பிரிட்டனை ஆளும் ஷரியத் சட்டங்கள்!
இஸ்லாத்தின் சட்டங்களைப் பற்றிய பயம் மேலிட்டதால் சில பிரிட்டனைச் சேர்ந்த குடிமக்கள் ஷரியாசட்டங்களுக்கு பிரிட்டிஷில் இடமில்லை என்ற கோஷத்தை எழுப்பினர். 1982ல் இருந்து இயங்கி வரும் ஷரிய கோர்ட்டுகள் முஸ்லிம்கள் தங்களுக்குள் எற்படும் சிவில பிரச்னைகளை தாங்களாகவே மார்க்க அறிஞர்களின் துணைகொண்டு தீர்த்துக் கொள்ள ஏற்படுத்தப் பட்டது. இதைக் கண்டு பொறுக்காத ஒரு சிலர் முஸ்லிம்களுக்கு எதிரான போராட்டத்தில் பயன்படுத்திய வார்த்தைகள்.
“Hey..hey..ho..ho..sharia must go”
“We want womans rights”
“One equal rights for all”
“Long live equality”
இதிலிருந்து என்ன தெரிகிறது? போராட்டத்துக்கு வந்தவர்களுக்கு இஸ்லாத்தை பற்றிய அடிப்படை அறிவு கொஞ்சம் கூட இல்லை என்பது தெளிவாகிறது. இஸ்லாம் பெண்களை கொடுமைபடுத்தவதாகவும் இவர்கள் கோஷமிட தயங்கவில்லை. ஆனால் இதற்கு மாற்றமாக ஆண்களை விட பெண்களே இஸ்லாமிய சட்டத்தை கடைபிடிப்பதில் மிகவும் ஆர்வம் காட்டுகிறார்கள். படித்த பெண்களிலிருந்து பாமர பெண்கள் வரை குர்ஆனை தங்களது வாழ்வியலாக வைத்துக் கொள்வதில் மிகுந்த அக்கறை . காட்டுகின்றனர்
சில ஆண்டுகளிலேயே ஷரியா கோர்ட்டுகளை நாடுவோரின் எண்ணிக்கை கட்டுக்கடங்காமல் போனது. மேலும் விசேஷமாக முஸ்லிம் அல்லாதவர்களும் ஷரியா கோர்ட்டை தற்போது நாடுகிறார்களாம்.
இது பற்றிய பிபிசி யின் தமிழ்ப் பிரிவு அளித்த செய்தியை இனி பார்ப்போம்.
பிரிட்டனில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் குடும்பத் தகராறுகள், பணக் கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் வியாபாரப் பிரச்சனைகளுடன் தொடர்புடைய வழக்குகளின்போது ஷரியா கவுன்சில்களூடாக தீர்வு பெற்றுக் கொள்கிறார்கள்.
பிரச்சனைகளை விரைவாகவும் சிக்கனமாகவும் தீர்த்துக்கொள்ள முடிவதால் முஸ்லிம்களுடனான வழக்குகளின் போது முஸ்லிம்கள் அல்லாதவர்களும் ஷரியா அமைப்புகளை பெருமளவில் நாடுவதாக கூறப்படுகின்றது.
1982ம் ஆண்டில் இருந்து ஷரியா கவுன்சில் முறை இயங்கிவரும் பிரிட்டனில் கிட்டத்தட்ட 85 ஷரியா நீதிமன்றங்கள் இருப்பதாக மதிப்பிடப்படுகின்றது.
ஷரியா இஸ்லாமிய சட்டங்களை அடிப்படையாகக் கொண்டு முஸ்லிம் அறிஞர்கள் வழக்குகளுக்கு இங்கு தீர்ப்பு வழங்குகின்றனர்.
இதேவேளை, பிரிட்டனில் ஷரியா நடைமுறைகள் பெண்ணுரிமைகளுக்கு எதிராக இருப்பதாகக் கூறும் சில பெண்ணுரிமை அமைப்புகள் அந்த நடைமுறைகளைத் தடைசெய்ய வேண்டும் என்று வலியுறுத்துகின்றமை குறிப்பிடத்தக்கது
0 Response to "பிரிட்டனை ஆளும் ஷரியத் சட்டங்கள்!"
Post a Comment