள் எப்படியெல்லாம் இஸ்லாமை பரப்புகின்றீர்கள் என்பதை ஆச்சர்யத்துடன் பார்க்கின்றேன்". 

இஸ்லாம் குறித்து மேலும் அறிந்துக்கொள்ளும் ஆர்வம் அவருக்கு மிகுந்துவிட, அந்த ஆட்டோ ஓட்டுனரான ஹபிஸ் முஹம்மத் சாதிக்கிடம் "குர்ஆன் அர்த்தங்களின் கன்னட மொழிப்பெயர்ப்பை" அனுப்புமாறு கேட்டுக்கொள்கின்றார். 

2. இதே போன்றே மற்றொரு நிகழ்வை விவரிக்கின்றார் மற்றொரு ஆட்டோ ஓட்டுனரான பாஷா. அன்று ஹெப்பலில் (Hebbal) இருந்து ஒரு வாடிக்கையாளரை ஏற்றிக்கொண்டு ஒரு தொலைத்தூர பயணத்திற்கு ஆயத்தமாகின்றார் பாஷா. பயணத்தின் போது அந்த ஆட்டோவில் இருந்த இஸ்லாம் குறித்த அனைத்து பிரசுரங்களையும் படித்த அந்த கஸ்டமர், தன் வீட்டு முகவரியை கொடுத்து குர்ஆன் அனுப்ப முடியுமா என்று கேட்டுக்கொள்ள பாஷாவிற்கு மகிழ்ச்சி தாளவில்லை.

அடுத்த நாளே குர்ஆன் அடங்கிய பரிசுப்பெட்டகத்தை அந்த கஸ்டமரின் வீட்டிற்கு சென்று கொடுக்கின்றார் பாஷா. புத்தகங்களுக்கு விலையாக ஆயிரம் ருபாய் நோட்டை எடுத்து அந்த வாடிக்கையாளர் நீட்ட நெகிழ்ச்சியுடன் கூறினார் பாஷா, "இல்லை சார். எனக்கு வேண்டாம். மறுமை நாளில் இதற்குரிய வெகுமதி எனக்கு கிடைத்தால் போதும்". 

பாஷாவின் பதில் ஒரு கணம் அந்த வாடிக்கையாளரை திகைக்க வைக்க தன் ஆசையை வெளிப்படுத்தினார் பாஷா, "என்னுடைய ஒரே ஒரு வேண்டுகோள், குர்ஆனை நீங்கள் படித்து புரிந்துக்கொண்டு உங்கள் குடும்பத்தினருக்கும் இந்த செய்தியை ஏற்றிவைக்க வேண்டும் என்பதுதான். உங்கள் நண்பர்களுக்கும் குர்ஆனை அறிமுகப்படுத்தி அவர்களுக்கும் நான் இத்தகைய பரிசுப்பெட்டகத்தை கொடுக்கும் நிலை ஏற்பட்டால் நான் மிகுந்த மகிழ்ச்சியடைவேன்".

3. வெள்ளரா சந்திப்பில் நிசார் அஹமது அவர்களுக்கு ஏற்பட்ட அனுபவம் சற்றே கிலியூட்டக்கூடியது. அவருடைய ஆட்டோவை பின்தொடர்ந்து வந்த போலிஸ் ரோந்து வாகனம் அவரை மடக்கியது அந்த சந்திப்பில் தான். 

முகத்தில் கலவரத்துடன் என்னவோ ஏதோ என்று பயந்து விசாரிக்க சென்ற அஹமதுவிடம் அந்த ரோந்து வாகனத்தில் இருந்த போலீஸ்காரர், "எனக்கு 'இஸ்லாம் குறித்த தவறான புரிதல்கள்' என்ற புத்தகத்தை கொடுக்க முடியுமா? பாதுகாப்பு பணியில் ஒருமுறை ஈடுபட்டிருந்த போது அதனை பார்த்திருக்கின்றேன். அன்றிலிருந்து அந்த புத்தகத்தை தேடிக்கொண்டிருக்கின்றேன். இன்று உங்கள் ஆட்டோவில் அந்த புத்தகத்தை கண்டவுடன் உங்களை பின்தொடர ஆரம்பித்துவிட்டேன்" என்று காரணத்தை கூறினார். 

மகிழ்ச்சியுடன் அந்த புத்தகத்தை அதிகாரிக்கு பரிசளித்துவிட்டு நடையை கட்டினார் நிசார் அஹமது. 

இந்த நிகழ்வுகள் உங்களில் பலருக்கு வியப்பையும், இவையெல்லாம் என்ன என்று அறியும் ஆர்வத்தையும் கொடுத்திருக்கலாம். நமக்கே இப்படியென்றால், இந்த பணியை செய்யும் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு எப்படியிருக்கும்? 

சென்ற மாதத்தின் பிற்பகுதியில் பெங்களூர் நகரின் முஸ்லிம் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு ஒரு இனம் புரியாத பரபரப்பும், மகிழ்ச்சியும் தொற்றிக்கொண்டிருந்தது. சும்மாவா என்ன? இதுநாள் வரை வாடிக்கையாளர்களை ஏற்றி சென்றுக்கொண்டிருந்த அவர்களது வாகனம், இனி இறைச்செய்திகளையும் தாங்கி செல்லப்போகின்றது. 

இந்த செயல்திட்டத்திற்கு பின்னால் இருப்பது "சலாம் சென்டர்" என்ற அமைப்பு. இவர்களுடைய அணுகுமுறை நிச்சயம் புதுமையானது, புரட்சிகரமானது. இஸ்லாம் குறித்த தவறான புரிதலை களையவும், இஸ்லாமை எடுத்துக் கூறவும் ஆட்டோக்களில் சிறிய அளவிலான இஸ்லாமிய நூலகத்தை அமைத்து அழைப்பு பணியை மேற்கொண்டுள்ளது இந்த அமைப்பு. 

ஓட்டுனருக்கு பின்புறம், அழகாக வடிவமைக்கப்பட்ட ஸ்டாண்டில், இஸ்லாம் குறித்து பல்வேறு தலைப்புகளில் துண்டுப்பிரசுரங்கள் வைக்கப்படுகின்றன. பயணம் செய்பவர்கள் அந்த பிரசுரங்களை எடுத்து படிக்குமாறு ஊக்கப்படுத்தப்படுகின்றார்கள். இஸ்லாம் குறித்து மேலும் அறிந்துக்கொள்ள விரும்புபவர்கள் தங்கள் முகவரியை கொடுப்பதின் மூலம் குர்ஆன், நாயகம் (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு, இஸ்லாம் குறித்த தவறான புரிதல்களை விளக்கும் ஒரு புத்தகம் ஆகியவை அடங்கிய பரிசுப்பெட்டகத்தை பெற்றுக்கொள்ளலாம். 


ஒவ்வொரு மாதமும் ஆட்டோக்களில் வைக்கப்படும் துண்டுப்பிரசுரங்களின் தலைப்புகள் மாற்றப்படுகின்றன. 

சலாம் சென்டரின் "எல்லோருக்கும் குர்ஆன்" என்ற செயல்திட்டத்தின் ஒரு பகுதியான இந்த அணுகுமுறை பரவலான வரவேற்பை பெற்றுள்ளது. இந்த திட்டம் முதல்முறையாக அறிவிக்கப்பட்ட போது, இதனை செயல்படுத்த முன்வந்தவர் நாம் மேலே பார்த்த நிசார் அஹமத் என்ற சகோதரர் தான். 

நிசார் அஹமது ஒரு அற்புதமான பட்டத்திற்கு சொந்தகாரரும் கூட. பெங்களூர் நகரின் "மிக நேர்மையான ஆட்டோ ஓட்டுனர்" என்ற விருதை மாநகர போலிஸ் கமிஷனரிடம் பெற்றவர் இவர். தன் நேர்மையான வாழ்விற்கு காரணமான இஸ்லாமை அடுத்தவருக்கும் எடுத்து சொல்லவேண்டும் என்ற ஆழ்ந்த ஈடுபாடு நிசார் அஹமதுவிடம் இருந்து தீவிரமாகவே வெளிப்பட்டது. விளைவோ, அவர் தன் நண்பர்களுக்கு இந்த திட்டத்தை அறிமுகப்படுத்த, இன்று சுமார் 50 ஆட்டோக்கள் இறைச்செய்தியை அடுத்தவருக்கு எடுத்துக் கூறிக்கொண்டிருக்கின்றன.


ஆனால் விஷயம் இத்தோடு முடியவில்லை. வேறு பல நெகிழ்ச்சியான நிகழ்வுகளும் நடந்தேறியிருக்கின்றன. தன் மார்க்கத்தை அடுத்தவருக்கு எடுத்துக்கூற வேண்டிய நிலை வந்தபோது தான், இந்த ஆட்டோ ஒட்டுனர்களில் சிலர் தங்கள் மார்க்கத்தையே படிக்க ஆரம்பித்து இருக்கின்றனர். அந்த வகையில், தங்கள் வாடிக்கையாளர்களை விட தங்களுக்கே இந்த செயல்திட்டம் அதிகளவில் பயனளிப்பதாக கூறுகின்றனர் அவர்கள். 

"என் வாழ்க்கையை நேர்மையான முறையில் அமைத்துக்கொள்ள இந்த செயல்திட்டம் உதவுகின்றது. முன்பு என் வாடிக்கையாளர்களிடம் தவறான முறையில் நடந்துக்கொண்டதற்காக இன்று அதிகமதிகமாக வெட்கப்படுகின்றேன்" - உணர்ச்சிப்பெருக்கில் கூறுகின்றார் காதர் பாஷா என்ற ஓட்டுனர். 

இஸ்லாமை சரியாக விளங்கி இந்த ஆட்டோ ஓட்டுனர்கள் தங்கள் வாழ்வை அமைத்திடவும், இவர்கள் மேற்கொண்டுள்ள இந்த அற்புதமான முயற்சி மேலும் வெற்றியடையவும் பிரார்த்தியுங்கள். 

ஒலிம்பிக்ஸ் 2012:

ஆஹா..வந்துவிட்டார்கள் IERA (இஸ்லாமிய கல்வி மற்றும் ஆய்வு மையம்).

பிரிட்டனை சேர்ந்த இந்த அமைப்பின் செயல்திட்டங்கள் என்றுமே ஆச்சர்யத்தையும், புதுமையையும், புத்துணர்ச்சியையும் கொடுக்கக்கூடியவை (அல்ஹம்துலில்லாஹ்). உலக நாத்திக மாநாட்டில் கலந்துக்கொண்டு அவர்களை அசரடித்தாகட்டும், பிரபல நாத்திகர்கள் என்ற அறியப்படுபவர்களுடன் விவாதங்களில் கலந்துக்கொண்டு அவர்களை திணறடித்தாகட்டும், இவர்கள் என்றுமே ஆச்சர்யத்தை கொடுக்க தவறியதில்லை. 

இப்போது மற்றுமொரு செயல்திட்டத்துடன் அதிரடியாக இறங்கிவிட்டது இஸ்லாத்தை தழுவியவர்களால் துவக்கப்பட்ட இந்த அமைப்பு. 

மேட்டர் இதுதான். வரும் ஆகஸ்ட் நான்காம் தேதி, இதுவரை பிரிட்டனில் இல்லாத அளவு, நூற்றுக்கணக்கான முஸ்லிம்களுடன் "வாழ்க்கை விளையாட்டு மட்டுமா? (Is life just a game?)" என்ற வாசகத்துடன் ஒலிம்பிக் கிராமத்தில் அழைப்பு பணியை மேற்கொள்ளப்போகின்றது இந்த அமைப்பு. நீங்கள் இங்கிலாந்தில் வசிப்பவரா? ஒலிம்பிக் கிராமத்திற்கு வரும் ஆயிரக்கணக்கான மக்களில் சிலருக்காவது இஸ்லாமை எடுத்துக்கூற விரும்புகின்றீர்களா? நீங்களும் இந்த அழைப்பு பணியில் பங்கேற்கலாம். மேலும் விபரங்களுக்கு இங்கே பார்க்கவும். 


ஒலிம்பிக் கிராமத்திற்கு வெளியே அழைப்பு பணியில் ஈடுபட்டுள்ள IERA குழுவினர் (மஞ்சள் டீ-ஷர்ட் அணிந்திருப்பவர்கள்)



நான்காம் தேதி நடப்பது நடக்கட்டும். அதுவரை ஏன் வெயிட் செய்யவேண்டுமென்ற நோக்கில் IERA-வின் சிலர் ஒலிம்பிக் போட்டிகள் துவங்கிய அன்றே களமிறங்கிவிட்டனர். மிக அருமையான இவர்களுடைய அழைப்பு பணி பொதுமக்கள், மீடியாக்கள் என்று சமூகத்தின் அனைத்து பார்வையாளர்களையும் வெகுவாக கவர்ந்துள்ளது. 

இலண்டன் மேயர் போரிஸ் ஜான்சனுக்கு அழைப்பு பிரசுரம் அளிக்கப்பட்ட போது... 

IERA-வை பொருத்தவரை இந்த செயல்திட்டத்தில் பெண்களை அனுமதிக்கவில்லை. இது நிச்சயமாக ஆச்சர்யமான ஒன்று. மிக வீரியமான பெண்கள் அழைப்பு குழுவை கொண்டது இந்த அமைப்பு. கேம்பிரிஜ் பல்கலைகழக வளாகத்தில் செயல்படும் இவர்களின் பெண்கள் பிரிவை இதற்கு உதாரணம் கூறலாம். ஆயிரகணக்கானோர் கூடும் இடத்தில், பெண்களுக்கான பாதுகாப்பு குறித்த அச்சம் காரணமாக பெண்கள் பிரிவை இந்த குறிப்பிட்ட செயல்திட்டத்தில் பங்கேற்க அனுமதிக்கவில்லை என்று விளக்கம் கூறியிருக்கின்றது IERA. 

எது எப்படியோ, இவர்கள் அழைப்பு பணியை தொடங்கிய சில நாட்களிலேயே இறைவன் மகத்தான வெற்றியை கொடுத்துள்ளான். இதுவரை சுமார் 10-15 சகோதர சகோதரிகள் ஒலிம்பிக் கிராமத்தில் இஸ்லாமை ஏற்றுக்கொண்டுள்ளனர். 

பாதுகாப்பு வீரர்களுக்கு இஸ்லாமை எடுத்து கூறுதல் 

"நான் முஸ்லிமாக முடியுமா?" என்று தாமாக முன்வந்து கேட்ட சகோதரியாகட்டும், கிருத்துவத்தை எடுத்து கூற வந்து முஸ்லிமான அந்த கிருத்துவ மிஷனரியாட்டும், விவாதத்திற்கு பின்னால் இஸ்லாமை தங்கள் வாழ்வியல் நெறியாக ஏற்றுக்கொண்ட அந்த நாத்திகர்களாகட்டும் - என பல சுவாரசியமான நிகழ்வுகளுடன் அசத்தலாக சென்றுக்கொண்டிருக்கின்றது இந்த ஒலிம்பிக் அழைப்பு பணி. 

IERA குழுவினர் 

உலகளவில் இஸ்லாமை எடுத்துக்கூறும் பணிகள் சமீப காலங்களாக அதிகரித்து இருக்கின்றன. அதிக அளவிலான புதிய முஸ்லிம்களையும் இப்போதெல்லாம் நட்பு வட்டாரத்தில் பார்க்க முடிகின்றது. இந்த சூழ்நிலையில் IERA எடுத்துள்ள இந்த மகத்தான பணி வெற்றி பெற இறைவனை பிரார்த்திப்போம். 

இறைவன் நம் அனைவரையும் நேர்வழியில் நிலைநிறுத்துவானாக...ஆமீன்.

இறைவேனே எல்லாம் அறிந்தவன்... 

References:
1. Auto Drivers Now Turn ‘Divine Couriers’ - karnataka muslims. link
2. Is life just a game - IERA. link

வெள்ளியால் செய்யப்பட்ட புனித அல்குர்ஆன்

வெள்ளியால் செய்யப்பட்ட புனித அல்குர்ஆன் துபாயில் அறிமுகம்.

வெள்ளியால் செய்யப்பட்ட புனித அல்குர்ஆன் துபாயில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஈரானைச் சோந்த துபாய் கலைஞரான ரஹீன் அக்பர் கன்ஸடியால் வெள்ளியலான புனித அல்குர்ஆன் பிரதி உருவாக்கப்பட்டுள்ளது.கன்ஸடியால் கடந்த 12வருடங்களில் ஒவ்வொருவருடமும் புனித அல்குர்ஆனின் வெவ்வெறுபட்ட பிரதிகள் உருவாக்கப்பட்டு சாதனைகள் நிகழ்த்தப்பட்டு வருகின்றன.

இப் புனித அல்குர்ஆன் வெள்ளி மற்றும் பிளட்டினம் முலாம் பூசப்பட்ட தாள்களைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதுடன், இது 6கிலோகிராம் எடையைக் கொண்டதாகும்.மேலும் இத்தாள்கள் 21 சென்றிமீற்றர் நீளத்தையும், 15சென்றிமீற்றர் அகலத்தையும் கொண்டதுடன்,20கரட் வைரம்,10கரட் ரூபி மற்றும் நீலமாணிக்கம் அடங்களாக 2500 மாணிக்கக்கற்களை கொண்டு அழகுபடுத்தப்பட்டுள்ளது. 

 இப் புனித குர்ஆனை உருவாக்குவதற்கு 10மாதங்கள் சென்றுள்ளதுடன்,இதன் உருவாக்கத்திற்கு 150,000திர்ஹம்கள் செலவிடப்பட்டுள்ளது. சித்திரக்கலை பற்றிய ஏதெனும் முறையான பயிற்சி கன்ஸடி பெறவில்லை, எனினும் சிறுவயலிருந்தே சித்திரக்கலை ஆற்றல் அவரிடம் காணப்பட்டுள்ளது.சாதாரண வெற்றுக் கண்னுக்கு புலப்படும் எழுத்துக்களின் 20மடங்கான சிறியஅளவான எழுத்துக்களை எழுத மற்றும் வாசிக்கக்கூடிய திறமை கன்ஸடிக்கு காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. 2மில்லிமீற்றர் நீளமும், 1.5மில்லிமீற்றர் அகலமும் 600 பக்கங்களையும் கொண்ட உலகின் மிகச்சிறிய குர்ஆனும் ரஹீன் அக்பர் கன்ஸடியால் உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆபாச பத்திரிகைகளும் அதன் விபரீதங்களும் - சவூதி ஃபத்வா

ஆபாச பத்திரிகைகளும் அதன் விபரீதங்களும் - சவூதி ஃபத்வா

ஆபாச பத்திரிகைகளும் அதன் விபரீதங்களும் - சவூதி ஃபத்வா

பிஸ்மில்லாஹ்ஹிர் ரஹ்மானிர் ரஹீம்

புகழ் அனைத்தும் அல்லாஹ்விற்கே உரித்தானது. அல்லாஹ்வின் அருளும் சாந்தியும் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும் அவர்களின் குடும்பத்தினர்கள் தோழர்கள் தோழியர்கள் அனைவர்கள் மீதும் என்றென்றும் உண்டாகட்டுமாக !

நவீன காலத்தில் வாழும் முஸ்லிம்கள் பல சோதனைகளுக்கு உட்பட்டுள்ளனர். குழப்பம் அனைத்து திசைகளிலும் அவர்களைச் சூழ்ந்துள்ளன. முஸ்லிம்களில் பெரும் பான்மையினர் அதில் வீழ்ந்து தத்தலித்துக் கொண்டிருக்கின்றனர். (மார்க்கத்தில்) வெறுக்கப்பட்ட காரியங்கள் தலை விரித்தாடுகிறது. மனிதர்கள் அல்லாஹ்வுக்கு எவ்வித பயமோ, வெட்கமோ, இன்றி மானக்கேடான காரியங்களைப் பகிரங்கமாக துணிந்து செய்கின்றனர்.

இதற்கெல்லாம் பிரதான காரணமாக விளங்குவது இறை மார்க்கத்தின் பொடு போக்கும் இறைவனது சட்ட வறையறைகளை மீறுவதும் சீர்திருத்தவாதிகளாக இருக்கும் பெரும் பான்மையான மக்கள் அல்லாஹ்வின் மார்க்கத்தை எடுத்து நடக்காததும், நன்மையை ஏவி தீமையை தடுக்காததுமாகும். குழப்பமான இச்சூழலிருந்து விடுதலை பெற இறைவனிடம் பாவ மன்னிப்புத் தேடுவதோடு அவனது கட்டளைகளை எடுத்து அவனது விலக்கல்களைத் தவிர்த்து நடந்து, அசத்திய வழியில் செல்லும் தீயோர்களின் கரங்களைப் பிடித்து சத்திய வழியில் இருத்துவதைத்தவிர முஸ்லிம்களின் ஈடேற்றத்திற்கான வேறு வழிகள் எதுவும் இருக்கவே முடியாது.நவீன காலத்தில் குழப்பங்களின் அச்சாணியாக தீய வார்த்தைகளையும் அழிவின் வாடிக்கையாளார்களையும், செக்ஸ் தொழிலாளர்களையும், விசுவாசிகளிடையே தீமைகள் பரவி அதில் குளிர் காய்வோரையும் அல்லாஹ்வும் அவனது திருத்தூதரும் ஏவியதும் விலக்கியதுமாகக் காணப்படுவதை எதிர்த்துப் போராடத்தூண்டுகின்ற தீயோர்களையும் அவர்களின் ஆதரவில் நடந்தேறுகின்ற ஆபாசப் பத்திரிப்கைகளையும், மனித உணர்வுகளைத் தூண்டுகின்ற பாலியல் அம்சங்களைத் தன்னகத்தே தாங்கி நிற்கும் பல்வகை ஆபாச சஞ்சிகைகள் பத்திரிக்கைகளையும் குறிப்பிடலாம்.

ஆய்வின் முடிவில் இவைகள் அனைத்தும் தீமைகளுக்கான விளம்பர சாதனமாகவும் மனித உணர்வுகளைத் தூண்டும் ஊடகங்களாகவும் அல்லாஹ் ஹராமாக்கியவைகளை செய்யுமாறு ஊக்குவிக்கின்றவைகளாகவுமே இருக்கிறன.

இப்பத்திரிக்கைகளில் பின் வரும் தீமைகள் காணப்படுகிறது ..

1 அதன் அட்டையின் மேற்புறமும் உட்புறமும் ஆபாசப் படங்கள்.

2 அதனுள் நிர்வாண கோலத்தில் அலங்கரிக்கப்பட்டுள்ள பெண்கள்.

3 பாலியல் உணர்வுகளை தூண்டும் அசிங்கமான வார்த்தைகளும் வெட்கம்

மானம் சூடு சொரணையற்ற வாசகங்கள், சமூக விழுமியங்கள் ஒழுக்கமாண்புகளைச் சிiதைக்கும் சிpங்கார வார்த்தைகள்.

4 அசிங்கமான ஆபாசக் கதைகள் கேடுகெட்ட தீய பாடகிகள் நடிகர்

நடிகைகளின் பயனற்ற செய்திகள் உளறல்கள்.

5 பெண்களைப் போகப் பொருளாகச் சித்தரித்து நிர்வாண உலகிற்கு

அவர்களை அழைத்துச் சென்று அவர்களின் உரிமைகளைப் பறித்து பெண் உரிமை

என்ற ஆபாச மாயையில் அவர்களை விழச்செய்து அவர்களின் கௌரவ

ஆடையான ஹிஜாபை (பர்தாவை)க்களையும் கோஷங்கள்.

6 இறை விசுவாசிகளான பெண்களை நிர்வாண வலையில் சி;க்க வைக்கும்பிரதான நோக்கில் நிர்வாண கோலத்துடன் காட்சிpத் தரும் பெண்களைக்

பெல்ஜிய நாட்டு கத்தோலிக்க புரோகிதர்  பாலியல் கொடுமையை செய்ததாக ஒப்புதல்

பெல்ஜிய நாட்டு கத்தோலிக்க புரோகிதர் பாலியல் கொடுமையை செய்ததாக ஒப்புதல்


நோபல் பரிசுக்கு பரிசீலிக்கப்பட்ட பெல்ஜிய நாட்டு கத்தோலிக்க புரோகிதர் பாலியல் கொடுமையை செய்ததாக ஒப்புதல்

ப்ரஸ்ஸல்ஸ்,ஜன.30:சமூக களத்தில் தீவிரமாக பணியாற்றிய பெல்ஜிய நாட்டு கத்தோலிக்க புரோகிதர் ஃப்ரான்காய்ஸ் ஹவ்டார்ட் பாலியல் கொடுமை செய்ததாக ஒப்புக்கொண்டுள்ளார்.

வளர்ந்துவரும் நாடுகளில் உலகமயமாக்கலின் விளைவுகளுக்கெதிராக போராட்டம் நடத்தியதால் ஹவ்டார்ட்டை நோபல் பரிசுக்கு பரிசீலிக்க வேண்டும் என்ற பிரச்சாரம் நடந்துவரும் வேளையில்தான் இக்குற்றச்சாட்டு எழுந்தது.

புரோகிதர் ஹவ்டார்ட்டின் குற்ற ஒப்புதலை பெல்ஜிய நாட்டு பத்திரிகைகள் வெளியிட்டுள்ளன. பெல்ஜியத்தில் பாலியல் வன்கொடுமைகளில் கத்தோலிக்க கிறிஸ்தவ பாதிரியார்கள் ஈடுபட்ட செய்தி அந்நாட்டை உலுக்கிய வேளையில் இச்சம்பவம் வெளியானது கத்தோலிக்க சபையை மேலும் நெருக்கடியில் ஆழ்த்தியுள்ளது.

பாதிக்கப்பட்டவர்களின் நிர்பந்தத்தால் கத்தோலிக்க சபை 100க்கும் மேற்பட்ட பாலியல் வன்கொடுமைகள் குறித்த தகவல்களை கடந்த செப்டம்பர் மாதம் வெளியிட்டிருந்தது. இரண்டு வயது சிறுவன் வரை பாதிரிகளின் காமவெறிக்கு பலியாகியுள்ளார்.

கடந்த அக்டோபர் மாதம் ஹவ்டார்ட்டை நோபல் பரிசுக்கு பரிசீலிக்க வேண்டும் என்ற பிரச்சாரம் துவங்கியது. அவ்வேளையில்தான் ஹவ்டார்ட் 40 ஆண்டுகளுக்கு முன்பு தனது சகோதரனை பாலியல் வன்கொடுமைச் செய்த நிகழ்வை ஒரு பெண்மணி வெளிக்கொணர்ந்தார். இதனைத் தொடர்ந்து நோபல் பரிசுக்கு ஹவ்டார்ட்டை முன்மொழியும் முயற்சியிலிருந்து அவரது ஆதரவாளர்கள் வாபஸ்பெற்றனர்.

உலகமயமாக்கலுக்கெதிராக போராடும் செட்ரா என்ற அமைப்பிலிருந்து ஹவ்டார்ட் ராஜினாமாச் செய்திருந்தார். தற்போது ஹவ்டார்ட் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
பிரேசிலில் மிக வேகமாக வளரும் இஸ்லாம்!

பிரேசிலில் மிக வேகமாக வளரும் இஸ்லாம்!


பிரேசிலில் மிக வேகமாக வளரும் இஸ்லாம்!


ரியோடி-ஜெனீரா:பிரேசிலில் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் பெரும்பான்மையாக வாழும் பிரேசிலின் ரியோடி ஜெனீரா நகரத்தில் இஸ்லாத்தின் வளர்ச்சி அதிகமாக உள்ளது.

பல்வேறு கலாச்சாரங்களை கொண்ட பிரேசில் சமூகம் இஸ்லாத்தின் பால் கவரப்படுவதற்கோ, இஸ்லாத்தின் சின்னங்களை அணிவதற்கோ எவ்வித தடைகளையும் விதிப்பதில்லை என இஸ்லாத்தை தனது வாழ்வியல் நெறியாக ஏற்றுக்கொண்ட இளம்பெண் ஃபாத்திமா கூறுகிறார்.

2000-ஆம் ஆண்டு சூழ்நிலை புள்ளிவிபரப்படி 27,239 முஸ்லிம்கள் பிரேசிலில் வசித்தார்கள். தற்பொழுது பிரேசிலில் இத்திஹாதுல் இஸ்லாமியாவின் புதிய ஆய்வின் படி முஸ்லிம் மக்கள் தொகை பதினைந்து லட்சமாக அதிகரித்துள்ளது.

கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் அதிகமாக வாழும் ரியோடி ஜெனீராவில் 500 முஸ்லிம் குடும்பங்கள் வசிக்கின்றனர். இவர்களில் 85 சதவீதமும் பிரேசிலை சார்ந்தவர்கள் ஆவர்.

ஃபலஸ்தீன், சிரியா, ஈராக் ஆகிய நாடுகளைச் சார்ந்த ஏராளமானோர் பிரேசிலில் வசிக்கின்றனர்.
மஸ்ஜித்தை மூடமுடியாது! கொழும்பு பிரதி பொலிஸ் மா அதிபர்

மஸ்ஜித்தை மூடமுடியாது! கொழும்பு பிரதி பொலிஸ் மா அதிபர்


மஸ்ஜித்தை மூடமுடியாது: இன்றைய வெலிக்கடை கூட்டத்தில் கொழும்பு பிரதி பொலிஸ் மா அதிபர்


ஏ.அப்துல்லாஹ்: 
ராஜகிரிய, ஜாமியுல் தாருள் ஈமான் பள்ளிவாசல் தொடர்பான விசேட கூட்டம் ஒன்று கொழும்பு பிராந்தியத்துக்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் தலைமயில் இன்று காலை 03.08.2012-வெலிக்கடையில்   இடம்பெற்றுள்ளது. அதில் மஸ்ஜிதின் இருப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பெளத்த குருக்கள் தலைமையிலான குழுவினரும் , ஜாமியுல் தாருள் ஈமான் பள்ளிவாசல் நிர்வாகம் , முஸ்லிம் அரசியல் வாதிகள் ஜம்இயதுல் உலமாவின் பிரதிநிதிகள் ஆகியோரும் கலந்து கொண்டுள்ளனர்.
அந்த கூட்டத்தில் பெளத்த குருக்கள் தலைமையிலான குழுவினர் மஸ்ஜித்தை உடனடியாக மூடவேண்டும் என்று தெரிவித்துள்ளனர் , இருந்தபோதும் கொழும்பு பிராந்தியத்துக்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் இந்த மாதம் முஸ்லிம்களின் புனித ரமழான் மாதம் அவர்களின் எந்த வணக்க வழிபாட்டுக்கும் இடையூறை ஏற்படுத்த அனுமதிக்க முடியாது. மஸ்ஜித்தை மூடமுடியாது என்று தெரிவித்துள்ளார்.
இதை ஏற்க மறுத்த பெளத்த குழுவினர் தமது வாதத்தை தொடர்ந்தும் முன்வைத்துள்ளனர் . இதன் போது மீண்டும் வலியுறுத்தியுள்ள பிரதி போலீஸ் மா அதிபர் எந்த வகையிலும் மக்களுக்கு இடையூறாக இல்லாத மஸ்ஜிதை மூட அனுமதிக்க முடியாது , குறித்த மஸ்ஜித் தொடர்பாக போலீசில் எந்த முறைப்பாடுகளும் இல்லை , மஸ்ஜித் தொடர்ந்து இயங்கும் என்று தெரிவித்துள்துடன் ரமழான் மாதம் முடித்ததும் (எதிர்வரும் 25 ஆம் திகதிக்கு பின்னர்) இது தொடர்பான மேலதிகமான விடயங்கள் பற்றி ஆராயப்படும் என்றும் தெரிவித்துள்ளார் .
நேற்று இரவு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ள நிலையில் ராஜகிரிய, ஜாமியுல் தாருள் ஈமான் பள்ளிவாசலுக்கு சென்ற அகில இலங்கை ஜம்இயதுல் உலமாவின் பிரதிநிகள் முன்னிலையில் பள்ளி திறக்கப்பட்டு, தராவிஹ் தொழுகைகளும் இடம்பெற்றுள்ளது. மஸ்ஜித் திறக்கப்பட்டவுடன் மஸ்ஜிதுக்கு முன் கூடிய ஒரு பெளத்த குழுவினர் தொழுகைக்கு எதிர்ப்பு தெரிவித்து குறித்த பள்ளிசாலை சூழ்ந்துகொண்துள்ளனர் . அவர்கள் இடம்பெற்ற தொழுகைக்கு எதிர்ப்பை தெரிவித்ததுடன் பள்ளிக்கு வந்தவர்களை எல்லாம் படம் எடுத்துள்ளனர் . அதேவேளை முஸ்லிம் தரப்பில் அதற்கு எவரும் எதிர்ப்பை வெளிப்படுத்தவில்லை . குறித்த சமையம் பாராளுமன்ற உறுப்பினர் அஸ்வர் , ஐக்கிய தேசிய கட்சியின் மேல் மாகாண சபை உறுப்பினர் முஜீபுர் ரஹ்மான் ஆகியோரும் அந்த சமயம் அங்கு சென்றுள்ளனர் .தற்போது பள்ளிக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது . தொழுகைக்காக தொடர்ந்தும் இயங்கி வருகிறது .
இது தொடர்பாக lankamuslim.org க்கு தகவல் வழங்கிய அகில இலங்கை ஜம்இயதுல் உலமாவின் துணை செயலாளர் தாஸீம் மௌலவி . நாங்கள் நேற்று போலீஸ் பாதுகாப்பு மத்தியில் மஸ்ஜிதை திறந்து தொழுகை நடாத்தினோம் . அதற்கு ஒரு குழுவினர் எதிர்ப்பை தெரிவித்து கொண்டிருந்தனர். அங்கு வருபவர்களை எல்லாம் படம் எடுத்துகொண்டும் இருந்தனர் என்று தெரிவித்தார் . குறித்த மஸ்ஜித் சகல சட்ட ஆவங்களையும் கொண்டுள்ளது , அது சட்டப்படியே இயங்குகிறது. வக்பு சபையிலும் பதிவு செய்யப் பட்டு அந்த மஸ்ஜிதின் நிர்வாகிகள் கூட வக்பு சபையில் தங்களை பதிவு செய்து அங்கீகாரம் பெற்றுள்ளார்கள் . மஸ்ஜித் தொடர்ந்தும் அங்கு இயங்கும் அதற்கு போலீசார் முழு ஒத்துழைப்பை வழங்குகிறார்கள் . நேன்பின் பின்னரும் எந்த தடைகளும் இன்றி இன்ஷா அல்லாஹ் இயங்கும் . இது தொடர்பான சட்ட நடவடிக்கைகள் தொடர்பாக ஜம்இயதுல் உலமாவின் விசேட குழு ஆராய்ந்து வருகிறது .எந்த சிக்கலும் இன்றி மஸ்ஜித் தொடர்ந்தும் இயங்க நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டுவருகிறது என்று தெரிவித்தார் .
இதன்போது சட்ட நடவடிக்கை என்றால் அத்துமீறுபவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படுமா ? என்று கேட்டமைக்கு இல்லை , நீதிமன்றம் செல்லாமல் சட்ட ஆவணங்களை கொண்டு இலகுவாக எமது உரிமைகளை நிலைநாட்ட முடியும் அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகிறது என்று தெரிவித்தார் .
அதேவேளை சிங்கள பிரதேசங்களிலுள்ள பள்ளிவாசல்களுக்கு எதிராக செயற்படுவர்களுக்கு எதிராக இதுவரை ஏன் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை என ஐக்கிய தேசிய கட்சியின் மேல் மாகாண சபை உறுப்பினர் முஜீபுர் ரஹ்மான் கேள்வி எழுப்பியுள்ளார் .
பர்தா பற்றி ஒரு அமெரிக்க மாணவி

பர்தா பற்றி ஒரு அமெரிக்க மாணவி


பர்தா பற்றி ஒரு அமெரிக்க மாணவியின் அனுபவம்.

பெரும்பாலான மக்களைப்போல, எனக்கும் ‘முஸ்லிம் பெண்கள் ஏன் பர்தா அணிகின்றனர்?’ என்ற ஐயம் எழவே செய்தது. நான் பருவம் எய்திய பின்பு, எனது முதல் எண்ணம், எனது முதல் அச்சம், எனது தலைமுடியை மறைக்கும் பர்தாவை நானும் அணிய வேண்டுமே என்பதேயாகும். பர்தா அணிவதன் உண்மைப் பொருள் என்னவென்பதைப் பிறகு விளங்கியதும் பர்தா அணிய வேண்டும் என்ற திடமான முடிவை மேற்கொண்டேன். ஆனால் அதனை மெல்ல மெல்லத் துவங்கினேன்.
தென் கலிஃபோர்னியா இஸ்லாமிய மையத்திலுள்ள மஸ்ஜிதுக்குச் செல்லும்போது மட்டும் பர்தா அணிவதை வழக்கமாக்கிக் கொண்டேன். அத்துடன் கைகளையும், கால்களையும் மறைக்கும் நீண்ட உடைகளையும் அணிந்து வந்தேன். பிறகு படிப்படியாக தோழிகளின் வீடுகளுக்குச் செல்லும்போது பர்தாவுடன் சென்றேன். கடைசியாக, வசந்தகால விடுமுறைக்குப் பிறகு கல்விக்கூடத்திநற்குச் செல்லும்போது பர்தாவைத் துணிந்து அணிந்து சென்றேன். பள்ளிக்கூடத்திற்கு பர்தாவுடன் செல்வதைப் பற்றித்தான் மிகவும் அச்சம் கொண்டிருந்தேன். ஆனால், இப்புதிய அனுபவம் மிகவும் உற்சாகம் மிகுந்த அனுபவமாக அமைந்துவிட்டது.
எல்லோரும் என்னை வியப்புடன் பார்ப்பது எனக்குள் மிகுந்த பரபரப்பையும், உற்சாகத்தையும் ஏற்படுத்தியது.
வகுப்பு இடைவேளையின் போது சக மாணவிகள் பர்தாவைப் பற்றி பல கேள்விகளை எழுப்பினர். நான் பர்தா அணிந்திருப்பதைப் பார்த்த எனது ஆசிரியையும் அதன் காரணங்களை அறிந்து கொள்ள ஆர்வம் காட்டினார். ஆகவே, வரலாறு பாட வகுப்பின் போது அது பற்றி உரையாடலாம் எனக் குறிப்பிட்டார். இது நடந்தது பல ஆண்டுகளுக்கு முன்பு. திருமறை வலியுறுத்தும் பர்தாவின் பல நன்மைகளை எனது அனுபவத்தில் கண்டு கொண்டேன். முதலாவதாக, நான் பெண் என்று மரியாதை காட்டப்படுகிறது. ஒரு பால் பொருள் (Sex Object) என்று நோக்கப்படுவதில்லை. இரண்டாவதாக, நான் ஒரு இஸ்லாமியப் பெண் என்று மக்களால் அறியப்படுகிறது. பர்தா அணிவதன் மூலம் நான் மற்றவர்களைப் பற்றி தெரிந்து கொள்ளவும், மற்றவர்கள் என்னைத் தெரிந்து கொள்ளவும் முடிகிறது. நான் பர்தா அணியவில்லை என்றால், அதைப்பற்றி கேள்விகள் யாரும் கேட்கப்போவதில்லை.
ஆகவே, எனது நெறியான இஸ்லாம் பற்றிய செய்திகளை விளக்குவதற்கு கடைசியில் வழிவகுக்கும். பர்தாவைப் பற்றிய ஐயங்கள் எழுவதற்கு வாய்ப்பில்லாமல் போய் விடக்கூடும். பர்தா அணிதல் என்பது ஒருவரின் நெறியை பகிரங்கமாகப் பறைசாற்றுவதாகும். அதன் மூலம், ஒருவர் எந்த மதத்தைச் சார்ந்தவர் என்பதை மற்றவர்கள் அறிந்து கொள்ளக் கூடும். ஏனையவற்றைவிட மதத்தைப் பின் பற்றுதல் மிகவும் எளிதானது என்பதை உணர்த்துவதாக பர்தா அமைந்துள்ளது.
வீண் பேச்சுக்களில் ஈடுபடுவதில்லை என்பதை நான் நிச்சயமாக அறிந்து விடுவதைக் காட்டிலும், எனது தலைமுடிகள் பர்தாவினால் மறைக்கப்பட்டுள்ளன என்பதை அறிந்து விடுவது மிகவும் எளிதாகும். பர்தா அணிவதன் மூலம் ‘எனது குணநலன்களில் சிறந்த மாற்றங்கள்’ ஏற்பட்டுள்ளன. பர்தாவைப் பற்றி தவறான கருத்துக்களே மக்களிடம் இன்னும் நிலவி வருகிறது. ஏனெனில் மற்றவர்களை மதிப்பிடுவது என்பது மிகவும் எளிதாகும். பர்தா அணிந்த பெண்மணி ஒருவர் தனக்கு எதிரில் வரும் ஒருவரைப் பார்க்க நேரிடின், அவர் ‘நல்லவரா?’ அல்லது ‘கெட்டவரா?’ என்பதை எளிதில் மதிப்பிட்டு விடலாம்.
(இக்கட்டுரையாசிரியர் லைலா அஸ்கர், வெஸ்டர்ன் பிரிட்ஜ் (Western Bridge) பள்ளி மாணவி. இது அமெரிக்காவின் ‘லாஸ் ஏன்ஜல்ஸ் டைம்ஸ்’ பத்திரிகையில் வெளிவந்த கட்டுரையாகும் .

மாடல் அழகி ஸாரா பூக்கர் இஸ்லாத்தை ஏற்ற வரலாறு.

அமெரிக்க முன்னால் மாடல் அழகி ஸாரா பூக்கர் இஸ்லாத்தை ஏற்ற வரலாறு.

பிரபல மாடல் அழகியாக இருந்த “ஸாரா பூக்கர்” அவர்கள் இஸ்லாத்தை ஏற்ற வரலாற்றை தனது வாக்கு மூலமாக இங்கு முன் வைக்கிறார்.
அமெரிக்காவின் இதயப்பகுதியில் பிறந்த அமெரிக்கப் பெண் நான். மற்றவர்களைப்போல் நானும் அந்தப் பெரிய நகரத்தின் கவர்ச்சிகளுக்கு ஆட்பட்டவளாகத் தான் வளர்ந்தேன். கவர்ச்சிக்கேந்திரமான ஃபுளோரிடாவுக்கு, தெற்கு மியாமி கடர்கரையின் நாகரீக வாழ்வைத்தேடி ஓடினேன்.
ஒரு சாதாரண மேற்கத்திய பெண் எப்படி இருப்பாளோ அப்படியேதான் நானும் இருந்தேன்; ஆம்! என் அழகின்மீது அதிக ஈடுபாடு கொண்டவளாக இருந்தேன். நான் வளர வளர, நாகரீகத்துக்கு அடிமையாகி விட்டேன் என்பதை நன்றாகவே புரிந்து கொண்டேன். எனது அழகான தோற்றமே என்னை பிணைக் கைதியாக்கி விட்டதை உணர்ந்தேன்.
நாகரீக வாழ்வை மேற்கொண்டால் வாழ்க்கையின் தேவைகளுக்கான பொருளாதாரத்துக்கு என்ன செய்வது? இரண்டுக்கும் இடைவெளி அதிகமானது. மதுபானங்கள் பரிமாறப்படும் கேளிக்கை பார்ட்டியை விட்டு விலகி தியானம், சமூக சேவை போன்றவற்றில் கவனத்தை திருப்பினேன். ஆனால் இவைகளால் பெரிய பலன் ஏதும் கிட்டவில்லை. அவ்வப்போது போட்டுக்கொள்ளும் வலி மாத்திரைகள் தற்காலிக நிவாரணத்தைத்தானே கொடுக்கும். அதற்கு மேல் எந்த பலனையும் கொடுக்காது அல்லாவா? என்னுடைய மன வலிக்கு அழுத்தமான தீர்வுதான் என்ன?
செப்டம்பர் 11, 2001. அப்பொழுதுதான் இஸ்லாத்தைப்பற்றி, இஸ்லாமிய கலச்சாரத்தைப்பற்றி, அதன் மதிப்பைப்பற்றி கேள்விப்படுகிறேன். அதுவரை இஸ்லாம் என்றாலே பெண்களை ”கூடாரத்துக்குள்” அடைத்து வைத்து கொடுமைப்படுத்தும் மதம், மனைவியாக வருபவளை அடித்து உதைக்கும் மதம், பயங்கரவாத மதமாகத்தான் அறிந்து வைத்திருந்தேன்.
அப்பொழுதுதான் ஒருநாள் திருக்குரானை காணும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. ஒரே மாதிரியான மேற்கத்திய கருத்துக்களுக்கு மாற்றமான அதன் நடை என்னை மிகவும் கவர்ந்தது. இருப்பு, வாழ்க்கை, படைப்பு, படைத்தவனுக்கும் படைப்புகளுக்கும் உள்ள தொடர்பு ஆகியவற்றைப் பற்றிய விளக்கங்கள் என்னை மிகவும் கவர்ந்தன.
இதயத்தோடு ஒன்றிப்போகும் அதன் வார்ததைகளை விளக்க எவருமே தேவையில்லை எனும் அளவுக்கு என் ஆன்மாவோடு (அதன் வார்த்தைகள்) ஒன்றிப்போனது என்றுதான் சொல்வேன். இறுதியாக உண்மை எது என்பதை விளங்கிக்கொண்டேன்.

கடைவீதிக்குச்சென்று நீளமான அழகான ‘கவுன்’ ஒன்றை வாங்கி வந்தேன். முஸ்லீம் பெண்மணிகள் தலையை மறைக்க அணியும் துணியையும் கட்டிக்கொண்டு நான் தினசரி நடந்து செல்லும் வீதிகளில் நடக்க ஆரம்பித்தேன். அதே வீதியில்தான் நேற்றுவரை கவர்ச்சிகரமான குட்டையான (ஷார்ட்ஸ்) மற்றும் நீச்சலுடைகளுடன் நடந்து சென்றேன். வீதியில் அதே பழைய முகங்கள், அதே பழைய கடைகளைத்தான் பார்க்கிறேன். ஆனால் மிகப்பெரிய வேறுபாட்டை என் உள்ளம் காண்கிறது. ஆம் சுதந்திரப்பெண்மணியாக இப்போது என்னை நான் உணர்கிறேன். மற்றவர்கள் என் கவர்ச்சியான உடலமைப்பை ஆசையோடு நோக்கும் அந்த பார்வையிலிருந்து தப்பித்து நான் விடுதலை அடைந்து விட்டது போல், என்னை சுற்றியிருந்த விலங்குகள் அறுந்து விழுவது போல் உணர்ந்தேன்.
உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் கவர்ச்சியான என் உடலமைப்பை வேட்டையாடும் மனிதர்களிடமிருந்து எனக்கு முழு விடுதலை கிடைத்துவிட்டது என்று உள்ளம் குதூகளித்தது. அந்த நேரத்தில் என் மனம் அடைந்த நிம்மதியை எப்படி வர்ணிப்பது என்று எனக்கு சொல்லத் தெரியவில்லை.
அதுமட்டுமின்றி எனது தோள்களில் இருந்து ‘பெரிய சுமை’ கீழிறக்கி வைக்கப்பட்டது போல் உணர்ந்தேன். முன்போல நான் ஷாப்பிங் செய்வதிலும், ஒப்பனை செய்து கொள்வதிலும், கூந்தலைச் சரி செய்து கொள்வதிலும் எனது நேரத்தையெல்லாம் வீணடிப்பது நின்றுபோனது. நான் முழு சுதந்திரம் அடைந்துவிட்டதாக என்று உணர்ந்தேன்.
”பெண்களை அவமதிக்கும் மதம்” என்று சிலரால் வர்ணிக்கப்படுகின்ற இஸ்லாத்தை உளப்பூர்வமாக முழு மனதோடு ஏற்றுக்கொண்டேன். அவர்கள் சொல்லும் காரணமே, இஸ்லாத்தை எனக்கு இன்னும் நெறுக்கமாக்கியது. முஸ்லீமான ஒருவரை நான் திருமணமும் செய்து கொண்டேன். நான் ஹிஜாபை அணிந்து கொண்டாலும் நிகாபை  அணிந்து கொள்ள வேண்டும் என்பதிலேயே மிகவும் ஆர்வமாக இருந்தேன்.
எனது முஸ்லீம் கணவரிடம் எனது எண்ணத்தை வெளிப்படுத்தியபோது ‘ஹிஜாப்’ அணிந்து கொள்வதுதான் பெண்களுக்கு கடமையே தவிர ‘நிகாப்’ அல்ல, என்றார். (ஹிஜாப் என்பது பெண்கள் முகம் மற்றும் கை கால்கள் தவிர உடம்பின் மற்ற பகுதிகளை மறைப்பது, ‘நிகாப்’ என்பது முகத்தையும் மறைப்பது கண்களைத்தவிர)
நல்ல முஸ்லிம்களாக இருப்பதற்கும், கணவன்மார்களுக்கு ஆதரவு கொடுத்து பொறுப்புகளை எடுத்துக் கொள்வதற்கும், குழந்தைகளை நல்லவர்களாக வளர்த்து மனித சமுதாயத்திற்கு வழிகாட்டக் கூடியவர்களாக ஆக்குவதற்கு முஸ்லிம் பெண்களுக்கு என்னால் ஆனதைக் கற்றுக் கொடுத்துக் கொண்டிருக்கிறேன்.
நம்மைப் படைத்த அல்லாஹ்வை திருப்திப் படுத்துவதற்காக, ‘ஹிஜாப்’ அணியும் நமது உரிமைக்காகப் போராடும் அதே வேளையில்; ஹிஜாப், நிகாப் அணியாத பெண்களுக்கு, நாம் இதை ஏன் அணிய வேண்டும், ஏன் இது நமக்கு மிகவும் அவசியம் என்பதை எல்லாம் எடுத்துச் சொல்ல வேண்டும்.
உலகெங்கிலுமுள்ள எல்லா ஊடகங்களிலும், விருப்பத்துடனோ, விருப்பமின்றியோ, ‘ஸ்டைல்’ என்ற பெயரில் மிகமிகக் குறைவாக, ஏறத்தாழ உடையே இல்லை என்று சொல்லுமளவுக்கு அணிவதற்கு பெண்கள் வற்புறுத்தப்படுகிறார்கள். ஹிஜாபை நான் அணிந்து கொண்டதால் எனக்குக் கிடைத்ததுபோன்று, ஒரு பெண்ணுக்குக் கிடைக்கும் நிம்மதி, மகிழ்ச்சி ஆகியவைப் பற்றி அறிந்து கொள்ள பெண்களுக்கு உரிமை இருக்கிறது. இதை நான் முஸ்லிமல்லாத முன்னாள் பெண்மணியாகவும் உரக்கச் சொல்வேன்.
சௌத் பீச்சில் என் நீச்சலுடையையும், கவர்ச்சியான மேற்கத்திய வாழ்க்கை முறையையும் கழற்றி எறிந்து விட்டு, என்னைப் படைத்தவனோடு நிம்மதியாக இருப்பதிலும் சுயமரியாதையுடனும் கண்ணியத்துடனும் வாழும் ஒரு பெண்ணாக என்னைச் சுற்றியிருப்பவர்களோடு வாழ்வதில்தான் எனக்கு அளவிலா மகிழ்ச்சியும் நிம்மதியும் இருக்கிறது.
நேற்றுவரை நீச்சலுடையை பெண்ணினத்தின் சுதந்திரக் குறியீடாக நினைத்திருந்தேன். ஆனால் அது முற்றிலும் தவறு. அசிங்கமான மேற்கத்திய வாழ்க்கை முறையைத் தேர்வு செய்யும் பெண்களே, ”நீங்கள் எதை இழந்து கொண்டிருக்கிறீர்கள் என்பதை அறிய மாட்டீர்கள்.”
தகவல் உதவி : UK TJ

தினமும் அழிக்கப்படும் முஸ்லீம்கள்

பர்மா (மியன்மார்) வில் தினமும் அழிக்கப்படும் முஸ்லீம்கள். – உலக நாடுகள் மவுனம் காப்பது ஏன்?

மியன்மார் என்று தற்போது அழைக்கப்படும் பர்மாவில் கடந்த சில நாட்களாக அங்கு வாழும் முஸ்லீம்களை அங்குள்ள அரசு துட்டுக் கொண்டு குவித்து வருகின்றது.
பா்மாவில் வாழும் மக்களில் சுமார் 15 லட்சத்திற்கு மேற்பட்டவர்கள் முஸ்லீம்கள் அதில் 10 லட்சம் பேர் பர்மாவைப் பிறப்பிடமாகக் கொண்ட பர்மியர்கள் 5 லட்சத்திற்கு மேற்பட்டவர்கள் வங்காலத்தைச் சேர்ந்த முஸ்லீம்கள்.
எகிப்தில் இருக்கும் ஒரு ஷரீஆ கல்லூரியில் கல்வி பயின்று வரும் பர்மாவைச் சேர்ந்த முஸ்லிம் இளம் பெண்மணி ஆயிஷா ஸூல்ஹி இது தொடர்பாக வெளியிட்டுள்ள கருத்துக்கள் பர்மாவில் வாழும் முஸ்லீம்களின் தற்போதைய நிலையை தெளிவாக விளக்குகின்றது.

“அல் வதனுல் மிஸ்ரிய்யா” என்ற பத்திரிக்கைக்கு ஆயிஷா ஸூல்ஹி அளித்துள்ள பேட்டியில் பின்வரும் தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.
பர்மாவில் உள்ள முஸ்லிம்களுக்கு மதுபானம், பன்றி இறைச்சி அல்லது மரணம் இந்த மூன்றில் எதை வேண்டுமானாலும் தேர்வு செய்து கொள்ள முடியும் என்று துன்புறுத்தப் படுகின்றார்கள். ஆனால் அங்குள்ள முஸ்லீம்கள் மரணத்தைத் தான் தங்கள் தேர்வாக எடுத்துக் கொள்கின்றார்கள்.
பர்மாவில் முஸ்லிம்கள் அனுபவிக்கும் கொடுமைகளை கண்டும், கேட்டும் நான் நரக வேதனையை அனுபவிக்கிறேன். எனது நாட்டைச் சார்ந்தவர்கள் கூட்டாக கொலைச் செய்யப்படும் பொழுது எவ்வாறு நாம் மெளனமாக இருக்கமுடியும்?

பர்மா முஸ்லிம்கள் இரத்த சாட்சிகளை மற்றவர்களுக்கு கொடையாக வழங்குகின்றார்கள் என்பதுதான் மிக முக்கிய செய்தியாகும்.
பல தினங்களாக நான் எனது குடும்பத்தினரை தொலைபேசி வழியாக தொடர்பு கொள்ள முயற்சிக்கிறேன். ஆனால், தாக்குதலில் அவர்களுடைய வீடுகள் தகர்க்கப்பட்டு பங்களாதேசுக்கு அகதிகளாக அவர்கள் சென்றுள்ளனர். எனது சில உறவினர்களும், நண்பர்களும் கொடூரமாக கொலைச் செய்யப்பட்டுள்ளனர். ஏராளமான பெண்கள் பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொடுமை இழைக்கப்படுகின்றனர்.” இவ்வாறு ஆயிஷா ஸூல்ஹி கூறியுள்ளார்.
முஸ்லீம்கள் பற்றி வாய் திறக்காத ஆங் சாங் சூகி.
ஜனநாயக ரீதியில் போராடியமைக்காக பல ஆண்டுகள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டு கடந்த சில வாரங்களுக்கு முன் விடுதலை செய்யப்பட்டவரும், பர்மாவின் முக்கிய எதிர்க் கட்சியான நேசனல் லீக்ஃபார் டெமோக்ரெஸியின் (என்.எல்.டி) தலைவரும் சமாதானத்திற்கான நோபல் பரிசு வென்றவருமான “ஆங் சாங் சூகி” முஸ்லீம்களுக்கு எதிரான படுகொலை தொடர்பில் இது வரைக்கும் மவுனம் சாதித்து வருவது அங்குள்ள முஸ்லீம்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆங் சாங் சூகியின் மவுனம் தொடர்பில் பங்காஷ் பிரஸ் டி.வி யில் கருத்து வெளியிட்ட “ஷஹீத் சுல்ஃபிகர் அலி பூட்டோ இன்ஸ்ட்யூட் ஆஃப் சயன்ஸ் அண்ட் டெக்னாலஜியின் பேராசிரியரும், பிரபல அரசியல் பகுப்பாய்வாளருமான குலாம் தாகி” அவர்கள் “ஆங் சாங் சூகி” யின் மவுனம் குற்றகரமானது என சாடுகின்றார்.
கடந்த மாதம் ஜெனீவாவில் வைத்து பத்திரிக்கையாளர்களை சந்தித்த “சூகி” பர்மா முஸ்லீம்கள் அந்நாட்டு குடிமக்கள் தானா? என்ற கேள்விக்கு தெரியாது என்று லாவகமாக பதிலளித்து தப்பித்துக் கொண்டார்.
சமாதானத்திற்கான நோபல் பரிசு வென்றவர் தனது நாட்டின் குடிமக்கள் தாக்கப்படுவது குறித்து அமைதியாக இருப்பதும், அவர்கள் தனது நாட்டினர் தானா என்பதே தெரியாது என்று சொல்வதும் ஆச்சரியமாக இருக்கிறது.
இந்த கொடூர நிகழ்வுகள் தொடர்பில் இது வரைக்கும் எந்த உலக நாடுகளும் வாய் திறக்காமல் மவுனம் காக்கின்றன. குறிப்பாக எந்த அரபு நாடும் இது தொடர்பில் கருத்துக்களோ கண்டனங்களோ தெரிவிக்கவில்லை. என்பது மிகவும் வருந்தத் தக்க விஷயமாகும்.
அன்பின் இஸ்லாமிய உறவுகளே!
பர்மாவில் நமது சகோதரன் கொல்லப்படுகின்றான், நம் சகோதரிகள் கற்பழிக்கப்படுகின்றார்கள், இவர்களுக்காக நமது இரு கரங்களையும் ஏந்தி ஏக இறைவனிடம் பிரார்த்திக்குமாறு அன்பாய் வேண்டுகின்றோம்.

 

 

முஸ்லிம்களே! உஷார்


முஸ்லிம்களே!உஷார்! போலிக்குர்ஆன்!


குர்ஆனுக்கெதிராக சூழ்ச்சிகள்.
இஸ்லாம் தோன்றியது முதல் இன்று வரை அதன் தூய கொள்கைகளையும் வேத நெறிகளையும் தகர்க்க பல் வேறு சூழ்ச்சிகள் பல்வேறு கால கட்டங்களில் நடந்தே வந்துள்ளன.

நபி பெரமானார் (ஸல்) அவர்கள் வாழ்ந்த காலத்திலும் அதற்குப் பின்னரும் எதிர்த்தவர்கள் அரசியல் ரீதியாகவும், கொள்கை ரீதியாகவும் பல முயற்சிகளை பல் வேறு வடிவங்களில் மேற் கொண்டனர். அனைத்திலும் தோல்வியே கண்டனர். இருந்தும் இஸ்லாத்தை அழிக்க முடியவில்லையே அது மிகவேகமாக வளர்ந்து கொண்டே செல்கிறதே என்ற ஆவேசம் குறையவே இல்லை.
கோடிக்கணக்கில் பணத்தை அள்ளி வீசி பல முனைத் தாக்குதல்களை தொடர்ந்த வண்ணமுள்ளனர்.

அல்குர்ஆனை அழிக்க பெரும் சதி!
முஸ்லிமகளை வழிநடத்தும் அருள்மறை அல்குர்ஆனை அழித்துவிட்டால் தீர்வு கிடைத்துவிடும் என்று பகற்கனவு கண்டு வருகின்றனர்.அதற்காக,
ஷீஆயிஸம்,காதியானியிஸம்,சூபித்துவம்,தரீக்காயிஸம் போன்ற பல இயக்கங்களை தோற்றுவித்தும் அது முடியாமற் போயிற்று.


பல இலட்சம் பிரதிகள்!
குர்ஆனிலுள்ள யூதர்களுக்கெதிரான வசனங்களை நீக்கிவிட்டு அவர்களுக்கு இசைவான வசனங்களை சேர்த்து பல இலட்சம் பிரதிகளை அச்சடித்து ஆப்ரிக்க நாடுகளிலும்,ஆசிய நாடுகளிலும், குறிப்பாக இந்தோனேசியா போன்ற நாடுகளிலும் வினியோகித்தனர். கூலிப்படையினரின் சூழ்ச்சிகளில் அகப்பட்ட அப்பாவிமக்கள் யாது செய்வதென அறியாது திகைத்தனர்.
இந்தோனேசியாவில் ”மேடான்” என்ற நகரில் மட்டும் 25000 பிரதிகள் வினியோகிக்கப்பட்டன. இந்தத் தகவலை நேரிலே கண்டு நாம் கூறியதும், ‘ பல நாடுகளில் விற்பனைக்காகவும், வினியோகத்திற்காக வுமிருந்த பிரதிகளை ‘ராபிதத்துல் ஆலமுல் இஸ்லாமியா’ என்ற உலக இஸ்லாமிய அமைப்பு அவற்றை வாங்கி தீ வைத்துக் கொளுத்தின.

அமெரிக்கப் போலிக் குர்ஆன்
யூதர்களைத் தெடர்ந்து அமெரிக்காவின் சதிகள் தொடந்தன. இஸ்லாத்திற்கெதிராக பல்வேறு புத்தகங்களையும், இணைய தளங்களையும் வெளியிட்டும் ஆத்திரம் அடங்கவில்லை. ஸல்மான் ருஷ்தி, தஸ்லீமா நஸ்ரின் போன்ற போலி முஸ்லிம்களை வைத்து பல நூல்களையும் கதைகளையும் எழுதினர்.


எஃகு போன்ற உறுதிமிக்க கொள்கைப்பிடிப்புமிக்க முஸ்லிம்களை எந்த வகையிலும் அசைக்க முடியவில்லை. நாடகம் தொடர்ந்தது! தங்கள் வேதங்களிலே விரும்பியவாறு எழுதி விளையாடியது போன்று குர்ஆனிலும் விளையாட மீண்டும் தொடங்கியுள்ளனர். பல யூத கிறித்தவ அறிஞர்களின் ஆதரவோடும் ஆக்கங்களோடும் புதிய குர்ஆன் ஒன்றை அரங்கேற்றியுள்ளனர். இதோ ! படியுங்கள்.!


போலிக்குர்ஆன்!


பெயர் : ” The True Furqan” (உண்மைக் குர்ஆன்)
ஆபத்தான விளைவை ஏற்படுத்தும் சூது நிறைந்த ஒரு புதிய குர்ஆனை அமெரிக்கர்கள் உருவாக்கி ‘தி ட்ரூ ஃபுர்கான்’ – உண்மையான குர்ஆன்- என்ற பெயரில் குவைத் பாடசாலைகளில் விநியோகம் செய்துள்ளனர். மேலும் ‘சாத்தானின் வசனங்கள்’ எனவும் குறிப்பிட்டுள்ளனர்.


இத்தகவலை ‘அல் புர்கான்’ வார இதழ் கண்டுபிடித்து அதை வெளியிட்டுள்ள இரு புத்தக வெளியீட்டாளர்கள் பெயர்களையும் அம்பலப்படுத்தியுள்ளது. ‘ஒமேகா-2001, ஓய்ன் பதிப்பகம்’ ஆகிய இரு பெரிய நிறுவனங்கள் தான் இந்த கைங்கரியத்தை அரங் கேற்றியுள்ளது என்பதையும் வெளியிட்டுள்ளது.
அது மட்டுமல்ல ‘ இது 21-வது நூற்றாண்டின் தலை சிறந்த குர்ஆன்’ எனவும் விமர்சனம் செய்துள்ளது.

366 பக்கங்களைக் கொண்ட இந்நூல் அரபி ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் காணப்படுகிறது. இதனை குவைத் தனியார் ஆங்கில பாடசாலைகளில் வினியோகமும் செய்துள்ளனர்.

இந்நூலில் 77அத்தியாயங்களே உள்ளன.அதில் பாத்திஹாவுடன் அல்ஜனா, இஞ்சீல் என இரு புதிய அத்தியாயங்களும் சேர்க்கப் பட்டுள்ளன.

அத்தியாயத்தின் காப்பு வாக்கியமான பிஸ்மில்லாஹ்வுக்குப் பதிலாக ஒவ்வொரு அத்தியாயத்தின் துவக்கத்திலும் முக்கடவுள் கொள்கையைக் குறிக்கும் (Trinity-திரீத்துவம்) ‘முக்கடவுள்களின் அருளால்’ என்ற நீண்ட வாக்கியத்தையும் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த புதிய குர்ஆன் உலகின் எல்லா இஸ்லாமியர்களின் நம்பிக்கையைத் தகர்க்கும் வகையில் அவர்களின் உணர்வுளை சீண்டியுள்ளது.
நச்சுக்கருத்துகளை திணித்துள்ளனர்.


அது மட்டுமல்ல, அதில்

1. ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களை மணப்பது கூடாது.(அதாவது பலதாரமணம் கூடாது)

2 . விவாகரத்துக்கு அனுமதி கிடையாது.

3. நடைமுறையில் உள்ள சொத்துரிமை சட்டங்களை மாற்றி உயில் மூலம் விரும்பியவருக்கு சொத்துரிமை வழங்கலாம்.
 
4. இஸ்லாத்தில் ஜிஹாத்- மார்க்கப்போர் ‘ஹராம்’ தடைசெய்யப் பட்டுள்ளது.மேலும்,

அல்லாஹ்வின் வல்லமையை விமர்சனமும் செய்து பல நச்சுக் கருத்துக்களையும் திணித்து ‘மூன்று டாலர் விலைதான்’ என மலிவு விலையிலும் வெளியிட்டுள்ளது.

அல்லாஹ்வின் பாதுகாப்பு

கோடிக்கணக்கில் செலவு செய்து எப்படிப்பட்ட சூழ்ச்சிகளை உலகளாவிய அளவில் செய்தாலும் அல்லாஹ்வின் அருள்மறை குர்ஆனை அணைத்துவிட முடியாது! அழித்துவிட முடியாது! ‘அதை நாம் பாதுகாத்தே தீருவோம்’ என்ற உத்தரவாதத்தை அதை அருளிய நாயனே நமக்குத் தந்துள்ளான்.

இதோ அந்த உத்தரவாதம்

உலகப்பொது மறையை வழங்கிய வல்ல நாயன் அல்லாஹ் கூறுவதைக் கேளுங்கள்.

َّ إِنَّا نَحْنُ نَزَّلْنَا الذِّكْرَ وَإِنَّا لَهُ لَحَافِظُونَ


நிச்சயமாக நாமே இந்த குர்ஆனை அருளினோம்! மேலும் நாமே இதை பாதுகாப்போம். (الحجر: ٩அல்ஹுஜர் 15:09)


يُرِيدُونَ لِيُطْفِؤُوا نُورَ اللَّهِ بِأَفْوَاهِهِمْ وَاللَّهُ مُتِمُّ نُورِهِ وَلَوْ كَرِهَ الْكَافِرُون

الصف: ٨)
நிச்சயமாக அல்லாஹ்வின் வேதத்தின் ஒளியை தங்களின் வாய்களால் ஊதிஅணைக்க நினைக்கின்றனர். மேலும் நிராகரிப்பவர்கள் வெறுத்த போதிலும் அல்லாஹ் அதை (அணைக்கவிடாமல்) பூரணமாக்கவே விரும்புகிறான். (அஸ்ஸஃப் 61:08)

முஸ்லிம்களே! விழித்தெழுங்கள்!


இன்னுமா தூங்கிக் கொண்டிருக்கிறீர்கள் ? நமது இறையருள் வேதமாம் உலகப்பொது மறை அல்குர்ஆனின் மாண்பினைப் புரியாது அதை துணியில் சுற்றி ஏதோ வீட்டு மாடத்தில் கைக்கெட்டா விட்டத்தில் தூக்கி வீசியதன் விளைவு தான் இன்று நமது எதிரிகள் நம் குர்ஆனோடு விளையாடத் துவங்கியுள்ளனர்.

அடுத்து படியுங்கள்! குர்ஆன் உலகுக்கே ஒரு சவால்……




‘சுபஹ்’ குனூத் ஓதப்பட வேண்டுமா?

‘சுபஹ்’ குனூத் ஓதப்பட வேண்டுமா?



சுபஹ் குனூத்

மௌலவி அபூ நதா M.J.M.ரிஸ்வான் மதனி
- அஷ்ஷேக்: எம். ஜே.எம். ரிஸ்வான் (மதனி)
to thank islamkalvi.comபுகழ் அனைத்தும் அகிலங்களின் அதிபதி அல்லாஹ் ஒருவனுக்கே உரித்தானது. அவனது அருளும், சாந்தியும் நபிகள் நாயகம் முஹம்மத் (ஸல்) அவர்கள் மீதும், அவர்களின் குடும்பத்தவர் அனைவர் மீதும் நிலையாக உண்டாகட்டுமாக!
மதிப்புக்குரிய இஸ்லாமிய சகோதரர்களே! ‘சுபஹ்’ குனூத் ஓதப்பட வேண்டுமா? வேண்டாமா? என்ற கேள்விக்கு அது நபிவழிக்கு அப்பாற்பட்ட ஒரு நடைமுறைதான் என்பதை இஸ்லாமிய மூலாதாரங்களை அடிப்படையாகவும், தலைசிறந்த இமாம்களின் நூற்களின் தீர்ப்புக்களை ஆதாரமாகக் கொண்டும் ‘சுபஹ் குனூத் ஓர் ஆய்வு’ என்ற இத்தொடரில் விரிவானதோர் ஆய்வை சமர்ப்பித்துள்ளோம்.
இதனை சாதாரண பிரச்சினை என அலட்சியம் செய்யும் இஸ்லாமிய இயக்க காவலாளிகளும், நவீன அழைப்பாளர்களும் இதுபோன்ற மார்க்க அம்சங்களுக்கான சரியான தீர்வை முன்வைக்காது, தம்மை ஒதுக்கிக் கொள்வதால் சாதாரண இந்த விடயத்தில் மக்கள் மத்தியில் காணப்படும் முரண்பாட்டை நீக்க வேண்டிய அவசியத்தை உணரவில்லை என எண்ணத் தோன்றுகிறது.
முஸ்லிம் மக்கள் மத்தியில் பாரிய சர்ச்சைகளையும், வேற்றுமையையும் தோற்றுவித்துள்ள ‘சுபஹ் குனூத்’திற்கான சரியான தீர்வு இஸ்லாமிய அழைப்பாளர்களால் முன்வைக்கப்படுகின்ற போது அல்லாஹ்வின் அருளால் சமுதாய ஐக்கியம் பேணப்படுவதுடன், அதனால் தோன்றும் குழப்பங்களும் அகன்று, சமூக மறுமலர்ச்சியும் ஏற்படும் என்பதில் சந்தேகமில்லை.
பல நூறு வருடங்களுக்கு முன்னால் வாழ்ந்த இஸ்லாமிய அறிஞர்களால் இதுபோன்ற பிரச்சினைகளுக்கு ஆய்வின் அடிப்படையில் தரப்பட்டுள்ள தீர்வை சீர்திருத்தவாதிகள் கருத்தில் கொண்டால் அந்தப் பெருமக்களின் சமுதாய அக்கறையை மதிப்பிட்டுக் கொள்ளலாம்.
அந்த வகையில் இதுபோன்ற பிரச்சினைகள் நம்போன்றோருக்கு வேண்டுமானால் புதிதாகவும், சிறியதாகவும், சில்லறையாகவும் காட்சியளிக்கலாம். ஆனால் நபித்தோழர்கள், அவர்களின் வழிவந்த இமாம்கள் மத்தியில் பெரிதாகவே கணிக்கப்பட்டிருக்கிறது.
இது பற்றிய முழுவிபரங்களையும் ஹதீஸ் நூற்களிலும், இது தொடர்பான இமாம்களின் மறுப்புக்களில் இருந்தும் அறியலாம். அவர்களின் வழிமுறைகளைத் தழுவி நாமும் இந்த ஆய்வை முன்வைத்துள்ளோம். நடுநிலையுடன் அதனை அணுகும்படி இஸ்லாமிய சகோதரர்களை வேண்டிக் கொள்கிறோம். அல்லாஹ் அனைவருக்கும் அருள் செய்யப் போதுமானவன்.
இப்படிக்கு
எம். ஜே. எம். ரிஸ்வான் (மதனி)
மொபைல்:-0094773730852
சுபஹ் குனூத்
புகழ் அனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே உரித்தானது. அவனது அருளும், கருணையும், சாந்தியும் நபிகள் நாயகம் முஹம்மத் (ஸல்) அவர்கள் மீதும், அவர்களின் குடும்பத்தவர், தோழர், இமாம்கள், மற்றும் இறை விசுவாசத்தோடு உலகைப்பிரிந்து மண்ணறைகளில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற முஸ்லிமான சகோதர, சகோதரிகள் அனைவர் மீதும் நிலையாக உண்டாகட்டுமாக!
மதிப்புக்குரிய இஸ்லாமிய சகோதர, சகோதரிகளே! முஸ்லிம்கள் மத்தியில் மார்க்க அம்சங்கள் பலதில் பல முரண்பாடுகள் தோன்றியும், அதற்கான சரியான தீர்வை அத்துறை சார்ந்த ஆலிம்களால் அல்குர்ஆன், அஸ்ஸுன்னா வழியில் முன்வைக்கப்படுவதற்கு பதிலாக அவர்கள் சார்ந்திருக்கும் மத்ஹபின், அல்லது ஊர்வழமையின் அடிப்படையில் முன்வைக்கப்படுவதால் முரண்பாடுகள் தொடருகிறதே தவிர அவை தீர்ந்ததாக இல்லை.
அல்குர்ஆனையும், அஸ்ஸுன்னாவையும் ஆய்வு செய்து அதன் சட்டங்களை அகழ்ந்தெடுத்து தீர்வு சொல்வதே இமாம்களின் பணியாக இருந்துள்ளது என பிரச்சாரம் செய்யும் மத்ஹப் சார்ந்த மௌலவிகளால் அல்குர்ஆன், அஸ்ஸுன்னா வழி நின்று மார்க்கப் பிரச்சினைகளுக்கான தீர்வை முன்வைக்கும் திறமை இல்லாத காரணத்தாலும், அவற்றின் அடிப்படையில் முன்வைக்கப்படும் சரியான தீப்புக்களை ஏற்று, அமுல் செய்யும் மனோபக்குவம் இல்லாமையினாலும், தாம் படித்த ஓரிரு நூல்களை முன்னிலைப்படுத்தி வழங்கப்படும் தீர்ப்புக்கள் சரியானவையா? பிழையானவையா? என்ற எந்தவிதமான ஆய்வுமின்றி முன்வைப்பதாலும் தீர்ப்புக்கள் குழப்பமாகவும், குதர்க்கமாகவும் தரப்படுவதை அவதானிக்க முடிகிறது.
‘சுபஹ்குனூத்’ விஷயத்திலும் இவர்களின் நிலைப்பாடும் இதுவே. எனவேதான் அதன் உண்மை நிலை பற்றி நமது இத்தொடரில் ஆய்வு செய்ய இருக்கிறோம். நான் ‘ஷாபிஈ மத்ஹப்’ சார்ந்தவனாக இருப்பதால் அதைப்பற்றி நான் ஏன் அலட்டிக் கொள்ள வேண்டும்? எனது ஊரில் உள்ளவர்கள் எப்படி நடக்கிறார்களோ, எனது மௌலவிகள் என்ன போதித்தார்களோ அவ்வாறுதான் நானும் நடப்பேன் என்பது போன்ற அலட்சியமான சிந்தனைகளை விட்டுவிட்டு ‘சுபஹ்குனூத்’ பற்றி என்னதான் எடுத்தெழுதப்படுகின்றது என்பதைக் கொஞ்சம் சிந்தித்து, பின்னர் முடிவு செய்யும்படி உங்களிடம் வினயமாக வேண்டிக் கொள்கின்றோம்.
நவீன காலத்தில் மார்க்கத்தின் பெயரால் எழுந்துள்ள பல பிரச்சனைகள் ஒரு தலைப்பட்சமாக நோக்கப்படுவதால் இஸ்லாத்தின் தூய்மையான கருத்தை சில நேரம் நம்மை அறியாமலே நாம் புறம் தள்ளுகின்றோம். எனவே கருத்து யாரிடம் இருந்து வந்தாலும் நமக்கு முரணானது என்று பார்ப்பதை விடுத்து, அது இஸ்லாமிய மாக்கத்தின் தூய்மையைக் காப்பதாக இருந்தால் அதற்கு நான் துணை நிற்பேன் என்ற நல்லெண்ணத்துடன் வாழ்வதே ஒரு முஸ்லிமின் உயரிய பண்பாகும்.
மொழி வழக்கில் குனூத் :-
மொழி அடிப்படையில் ‘குனூத்’ என்ற சொல் வழிப்படுதல், நின்று வணங்குதல், இறையச்சம், தொழுகையில் -பேசாது- மௌனம்காத்தல், தொழுகை, பிரார்த்தனை போன்ற பல விரிவான பொருளைத் தரும் சொல்லாக அல்குர்ஆனிலும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பொன்மொழிகளிலும் ஆளப்பட்டிருப்பட்டிருப்பதை பின்வரும் ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டு விளங்கலாம்.
இந்த அடிப்படையில் அல்குர்ஆனில் إِنَّ إِبْرَاهِيمَ كَانَ أُمَّةً قَانِتًا لِلَّهِ النحل120 ‘நிச்சயமாக இப்ராஹீம் (அலை) அவர்கள் அல்லாஹ்வுக்கு வழிப்பட்ட சமுதாயமாகத் திகழ்ந்தார் என்றும்,
أَمْ مَنْ هُوَ قَانِتٌ آَنَاءَ اللَّيْلِ الزمر9 இரவெல்லாம் நின்று வணங்குபவனுக்கு (சமமாவானா?) என்றும்
وَمَنْ يَقْنُتْ مِنْكُنَّ لِلَّهِ وَرَسُولِهِ وَتَعْمَلْ صَالِحًا الأحزاب31 (நபியின் மனைவியரே)! உங்களில் எவர் அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் வழிப்படுகின்றார்களோ என்றும்.
يَا مَرْيَمُ اقْنُتِي لِرَبِّكِ آل عمران43 ‘மர்யமே! உனது இரட்சகனுக்கு பணிந்து நடப்பாயாக! என்றும் وَقُومُوا لِلَّهِ قَانِتِينَ البقرة 238 (மௌனமாக) பணிந்தவர்களாக அல்லாஹ்வை நின்று வணங்குங்கள்’ என்றும் திருமறை குர்ஆனிலும்
أفضل الصلاة طول القنوت ‘தொழுகையில் சிறந்தது நீண்ட நிலைகளையுடைய தொழுகையாகும்’ (முஸ்லிம்) என்றும், مثل المجاهد في سبيل الله كمثل القانت الصائم ‘இறைபாதையில் போரிடும் போராளிக்கு உதாரணம் இரவில் தொழுது பகல் காலங்களில் நோன்பு நோற்று, நின்று வணங்குபவனுக்கும் உரிய உதாரணம் போன்றதாகும். (புகாரி) என்றும் இடம் பெறும் சொற்பிரயோகங்களை அவதானித்தால் ‘குனூத்’ என்ற வேர்ச்சொல்லில் இருந்து பிறந்த கிளைச்சொற்களில் பல பொருட்கள் ஆளப்பட்டிருப்பதை அறியலாம்.
(ஆதார நூல்: இமாம் சைலயீ (ரஹ்) அவர்களின் நஸபுர்ராயா. பாகம்: 02- பக்கம்: 132 -ஐ பார்க்கவும்). மேலதிக விளக்கங்களுக்கு பத்ஹுல்பாரி ஹதீஸ் இலக்கம் 1004ன் விளக்கம். ‘லிஸானுல் அரப். பாகம்: 02- பக்கம்: 73 ‘முக்தாறுஸ்ஸிஹாஹ் பாகம்: 1-பக்கம்: 230 ஆகிய நூல்களைப் பார்வையிடவும்.

Popular Posts

Popular Posts