பெண்களின் தற்காப்புக் கவசம்!

பெண்களின் தற்காப்புக் கவசம்!

வீரர்களின் உயிர் காப்பது தலைக் கவசம் எனில்,பெண்களின் மானம் காப்பது 'ஹிஜாப்' எனும் கவசம்

waseem
இன்றைய காலத்தில் பெண்கள் தற்காப்புக் கலை என்ற பெயரில் கற்று வருகிறார்கள். ஆனால் பெண்களுக்கு முதல் முக்கிய தற்காப்பு எது தெரியுமா? அது தான் ஹிஜாப்.

பர்தா என்பதன் அரபிச் சொல் தான் ஹிஜாப். பெண்கள் தங்களின் அங்கங்களை மறைத்துக் கொள்ளும் வகையான ஆடையைக் கொண்டு தங்களை மறைத்துக் கொள்ள வேண்டும் என்று இஸ்லாம் கட்டளையிடுகிறது.

இஸ்லாம் பெண்களை உயர்வாகவும், கண்ணியமானவர்களாகவும் மதிக்கிறது. ஒரு பொருள் பேணிப் பாதுகாப்படும் பொழுது தான் அதன் மதிப்பு உயரும். அது சிறப்புடனும் பேசப்படும். இவ்வாறு தான் பெண்களை உயர்வாகக் கருதி ஹிஜாப் முறையைக் கையாளச் சொல்கிறது இஸ்லாம். இதைத் திருக்குர்ஆனில் அல்லாஹ் இவ்வாறு கூறுகிறான்:நபியே! (முஹம்மதே!) உமது மனைவியருக்கும், உமது புதல்வியருக்கும், (ஏனைய) நம்பிக்கை கொண்ட பெண்களுக்கும் முக்காடுகளைத் தொங்க விடுமாறு கூறுவீராக! அவர்கள் (ஒழுக்கமுடைய பெண்கள் என்று) அறியப்படவும், தொல்லைப்படுத்தப்படாமல் இருக்கவும் இது ஏற்றது. அல்லாஹ் மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையோனாகவும் இருக்கிறான். (அல்குர்ஆன் 33:59)

தெருக்கள், கடை வீதி, பேருந்து நிலையம், மருத்துவமனை, வங்கி போன்ற அனைத்து இடங்களிலும் ஆண்களுடன் பெண்கள் கலந்து இருப்பார்கள். பெண்களை கெட்ட எண்ணத்துடன் பார்க்கும் ஆண்கள் இருக்கும் இப்படிப்பட்ட இடங்களில் பெண்கள் ஒழுக்கத்துடன் பயமின்றி சென்று வர ஹிஜாப் அவசியமாகின்றது.

ஹிஜாப் அணிந்த பெண் கெட்ட எண்ணம் கொண்ட ஆண்களின் பார்வைகளிலிருந்து பாதுகாப்பு பெறுகிறாள். இப்படி ஹிஜாபின் சிறப்பை அறிந்தவர்கள் இஸ்லாமிய பெண்கள் மட்டுமல்ல. (எங்கள் ஊர் தொண்டியில்) மாற்று மதத்தைச் சேர்ந்த, பருவடைந்த மாணவிகள் ஹிஜாபுடன் பள்ளிக்குச் சென்று வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படி ஹிஜாப் அணிந்து வெளியில் செல்பவர்கள் தலையில் பூ வைத்துக் கொண்டு, மேக்கப், லிப்ஸ்டிக் போட்டு, சென்ட் போன்ற நறுமணப் பொருட்களை உபயோகித்து ஹிஜாபுடன் சென்றால் ஹிஜாபின் நோக்கமே பாழாகிவிடும். ஹிஜாப் அணிபவர்கள் முகத்தையும், இரு முன் கைகளையும் தவிர வேறெந்த அலங்காரத்தையும் வெளிக்காட்டாக் கூடாது.

அல்லாஹ் தன் திருமறையில் கூறுகிறான்:

தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும் தமது கற்புகளைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட பெண்களுக்குக் கூறுவீராக! அவர்கள் தமது அலங்காரத்தில் வெளியே தெரிபவை தவிர மற்றவற்றை வெளிப்படுத்த வேண்டாம். தமது முக்காடுகளை மார்பின் மேல் போட்டுக் கொள்ளட்டும்(அல்குர்ஆன் 24:31)

மேலும் ஒழுக்கமுடன் வாழும் பெண்களுக்கு மறுமையில் அல்லாஹ் மகத்தான கூலியை வைத்திருப்பதாகக் கூறுகின்றான்.

முஸ்லிமான ஆண்களும், பெண்களும், நம்பிக்கை கொண்ட ஆண்களும், பெண்களும், கட்டுப்பட்டு நடக்கும் ஆண்களும், பெண்களும், உண்மை பேசும் ஆண்களும், பெண்களும், பொறுமையை மேற்கொள்ளும் ஆண்களும்,பெண்களும், அடக்கமாக நடக்கும் ஆண்களும், பெண்களும், தர்மம் செய்யும் ஆண்களும், பெண்களும், நோன்பு நோற்கும் ஆண்களும், பெண்களும், தமது கற்பைக் காத்துக் கொள்ளும் ஆண்களும், பெண்களும், அல்லாஹ்வை அதிகம் நினைக்கும் ஆண்களும், பெண்களும் ஆகிய அவர்களுக்கு அல்லாஹ் மன்னிப்பையும், மகத்தான கூலியையும் தயாரித்துள்ளான். (அல்குர்ஆன் 33:35)

ஆண்கள் பெண்களை ரசிக்கக் கூடியவர்களாகவும், பெண்கள் ஆண்களை ரசிக்கக் கூடியவர்களாகவும் படைக்கப் பட்டுள்ளதை நாம் அறிவோம். ஆயினும் இரு பாலரின் ரசனைகளும் வித்தியாசமானவை.

பெண்களின் நிறம், அழகு, இளமை, அல்லது உறுப்புகளின் திரட்சி ஆகியவையே ஆண்களால் ரசிக்கப்படுகின்றன. இதன் காரணமாகத் தான் குறைந்த ஆடையுடன் அல்லது கவர்ச்சியை வெளிப்படுத்திக் காட்டும் இறுக்கமான ஆடையுடன் பெண்கள் காட்சி தரும் போது அதை ஆண்கள் ரசிக்கின்றனர். திரும்பத் திரும்பப் பார்க்க விரும்புகின்றனர். விதி விலக்காக மிகச் சிலர் இருந்தாலும் பொதுவாக ஆண்களின் இயல்பு இது தான்.

அழகான அன்னியப் பெண்ணிடம் எதை எல்லாம் பார்த்து ரசிக்க ஒரு ஆண் விரும்புகிறானோ அவை கண்டிப்பாக மறைக்கப்பட வேண்டும். ஏனெனில் அவளை முழுமையாக ரசிக்கும் உரிமை அவளது கணவனுக்கு மட்டுமே உரியதாகும். மற்றவர்களுக்கு இதில் எந்த உரிமையும் கிடையாது.

பார்ப்பதால் என்ன குறைந்து விடப்போகிறது என்ற கேள்வி தவறாகும். இதனால் ஏற்படக் கூடிய விளைவுகளை அன்றாட வாழ்வில் நாம் சந்திக்கவே செய்கிறோம். தம் மனைவியரை விட அதிக அளவு ரசிக்கத்தக்கவளாக ஒருத்தியைக் காண்பவர்களில் பலர் ரசிப்பதோடு நிறுத்திக் கொண்டாலும் சிலர் முறையின்றி அவளை அடையவும், அனுபவிக்கவும் முயல்வர். கற்பழிப்பு, கொலை வரை கூட இவர்கள் சென்று விடுவதைக் காண முடிகின்றது.

இவ்வளவு மோசமாக நடக்காதவர்கள் கூட மனதளவில் அவளது நினைவிலேயே மூழ்கி விடுகின்றனர். தம் மனைவியருடன் ஒப்பிட்டுப் பார்த்து மனைவியின் மேல் உள்ள ஈடுபாட்டைக் குறைத்துக் கொள்கின்றனர்.

ஒழுக்க வாழ்வில், மிகவும் மோசமாக உலகம் பின்னடைந்திருப்பதற்கு முதற் காரணம் பெண்களின் அரைகுறை ஆடைகளும், ஆண்களைச் சுண்டி இழுக்கும் அலங்காரங்களுமே.

பெண்களைப் பார்த்து ஆண்கள் ரசிப்பது போலவே பெண்களும் ஆண்களை ரசிக்கவே செய்கிறார்கள் என்று சிலர் கூறுகின்றனர். இந்த வாதத்தை உண்மையென்று ஒப்புக் கொண்டாலும் கூட ஹிஜாபை மறுப்பதற்கு இவ்வாதம் வலுவானதன்று.

ஏனெனில் ஆண்கள் பெண்களை ரசித்து விட்டுப் பெண்களின் விருப்பமில்லாமலேயே பலவந்தமாக அவர்களை அனுபவித்து விட முடியும். பெண்கள் ஆண்களை ரசிப்பதாகவே வைத்துக் கொண்டாலும் ஆண்கள் விரும்பாத வரை பெண்களால் ஆண்களைப் பலவந்தமாக அனுபவித்து விட முடியாது.

இந்நிலையில் ஒரு ஆண் எவ்வளவு குறைவான ஆடையுடன் இருந்தாலும் அவனுக்குப் பாதிப்பில்லை. ஆனால் அரைகுறையான, கிளர்ச்சியூட்டக் கூடிய ஆடையை அணிந்திருக்கும் ஒரு பெண்ணுக்கு அவளது அரைகுறை ஆடையால் தூண்டப்பட்ட ஆண்களால் பாதிப்புண்டு என்பதில் ஐயமில்லை.

அவளது விருப்பத்திற்கு மாறாகப் பலவந்தமாக அவள் அனுபவிக்கப்படும் போது அவளது உரிமையும், பெண்மையும், தன்மானமும் பாதிக்கப்படுகின்றன. கற்பழித்த குற்றத்துக்காக தண்டிக்கப்படுவோம் என்று அஞ்சும் கயவர்கள் அவளைக் கொன்றும் விடுகின்றனர்.

ஹிஜாபைக் குறை கூறுவோர் இதைச் சிந்திப்பதில்லை.

நிச்சயமாக 'ஹிஜாப்' பெண்களின் ''மானம் காக்கும் கவசம்'' என்பது மட்டுமின்றி உயிர்காக்கும் கவசம் என்பதிலும் எவ்வித சந்தேகமும் இல்லை.

இவ்வுலகம் முழுவதும் செல்வமாகும். அவற்றில் மிகச் சிறந்தது நல்லொழுக்கமுள்ள பெண்ணாவாள் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம் 2911)

இவ்வாறு குர்ஆன் - ஹதீஸ் ஒளியில் நடக்கும் நல்லொழுக்கமுள்ள பெண்களாக நம் அனைவரையும் அல்லாஹ் ஆக்கி அருள்வானாக!
முத்திரை பதித்த வித்தகர் முஹம்மது (ஸல்)

முத்திரை பதித்த வித்தகர் முஹம்மது (ஸல்)

நபிகள் நாயகம்(ஸல்) அவர்களைப் பற்றி இறைவன் இவ்வாறு கூறுகிறான்,

நாம் உம்மை அகிலாத்தாருக்கு ஓர் அருட்கொடையாக அனுப்பியுள்ளோம் (21:107)

நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் இவ்வுலகத்தில் ஏற்படுத்தியத் தாக்கம், அவர்கள் ஏற்படுத்திய சமூக புரட்சி, அவர்களிடம் இருந்த நற்பண்புகள் ஆகியவைகளை முஸ்லிம்கள் சொல்லுவிதைவிட முஸ்லிமல்லாத அறிஞர்கள், அறிவுஜீவிகள் போன்றோர் சொல்லுவதே இந்த தலைப்பிற்கு மேன்மையாக இருக்கும் என்று நினைக்கின்றோம்.

மைக்கேல் ஹெச். ஹார்ட் என்ற ஆய்வு வல்லுனர் உலகத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய நபர்களில், முதலில் 1000 பேரை தெரிவு செய்தார் பின்பு அதிலிருந்து 100 நபர்களை மட்டும் தேர்வு செய்தார்.இப்படி ஆய்வு செய்து முதலிடத்தை நபிகள் நாயகம்(ஸல்) அவர்களுக்கு கொடுத்தார்.பின்பு இவ்வாறு கூறுகிறார் இந்த உலகத்தில் அளப்பரிய செல்வாக்குடன் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர்களின் பட்டியலில் முஹம்மது அவர்களை முதலாமானவராகத் தேர்ந்தெடுத்தது வாசகர்களில் சிலருக்கு வியப்பாக இருக்கும். மற்றும் சிலர் "ஏன் அப்படி?" என்று வினாவும் தொடுக்கலாம். ஆனால் சமயம், உலகியல் ஆகிய இரு நிலைகளிலும் ஒரு சேர மகத்தான வெற்றி பெற்றவர், வரலாற்றில் அவர் ஒருவரே தாம்.எளிமையான வாழ்க்கைப் படியில் துவங்கிய அன்றைய உலகத்தின் பெரும் கொள்கை ஒன்றை நிறுவி, அதனைப் பரப்பிய பேராற்றல் வாய்ந்த அரசியல் தலைவருமாவார்கள். அவர்கள் உயிர் நீத்து பதினான்கு நூற்றாண்டுகளுக்குப் பின்னரும் அவர்களின் தாக்கம் சக்தி மிக்கதும், எல்லாத் துறைகளிலும் பரவி நிற்பதுமாக இன்றும் விளங்குகிறது.

இந்நிலையில், மனிதகுல வரலாற்றில் முஹம்மது நபியின் தாக்கத்தை-செல்வாக்கை-எப்படிக் கணக்கிடுவது? ஏனைய சமயங்களைப் போன்றே இஸ்லாமும் அதனைப் பின்பற்றுவோரின் வாழ்க்கைகளில் மிகப் பெரும் தாக்கத்தை உண்டு பண்ணி, ஆதிக்கம் செலுத்துகின்றது. இதன் காரணமாகத்தான் உலகப் பெரும் சமயங்களை நிறுவியவர்கள் இந்நூலில் முக்கியமாக இடம் பெற்றுள்ளனர். உலகத்தின் முஸ்லிம்களைவிடக் கிறிஸ்துவர்கள் ஏறத்தாழ இருமடங்கினராக இருப்பினும் கூட முஹம்மது நபியவர்களை ஏசு நாதரைவிட முதன்மையாக இடம் பெறச் செய்திருப்பது, எடுத்த எடுப்பில் புதுமையாகத் தோன்றலாம். இந்த முடிவுக்கு இரண்டு காரணங்கள் உண்டு.

[ஒன்று: கிறிஸ்துவ வளர்ச்சிக்கும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பணியினை முஹம்மது அறநெறி, ஒழுக்க இயல் ஆகியவற்றுக்கு(அவை யூத சமயத்திலிருந்து வேறுபட்ட அம்சங்களைப் பொறுத்தவரை) ஏசுநாதரே காரணமாக இருந்தாலும், அதன் இறைமையியலை(THEOLOGY)உருவாக்கியதில் முதன்மையானவரும், அதன்பால், மக்கள் வருவதற்கு முக்கிய காரணமாக இருந்தவரும், புதிய ஏற்பாட்டின் பெரும் பகுதியின் ஆசிரியருமான தூய பவுல்தான்.( St. PAUL)ஆனால், இஸ்லாத்தின் இறைமையியல் (THEOLOGY), அதன் அறநெறி, ஒழுக்க இயல் யாவற்றுக்குமே பொறுப்பானவர் முஹம்மது நபிதான். அன்றியும் அச்சமயத்தை மக்களிடையே பரப்புவதிலும் இஸ்லாமிய அனுஷ்டான மரபுகளை வகுப்பதிலும் அவர்கள் மூலாதாரமான பொறுப்பினை மேற்கொண்டிருந்தார்கள். மேலும், இறைவனிடமிருந்து தங்களுக்கு நேரடியாய் அருளப்பட்ட அவர்கள் நம்பிய திருவெளிப்பாடான புனித குர்ஆனின் போதகரும் அவர்தாம். முஹம்மது வாழ்நாளிலேயே இவ்விறை வெளிப்பாடுகள் பற்றுதியுடனும், கடமையுணர்வுடனும்,பதிவுச் செய்யப்பட்டன. அவர்கள் காலமான சிறிது காலத்துக்குள் ஆதாரபூர்வமாக அவை ஒரு சேரத் தொகுக்கப்பட்டன. எனவே, முஹம்மது நபியின் கருத்துகளும், போதனைகளும்,கொள்கைகளும், குர்ஆனுடன் நெருக்கமானவை. ஆனால், ஏசுநாதரின் இது போன்ற விரிவான போதனைகள் அடங்கிய எதுவும்(மூலாதாரத்துடன்) எஞ்சவில்லை. கிறிஸ்துவர்களுக்கு பைபிளைப் போன்று, முஸ்லிம்களுக்கு குர்ஆன் முக்கியம் வாய்ந்ததாகும். குர்ஆன் வாயிலாக முஹம்மது நபி உண்டுபண்ணிய தாக்கம், மிகப்பெரும் அளவினதாகும். கிறிஸ்துவத்தின் மீது ஏசுநாதரும், தூய பவுலும் ஒருங்கிணைந்து உண்டுபண்ணிய தாக்கத்தை விட, முஹம்மது நபி இஸ்லாத்தின் மீது உண்டு பண்ணிய தாக்கம் மிகுந்தது என்றே சொல்லலாம். சமய அடிப்படையில் மட்டும் பார்க்கப் போனால் மனித வரலாற்றில் ஏசுநாதருக்கு இருந்த செல்வாக்கைப் போன்றே முஹம்மதுவுக்கும் இருந்தது என்று சொல்லலாம்.

இரண்டாவது: மேலும், ஏசுநாதரைப் போலில்லாமல், முஹம்மது நபி சமயத் தலைவராக மட்டுமின்றி, உலகியல் துறைகளிலும் தலைவராக இருந்தார்கள். உண்மையில் அரபுகளின் வெற்றிகளுக்கு, பின்னிருந்து இயக்கிய உந்து சக்தியான அன்னார் எல்லாக் காலத்துக்கும் தாக்கத்தை உண்டு பண்ணும் செல்வாக்கு மிக்க தலைவராக இடம் பெறலாம்.] Source - (The Hundred) தமிழில் அந்த நூறு பேர்.

ஒற்றுமையற்று, ஒழுக்கம் குலைந்து, இறைத்தன்மை உணராமல், தறிகெட்டு வாழும் அரபுக்களின் வாழ்க்கை நிலையை மாற்றி உயர்த்த இறைவனால் நியமிக்கப்பட்ட ஓர் ஊழியராகவே அவர் தம்மை உணர்ந்தார். துளி அகங்காரம் கிடையாது. பெருமையோ, வானவர் வந்து "இறைத்தூதர்" என்று அறிவித்துப்போன பெருமிதமோ, கர்வமோ கிடையாது. ஊழியன். வெறும் ஊழியன். இப்படித்தான் முகம்மது தம்மை இறுதிவரை கருதினார். (எழுத்தாளர் பா. ராகவன்)

முஹம்மது நபியின் நற்பண்புகள் எனக்குப் பிடித்திருக்கின்றன. மனித வாழ்க்கையைப் பற்றிய அவருடைய கொள்கைகளை நான் ஆதரிக்கிறேன். இந்த நூற்றான்டின் இறுதிக்குள் பிரிட்டன் இஸ்லாம் மதத்தை ஏற்றுக்கொண்டு விடும் என்று எதிர்பார்க்கிறேன். (பெர்னாட்ஷா)

‘நிச்சயமாக நீர் மிக உயர்ந்த நற்குணம் உடையவராக இருக்கின்றீர்’ (68:04)

காந்திஜி இவ்வாறு கூறுகிறார், ஆட்சி புரியும் அமைச்சர்கள் நபிபெருமான் வகுத்த சீர் திருத்தங்களை பின்பற்றி நடக்கவேண்டும். (மகாத்மா காந்தி)

நபிகள் நாயகம் தோற்றுவித்த தெய்வத்தன்மை பொருந்திய புனிதமான அரசாங்கம் முற்றமுற்ற ஜனநாயகக் கொள்கையை மேற்கொண்டதாகும். மனித குலம் முழுவதும் பின்பற்றத் தக்க உயரிய கோட்பாடுகளை உடையது நபிகள் நாயகம் கொண்டுவந்த இஸ்லாம். அனைத்தையும் உள்ளடக்கியது இஸ்லாம். அகிலமே ஏற்றுக்கொள்ளக் கூடியது. அண்ணல் நபிகள் எளிய வாழ்க்கை அவருடைய மனிதத்தன்மையை தெளிவாக்கியுள்ளது.
(டாக்டர் ஜான்சன்)

இறைவனின் தூதரிடம் ஓர் அழகிய முன்மாதிரி உங்களுக்கு இருக்கிறது (33:21)

முஹம்மது நபியின் வெற்றிக்கு முதல் காரணம், அவர்கள் கொண்டிருந்த உறுதியும் ஊக்கமும். இத்தகைய உறுதி அந்தக் காலச் சூழ்நிலையில் ஏற்படுவது எளிதன்று. இரண்டாவது காரணம். இஸ்லாம் போதிக்கும் சமத்துவமும் சகோதரத்துவமுமாகும். (ஜவஹர்லால் நேரு)

(நபியே!) நிச்சயமாக நாம் ஒரு தெளிவான வெற்றியாக உமக்கு வெற்றி அளித்துள்ளோம் (48:01)

துவேஷம் என்னும் கருமேகக் கூட்டத்தை விலக்கி விட்டு உண்மையென்னும் கதிரவன் ஒளிபரப்பும் நன்னாள் ஒன்று வரலாம். அப்போது மேல் நாட்டு ஆசிரியர்கள், 'முஹம்மது ஒரு சரித்திர நாயகர்' என்று கூறுவதோடு இப்போது நிறுத்திக்கொள்கிறார்களே, அப்படியின்றி,அதற்கப்பால் சென்று அவர்களுடைய வாழ்க்கையை அணுகி ஆராய்ந்து மனிதத்துவத்தின் வரலாறு என்ற பொன்னேடுகளில் நபிகள் நாயகம் அவர்களுக்குரிய இடத்தை அளிப்பார்கள்.(எஸ். எச். லீடர்)

இறுதி மூச்சுவரை ஏகத்துவத்தை, ஒருவனே தேவன் என்பதை பிரச்சாரம் செய்து,அசைக்கமுடியாத இறைநம்பிக்கையுடன் இருந்து, தாமே இறைவனின் தீர்க்கதரிசி என்ற உள்ளுணர்வுடன் உரிமை கொண்டாடிய முஹம்மது நபி அவர்களின் நபித்துவத்தை எவரே மறுக்க முடியும்? (வாஷிங்டன் இர்விங்)

முஹம்மது(ஸல்) அல்லாஹ்வின் தூதராகவே இருக்கின்றார் (48:29)

நபிகள் நாயகம் இவ்வுலகில் மக்களுக்குப்புரிந்த போதனைகள் அனைத்தும் உண்மை பொதிந்தவை. கருத்தாழம் மிக்கவை. விசுவாசம் கொள்ளத்தக்க வேதம் ஒன்றிருந்தால் அது நபிகள் நாயகத்துக்கு அருளப்பட்ட திருக்குர்ஆனேயாகும். (தாமஸ் கார்லைல்)

(நபியே!) நிச்சயமாக நாம் மிகத்தெளிவான வசனங்களை உம்மீது இறக்கிவைத்திருக்கிறோம் பாவிகளைத் தவிர (வேறு எவரும்) அவற்றை நிராகரிக்க மாட்டார்கள்.(2:99)

நாகரிகம் முதிர்ந்த இந்நாளில் கூட மக்களைச் சீர்திருத்த முனைகிறவர்கள் படுகிற பாட்டைப் பார்க்கும்போது, பல நூற்றாண்டுகளுக்கு முன் அநாகரிகத்தில் மக்கள் வாழ்ந்து கொண்டிருந்த காலத்தில் முஹம்மது நபி அவர்கள் புரிந்த சாதனைகளும், சீர்திருத்தங்களும் முரடர்களுக்கும் சகிப்புத் தன்மையும் நேர்மையையும் வழங்கி, அவர்களை மெய்யான வாழ்க்கையின் பக்கம் இழுத்துவந்து வெற்றியை நிலைபெறச் செய்த பெருமை வெறும் நாவினால் புகழ்ந்து விடக்கூடியதல்ல. (டால்ஸ்டாய்)

‘இவர்களுக்காக துக்கமும், வேதனையும் அடைந்தே உமது உயிர் போய்விட வேண்டாம்’. (35:08)

செந்தழலைக் குளிராகவும், சினங்கொண்டு சீறிவரும் பகையைக் குணங்கொண்ட நட்பாகவும் மாற்றவல்ல மனவலிமைமிக்க மேலோர் நபிகள் நாயகம். நபிகள் நாயகம் மற்றவர்களைத் திருத்துவதற்கு முன்பு தன்னைத் திருத்திக்கொண்டார் என்பதற்கு ஏராளமான எடுத்துக்காட்டுகள் உண்டு. (கலைஞர் கருணாநிதி)

முஹம்மத் (ஸல்) அவர்கள் தமது கொள்கைகளுக்காக எல்லாவித சித்திரவதைகளையும் கொடுமைகளையும் சகித்துக் கொண்டு அவர்களைத் தமது தலைவராகக் கருதிய அவர்களின் தோழர்களுடைய உயர்ந்த ஒழுக்கப் பண்புகளும் அவர்கள் இறுதியில் நிகழ்த்திய சாதனையின் மகத்துவமும் இவையனைத்தும் அவர்களின் அடிப்படையான நேர்மையான நம்பகமான தன்மையை நன்கு எடுத்துரைக்கின்றன. முஹம்மத் (ஸல்) அவர்களை ஏமாற்றுக்காரராகவும் மோசடிக்காரராகவும் கருதுவது பல பிரச்னைகளையும் கேள்விகளையும் தாம் எழுப்புகிறதே தவிர பிரச்னைகளைத் தீர்க்கக் கூடியதாயில்லை. மேலும் உலக வரலாற்றின் மகத்தான மனிதர்களில் முஹம்மதைப் போல் மேற்குலகில் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டவர்கள் வேறெவருமில்லை.(Mohammed at Mecca , Oxford 1932, P.52)

அவர் தமது மார்க்கத்தைப் பிரச்சாரம் செய்தது வியப்புக்குரியதல்ல மாறாக அது என்றும் நீடித்து நிலைத்திருக்கும் பாங்குதான் வியப்புக்குரிய ஒன்றாகும். மக்கா நகரிலும் மதீனா நகரிலும் அவர் வடிதளித்த இஸ்லாத்தின் அதே அசல்வடிவம் தூய்மை கெடாமல் மாற்றப்படாமல் திரிக்கப்படாமல் பன்னிரண்டு நூற்றாண்டுகளில் நடந்தேறிய புரட்சிகள் பலவற்றிற்குப் பின்னரும் இன்று வரை இந்திய ஆப்ரிக்க துருக்கியப் பகுதிகளில் பாதுகாத்து வைக்கப்பட்டிருக்கின்றது. சமயத்தைக் குறித்து கற்பனை மற்றும் ஊகத்தின் அடிப்படையிலான கருத்தோட்டங்களிலிருந்து முஹம்மதியர்கள் ஒதுங்கியே நின்றனர். அவற்றை அடியோடு கிள்ளி எறிந்தும் விட்டார்கள்.நான் ஒரே இறைவன் மீது நம்பிக்கை கொள்கிறேன். முஹம்மத் (ஸல்) அவர்கள் இறைவனின் திருத்தூதராவார் என்பது தான் இஸ்லாத்தின் முன்மாதிரியான மாறுபாடற்ற ஒரேவிதமான பறைசாற்றலாகும். ஒருபுறம் கடவுள் பற்றிய அறிவார்ந்த கருத்தோட்டத்தின் மதிப்பு கண்ணுக்குப் புலப்படும் உயிரினங்கள் சிலைகள் மற்றும் பொருள்களின் அளவுக்குக் குறைக்கப்பட்டதில்லை. இறைத்தூதருக்கு அளிக்கப்பட்ட உயர்மதிப்புகள் மனிதர் என்கிற அந்தஸ்தை தாண்டி (கடவுள் என்கிற அளவுக்கு) உயர்த்தியதில்லை. அவர் அளித்து விட்டுச் சென்ற சிரஞ்சீவியான கட்டளைகள் அவரைப் பின்பற்றுவோர் அவருக்குக் காட்டும் நன்றியுணர்வை பகுத்தறிவு மற்றும் சமயத்தின் எல்லைக்குள் கட்டுப்படுத்தி (மிகைத்து விடாமல் தடுத்து) வைத்திருக்கின்றன.(Edaward Gibbon Simon Ocklay, History of the Saracen Empire. London, 1870, p.54)

மனித சமுதாயத்திலுள்ள கோடிக்கணக்கான மக்களின் உள்ளங்களின் மீது சர்ச்சைக்கிடமின்றி இன்று ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கும் ஒருவரின் மிகச் சிறந்த வாழ்க்கையை அறிந்திட நான் ஆவல் கொண்டேன். (அவ்விதம் அதனை நான் படித்தறிய முற்பட்ட போது) இஸ்லாத்திற்கு அக்காலத்திய வாழ்க்கையமைப்பில் உயர்ந்த ஓர் இடத்தைப் பெற்றுத் தந்தது வாள் பலமல்ல என்று முன் எப்பொழுதையும் விட அதிகமாக உணர்ந்தேன். நபிகள் நாயகத்தின் மாறாத எளிமை தம்மைப் பெரிதாகக் கருதாமல் சாதாரணமானவராக நடந்து கொள்ளும் உயர்பண்பு. எந்நிலையிலும் வாக்குறுதியைப் பேணிக் காத்த தன்மை தம் தோழர்கள் மீது கொண்டிருந்த அழியாத அன்பு அவரது அஞ்சாமை இறைவன் மீதும் தமது பிரச்சாரப் பணியிலும் அவர் கொண்டிருந்த முழுமையான நம்பிக்கை ஆகியவை தான் அவரது வெற்றிக்குக் காரணங்கள். இவையே உலகச்சக்திகள் அனைத்தையும் நபிகள் நாயகத்தின் முன்பும் அவர்களின் தோழர்கள் முன்பும் கொண்டு வந்து குவித்தன. எல்லாத் தடைகளையும் வெற்றி கொண்டன. அவரது மகத்தான வெற்றிக்கு இவை தான் காரணமே தவிர வாள்பலம் அல்ல. (Young India, Quoted in The light, Lahore, for 16th Sep 1824. Mahatma Gandhi)

அவன் தான் என்னுடைய தூதரை நேரான வழியைக் கெண்டும் சத்திய மார்க்கத்தைக் கொண்டும் அனுப்பி வைத்தான். இணை வைத்து வணங்குவோர் (அதனை) வெறுத்த போதிலும் (உலகிலுள்ள) எல்லா மார்க்கங்களையும் அந்தச் சத்திய மார்க்கம் வெற்றி பெற்றே தீரும். (2:32)

இவ்வளவு மகத்தான சிறப்புக்குரிய நபிகள் நாயகம்(ஸல்) அவர்களை சில அறிவற்றவர்கள் அவர்கள் மீது தூற்றும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை பார்க்கும் பொழுது பெரும் நகைப்புக்குரிய ஒரு விடயமாகவே உள்ளது. இஸ்லாத்திற்கு எதிரான தவறான சிந்தனையும் முஸ்லிம்களுக்கெதிரான காழ்புணர்ச்சியே அவர்களின் தவறான கொள்கைக்கு காரணமாக உள்ளது. ஆகவே பகுத்தறிவுமிக்க மனிதனாக படைக்கப்பட்ட நாம் சற்று சிந்திக்க கடமைப்பட்டுள்ளோம். மேலேயுள்ள கூற்றுக்கள் எல்லாம் உண்மைதானா? இந்த அசாதாரணமான, புரட்சிகரமான சாதனைகள் உண்மையில் நடைபெற்றனவா? என்பதை நாம் அனைவரும் தூயவடிவில் அறிவதற்கு முன்வர வேண்டும். நமக்கு இருக்கின்ற கருத்துவேருபாடுகளை கழைந்து ஒரு மாசற்ற மனிதாக அவரை நாம் அறிவதற்கு முயற்சி செய்ய வேண்டும். பழையபடி நாம் மனதுக்குள் சில கருப்புப்புள்ளிகளை வைத்துக்கொண்டு இன்னும் அவர்கள் மீது மனித தன்மையற்ற செயல்களை செய்ய முற்பட்டால் இன்னும் ஒரு நபியல்ல ஓராயிரம் நபி வந்தாலும் உங்களை திருத்தமுடியாது. எல்லாம் வல்ல இறைவன் நம் அனைவரையும் நேர்வழியில் செலுத்துவனாக!
குர் ஆனில் தவறான கணக்கா? அருண்சூரிக்கு ஜாக்கிர் நாய்க் பதில்

குர் ஆனில் தவறான கணக்கா? அருண்சூரிக்கு ஜாக்கிர் நாய்க் பதில்

டாக்டர் ஜாக்கிர் நாய்க்

[ அருண்சூரி பின்னக் கணக்கின் அடிப்படை தத்துவம் 'B O D M A S' பற்றி அறியாதவராக இருப்பதால் -முதலில் பெருக்கலையும் - இரண்டாவதாக கழித்தலையும் - மூன்றாவதாக அடைப்புக் குறிகளை நீக்குதலையும் - நான்காவதாக வகுத்தலையும் - கடைசியில் கூட்டலையும் செய்திருக்கிறார். எனவே அவருக்கு கிடைக்கும் விடை நிச்சயமாக தவறானதாகத்தான் இருக்கும். ]

கேள்வி: பிரபல பத்திரிக்கையாளர் அருண்சூரியின் கருத்துப்படி குர்ஆனில் தவறான கணக்கு வகைகள் இருக்கின்றன. குர்ஆனில் உள்ள நான்காவது அத்தியாத்தின் 11ஆம் மற்றும் 12 ஆம் வசனத்தின்படி வாரிசுதாரர்களுக்கு சொத்துக்களை பிரித்துக் கொடுத்தால் - பிரித்துக் கொடுக்கப்படக் கூடிய சொத்து ஒன்றுக்கும் மேற்பட்டதாக வருகிறது. எனவே குர்ஆனை அருளியவருக்கு கணக்குத் தெரியவில்லை என்று எடுத்துக் கொள்ளலாமா?.பதில்: வாரிசுதாரர்களுக்கு சொத்துக்களை பிரித்துக் கொடுப்பது பற்றி அருள்மறை குர்ஆனின் கீழ் குறிப்பிட்டுள்ள வசனங்கள் குறிப்பிடுகின்றன:

அத்தியாயம் இரண்டு ஸுரத்துல் பகராவின் 180 வது வசனம்

அத்தியாயம் இரண்டு ஸுரத்துல் பகராவின் 240 வது வசனம்

அத்தியாயம் நான்கு ஸுரத்துல் நிஷாவின் 7வது வசனம் முதல் 9வது வசனம் வரை

அத்தியாயம் நான்கு ஸுரத்துல் நிஷாவின் 19வது வசனமும் 33வது வசனமும்

அத்தியாயம் ஐந்து ஸுரத்துல் மாயிதாவின் 105வது வசனமும் 108வது வசனமும்.

வாரிசுதாரர்களுக்கு சொத்துக்களை பிரித்துக் கொடுப்பது பற்றி அருள்மறை குர்ஆனின் நான்காவது அத்தியாயம் ஸுரத்துன் நிஷாவின் 11வது வசனமும், 12வது வசனமும், 176வது வசனமும் மிகத் தெளிவான விளக்கம் அளிக்கின்றன.

பத்திரிக்கையாளர் அருண்சூரி குறிப்பிடும் அருள்மறை குர்ஆனின் நான்காவது அத்தியாயம் ஸூரத்துன் நிஸாவின் 11வது வசனத்தையும், 12வது வசனத்தையும் நாம் இப்போது ஆய்வு செய்வோம்.

'உங்கள் மக்களில் ஓர் ஆணுக்கு இரண்டு பெண்களுக்குக் கிடைக்கும் பங்கு போன்றது கிடைக்கும் என்று அல்லாஹ் உங்களுக்கு உபதேசிக்கின்றான்: பெண்கள் மட்டும் இருந்து அவர்கள் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்டிருந்தால் அவர்களுக்கு இறந்து போனவர் விட்டுச் சென்றதில் மூன்றில் இரண்டு பாகம் கிடைக்கும். ஆனால் ஒரே பெண்ணாக இருந்தால் அவள் பங்கு பாதியாகும், இறந்தவருக்கு குழந்தை இருக்குமானால் இறந்தவர் விட்டுச் சென்றதில் ஆறில் ஒரு பாகம் (அவரது) பெற்றோர் ஒவ்வொருவருக்கும் உண்டு. ஆனால் இறந்தவருக்கு குழந்தை இல்லாதிருந்து பெற்றோர் மாத்திரமே வாரிசாக இருந்தால் அவர் தாய்க்கு மூன்றில் ஒரு பாகம் (மீதி தந்தைக்கு உரியதாகும்): இறந்தவருக்கு சகோதரர்கள் இருந்தால் அவர் தாய்க்கு ஆறில் ஒரு பாகம் தான் (மீதி தந்தைக்குச் சேரும்). இவ்வாறு பிரித்துக் கொடுப்பது அவர் செய்துள்ள மரண சாஸனத்தையும் கடனையும் நிறைவேற்றிய பின்னர் தான்: உங்கள் பெற்றோர்களும் குழந்தைகளும் இவர்களில் யார் நன்மை பயப்பதில் உங்களுக்கு நெருக்கமாக இருப்பவர்கள் என்று நீங்கள் அறியமாட்டீர்கள்: ஆகையினால் (இந்த பாகப் பிரிவினை) அல்லாஹ்விடமிருந்து வந்த கட்டளiயாகும்: நிச்சயமாக அல்லாஹ் (யாவற்றையும்) நன்கறிந்தவனாகவும் மிக்க ஞானமுடைய வனாகவும் இருக்கின்றான்.''இன்னும் உங்கள் மனைவியர் விட்டுச் சென்றதில் - அவர்களுக்குப் பிள்ளை இல்லாதிருந்தால் உங்களுக்குப் பாதி பாகம் உண்டு: அவர்களுக்குப் பிள்ளை இருந் தால் அவர்கள் விட்டுச் சென்றவற்றிலிருந்து உங்களுக்கு கால் பாகம்தான் - (இதுவும்) அவர்கள் செய்திருக்கிற மரண சாஸனத்தையும், கடனையும் நிறைவேற்றிய பின்னர் தான் - தவிர உங்களுக்குப் பிள்ளையில்லாதிருப்பின் நீங்கள் விட்டுச் சென்றதிலிருந்து அவர்களுக்குக் கால் பாகம் தான், உங்களுக்குப் பிள்ளை இருந்தால் அப்போது அவர்களுக்கு நீங்கள் விட்டுச் சென்றதில் எட்டில் ஒரு பாகம் தான்: (இதுவும்) நீங்கள் செய்திருக்கும் மரண சாஸனத்தையும் கடனையும் நிறைவேற்றிய பின்னரே தான்: தந்தை, பாட்டன் போன்ற முன் வாரிசுகளோ அல்லது பிள்ளை பேரன் போன்ற பின்வாரிசுகளோ இல்லாத ஓர் ஆணோ அல்லது ஒரு பெண்ணோ இவர்களுக்கு ஒரு சகோதரனோ அல்லது ஒரு சகோதரியோ இருந்தால் - அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஆறில் ஒரு பாகம் உண்டு, ஆனால் இதற்கு அதிகமாக இருந்தால் அவர்கள் மூன்றில் ஒரு பாகத்தில் சமமாகப் பங்கிட்டுக் கொள்ள வேண்டும். (இதுவும்) அவர்களின் மரண சாஸனமும் கடனும் நிறைவேற்றிய பின்னர்தான்: ஆனால் (மரண சாஸனத்தைக் கொண்டு வாரிசுகள்)எவருக்கும் நஷ்டம் ஏற்படக் கூடாது, (இது) அல்லாஹ்வினால் விதிக்கப்பட்டதாகும். இன்னும் அல்லாஹ் (யாவற்றையும்) நன்கறிந்தவனாகவும, மிக்க பொறுமையுடையோனுமாகவும் இருக்கின்றான்... (அல்-குர்ஆன் 4வது அத்தியாயம் ஸூரத்துன்னிஸாவின் 11 மற்றும் 12 வது வசனங்கள்).'

வரிசுகளுக்கு சொத்துக்களை பங்கிட்டுக் கொடுப்பது பற்றி இஸ்லாம் மிகவும் விரிவாக தெரிவிக்கின்றது. வரிசுகளுக்கு சொத்துக்களை பங்கிட்டுக் கொடுப்பது பற்றிய முக்கிய பகுதியை மாத்திரம் அருள்மறை குர்ஆன் சொல்கிறது. அருள்மறை குர்ஆன் சொன்ன முக்கிய பகுதியின் விளக்கங்களை நாம் ஹதீஸ்களில் - அதாவது முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டுதலில் இருந்து அறிந்து கொள்ளலாம்.

இஸ்லாம் வாரிசுகளுக்கு சொத்துக்களைப் பங்கிட்டு வழங்குவது பற்றிய சட்டங்களின் முழு விபரங்களையும் நாம் ஆய்வு செய்ய முயன்றோம் எனில் - ஒரு மனிதன் தன் வாழ்நாள் முழுவதையும் செலவு செய்து - ஆய்வு செய்யக் கூடிய அளவிற்கு உண்டான செய்திகள் அதில் இருக்கின்றன. இஸ்லாம் வாரிசுகளுக்கு சொத்துக்களைப் பங்கிட்டு வழங்குவது பற்றிய சட்டத்தின் அடிப்படை தத்துவங்களை அறிந்து கொள்ள விரும்பாத பத்திரிக்கையாளர் அருண்சூரி, அருள்மறை குர்ஆனின் இரண்டு வசனங்களை மேலெழுந்தவாரியாக படித்துவிட்டு, அதன் முழு சட்டத்தையும் தெரிந்து கொள்ள விரும்புகிறார்.

மேலே குறிப்பிடபட்டவரின் முயற்சியானது - கணிதவியலின் அடிப்படைத் தத்துவத்தை அறியாத ஒருவர், பின்னக் கணக்குகளை சரிசெய்ய முயற்சி செய்வது போன்றதாகும். கணிதவியலின் அடிப்படை தத்தவம் 'B O D M A S' என்பதாகும். ஒரு பின்னக் கணக்கை முறைப்படி சரி செய்ய, பின்னக் கணக்கில் - எந்த கணக்குக்குறி முதலில் வந்தாலும் - கணிதவியலின் அடிப்படை தத்துவம் 'B O D M A S'முறையில்தான் பின்னக் கணக்கை சரி செய்ய வேண்டும்.1. Brackets Off - அடைப்புக் குறிகள் நீக்கப்படுதல்

2. Division - வகுத்தல்3.Multification - பெருக்கல் 4. Addition - கூட்டல்

5. Subtraction - கழித்தல்.

அருண்சூரி பின்னக் கணக்கின் அடிப்படை தத்துவம் 'B O D M A S" பற்றி அறியாதவராக இருப்பதால் - முதலில் பெருக்கலையும் - இரண்டாவதாக கழித்தலையும் - மூன்றாவதாக அடைப்புக் குறிகளை நீக்குதலையும் - நான்காவதாக வகுத்தலையும் - கடைசியில் கூட்டலையும் செய்திருக்கிறார். எனவே அவருக்கு கிடைக்கும் விடை நிச்சயமாக தவறானதாகத்தான் இருக்கும்.அருள்மறை குர்ஆன் வாரிசுகளுக்கு சொத்துக்களை பங்கிட்டு வழங்குதல் பற்றிய வசனங்களில் (Al - Quran 4: 11, 12) முதலில் பிள்ளைகளுக்கு கிடைக்க வேண்டிய பங்கு, பின்னர் பெற்றோருக்கு கிடைக்க வேண்டிய பங்கு மற்றும் கணவருக்கோ அல்லது மனைவிக்கோ (Spouse) கிடைக்க வேண்டிய பங்குகளை பற்றி தெரிவித்தாலும், இஸ்லாமிய வாரிசுரிமைச் சட்டப்படி - முதலில் கொடுக்க வேண்டிய கடன்கள் கொடுக்கப்பட வேண்டும். பின்னர் கணவருக்கோ அல்லது மனைவிக்கோ (Spouse)கொடுக்கப்பட வேண்டிய பங்குகளும் - பெற்றோருக்கு கொடுக்கப்பட வேண்டிய பங்குகளும் கொடுக்கப்பட வேண்டும். மேற்படி பங்கீடு - இறந்தவர் பிள்ளைகள் உள்ளவரா? - இல்லையா? என்பதையும், அவரிடம் மேலே குறிப்பிடப்பட்ட வகையில் சொத்துக்களை பங்கீடு செய்த பின்பு, மேலும் சொத்துக்கள் எஞ்சியிருக்கிறதா என்பதையும் பொருத்தது. மேலும் எஞ்சியிருக்கும் சொத்துக்கள் அவரது ஆண் வாரிசுகளுக்கும் - பெண் வாரிசுகளுக்கும் உரிய முறைப்படி பங்கீடு செய்யப்பட வேண்டும்.

மேற்படி இஸ்லாமிய முறையில் சொத்துக்கள் பங்கீடு செய்யப்படும் பொழுது தவறுகள் வருவதற்கு வாய்ப்பே இல்லை. கணிதவியல் தெரியாதவன் அல்லாஹ் அல்ல. கணிதவியல் அறியாதவர் பத்திரிக்கையாளர் அருண்சூரிதான்.
குழந்தை பிறக்கும் நேரத்தை இறைவன் மட்டுமே அறிவான் என்பது உண்மையா?

குழந்தை பிறக்கும் நேரத்தை இறைவன் மட்டுமே அறிவான் என்பது உண்மையா?

" ... அவன் அறியாமல் எந்தப் பெண்ணும் கருவுறுவதில்லை; பிரசவிப்பதுமில்லை ..." (அல்குர்ஆன் 35:11).

"நிச்சயமாக மறுமை பற்றிய முற்றான அறிவு அல்லாஹ்விடமே இருக்கிறது. அவன்தான் (சூல்கொண்ட... மேகத்திலிருந்து) மழையைப் பொழிவிப்பவன். மேலும் கருவறையில் உள்ளவற்றை அறிபவனும் அவனே ..." (அல்குர்ஆன் 31:34).

"ஒவ்வொரு பெண்ணும் (தன் கருவறையில்) சுமந்து கொண்டிருப்பதையும் அவை சுருங்கிக் குறைவதையும் விரிந்து கொடுப்பதையும் அல்லாஹ் நன்கறிவான். ஒவ்வொன்றுக்கும் அவனிடம் தீர்மானிக்கப் பட்ட அளவு இருக்கின்றது" (அல்குர்ஆன் 13:8).

"மனிதர்களே! (இறுதித் தீர்ப்புக்காக நீங்கள்) மீண்டும் எழுப்பப்படுவது பற்றி உங்களுக்கு ஐயமிருந்தால் (அறிந்து கொள்ளுங்கள்!) நாம் நிச்சயமாக உங்களை (முதன் முதலில்) மண்ணிலிருந்தும் பின்னர் இந்திரியத்திலிருந்தும், அடுத்த கட்டத்தில் அலக்கிலிருந்தும், அதையடுத்து அரைகுறைத் தசைக் கட்டியிலிருந்தும் படைத்தோம். உங்களுக்கு விளக்குவதற்காகவே (இதனை விவரிக்கிறோம்). மேலும், நாம் நாடியவற்றை ஒரு குறிப்பிட்ட காலம் வரை கருவறையில் தங்கச் செய்து, பின்பு குழந்தையாக வெளிப்படுத்துகிறோம் ..." (அல்குர்ஆன் 22:5)

போன்ற இறைவசனங்கள் உங்களுடைய ஐயத்துக்கு அடிப்படையாக இருக்கக் கூடும் என்று நினைக்கிறோம்.
முதலாவதாக,

ஒரு பெண் கருத்தரித்தால் அப்பெண்ணுக்கு இயல்பாகக் குழந்தையைப் பெற்றெடுப்பதற்கான காலக்கெடு என்பது அப்பெண் கருத்தரித்ததிலிருந்து 9 மாதங்கள் 9 நாட்கள் எனப் பொதுவாகக் கூறுவர். இக்கணக்கு அப்பெண்ணுக்குக் கடைசியாக ஏற்பட்ட மாதவிலக்கை அடிப்படையாகக் கொண்டது. இந்தக் கணக்கைச் சொல்வதற்கு ஒரு மகப்பேறு மருத்துவர்கூட இப்போது தேவையில்லை. http://www.babycenter.com/pregnancy-due-date-calculator என்ற தளத்தில் கடைசியாக மாதவிலக்கு ஏற்பட்ட நாளைக் குறிப்பிட்டால் குழந்தை பிறக்கப் போகும் தேதி, மாதம், ஆண்டு எல்லாம் சொல்லி விடும். அந்தக் கணக்குச் சரியாகவுமிருக்கும்; சற்றே முன்-பின்னும் இருக்கும்.

"கம்ப்யூட்டரே தெரிந்து கொண்டு சொல்லும்போது கடவுளுக்குத் தெரிந்தாலோ தெரியா விட்டாலோ நமக்கென்ன?" என்ற கேள்வி வரும்.

கம்ப்யூட்டரையும் அதற்கான மென்பொருளையும் உண்டாக்கியவன் மனிதன். அந்த மனிதனையே உண்டாக்கியவன் இறைவன் என்பது முஸ்லிம்கள் மட்டுமின்றி, கடவுளை நம்புகின்ற எல்லா ஆத்திகர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாகும்.
கம்ப்யூட்டருக்கும் மருத்துவருக்கும் ஒரு பெண் கருவடைவதற்கு முன்னர், இன்ன நாளில், இன்ன நேரத்தில், இன்ன இனத்தில், இன்ன இடத்தில், இன்ன வகையில் குழந்தை பெறுவாள் என்பதைப் பற்றி ஒன்றுமே தெரியாது. ஆனால், இறைவனுக்கு அவையனைத்தும் முதல் மனிதனைப் படைக்கும்போதே அவனுடைய எத்தனையாவது தலைமுறையில் இந்தப் பெண் பிறந்து எத்தனை பிள்ளகளை எவ்வாறு, எப்போது பெற்றெடுப்பாள் என்பது துல்லியமாகத் தெரியும் என்பது ஆத்திகர்களின் நம்பிக்கையாகும். துல்லியம்தான் இங்குத் தலையாய பேசுபொருள்.

குறிப்பாக, முஸ்லிம்களின் நம்பிக்கைக்கு, கி.பி எழுநூறுகளின் தொடக்கத்தில் அருளப்பட்டு, அவர்கள் இறைவேதம் என்று நம்புகின்ற குர்ஆன் அடிப்படையாகத் திகழ்கின்றது. ஒரு குழந்தை கருவுருவதைப் பற்றி அது கூறுவதைக் கேட்போம்:

"(பெண்ணின் சினைமுட்டையோடு) கலவையான விந்திலிருந்து நாமே மனிதனைப் படைத்தோம் ..." (அல்குர்ஆன் 76:2).

முதன் முதலாகக் கருவுலகைப் பற்றி அறிவியல் உலகம் ஆராய்ச்சியில் ஈடுபட்டது ஏறத்தாழ நானூறு ஆண்டுகளுக்கு முன்னர் கி.பி.1615இல்தான். ஆனால், "பெண்ணுடைய சினை முட்டையோடு ஆணுடைய விந்து கலந்து குழந்தை உருவாகிறது" என்று குர்ஆன் அறிவிப்பது ஆயிரத்து நானூறு ஆண்டுகளுக்கு முன்னர் என்பது வியக்க வைக்கும் செய்தியன்றோ!

There are a multitude of statements in the Quran on the subject of human reproduction which constitute a challenge to the embryologist seeking a human explanation for them. It was only after the birth of the basic sciences which contributed to our knowledge of biology and the invention of the microscope, that humans were able to understand the depth of those Quranic statements. It was impossible for a human being living in the early seventh century to have accurately expressed such ideas. There is nothing to indicate that people in the Middle-East and Arabia knew anything more about this subject than people living in Europe or anywhere else.
முழுதும் படிக்க http://www.sultan.org/articles/QScience.html

குர்ஆன் கூறுவதைக் கேட்ட விஞ்ஞானிகளின் வியப்பு ஆவணமாக்கப் பட்டுள்ளது. http://www.youtube.com/watch?v=XaSfE1DW2-w


இரண்டாவதாக,

உங்களுடைய கேள்வியான இயல்புக்கு மாற்றமாக நடைபெறும் சிஸேரியன் விஷயத்துக்கு வருவோம்.

கருவைச் சுமக்கும் தாயின் உயிருக்கோ கருவிலிருக்கும் மகவின் உயிருக்கோ ஆபத்து ஏற்படும் என்ற நிலை ஏற்படும்போது அந்த ஆபத்தைக் களைவதற்கான கடைசியாகக் கையாளும் முயற்சியாகத்தான் சிஸேரியன் முறை கண்டுபிடிக்கப்பட்டது.

நாளடைவில், அது நாள்-நட்சத்திரம் மீது மோகம் கொண்ட சிலரால், இயல்பான பேறுநாளைக்கு முன்னதாகத் தேதி நிர்ணயிக்கப்பட்டுச் செயற்கையாக சிஸேரியன் மூலம் குழந்தை வெளியே எடுக்கப்படுகிறது.

ஆனால், எல்லா சிஸேரியன்களும் பெற்றோர் தேர்ந்தெடுக்கும் நேரத்திலோ மருத்துவர்கள் நிர்ணயிக்கும் நேரத்திலோ துல்லியமாக நடைபெறுவதில்லை என்பதுதான் உண்மை. காரணம், மகப்பேற்றில் கடைசி நேர இடைஞ்சல்கள் பல உள்ளன. நீங்கள் ஒரு மகப்பேறு மருத்துவரிடம் இதை உறுதி செய்து கொள்ளலாம்.

துல்லியத்தில் மனிதர் தோற்பர்; இறைவன் தோற்பதில்லை. ஏனெனில், மனிதனின் அறிவு வரையறுக்கப் பட்டது; இறைவனின் அறிவுக்கு வரையறை இல்லை.

அவனே முற்றாய் அறிந்தவன்.
இறைத்தூதரை அவமதிக்கும் திரைப்படமும் இலங்கை முஸ்லிம்களும்.

இறைத்தூதரை அவமதிக்கும் திரைப்படமும் இலங்கை முஸ்லிம்களும்.

எமது உயிரிலும் மேலான கண்மணி ரசூளுல்லாஹ்வை கேவலப்படுத்தி எடுக்கப்பட்ட திரைப்படத்துக்கு எதிராக முழு உலகிலும் எதிர்ப்பு ஆர்பாட்டங்கள் நடை பெற்று வருகின்றது. இந்தப் போராட்டங்களில் எமது இறுதித் தூதரின் மீது கொண்ட தூய அன்பினால் உயிரிழந்த சகோதர்களை அல்லாஹ் பொருந்திக் கொள்வானாக.
இஸ்லாமிய எதிர் சக்திகள் முஸ்லிம்களின் நம்பிக்கை சார்ந்த விடயங்களில் அவ்வப்போது கை வைத்து முஸ்லிம்களின் உணர்வுகளை சீண்டி விட்டு அதில் பிரபலம் அடைவதற்கு முயற்சித்து வருகின்றன. எனினும் மறுபுறத்தில் இவ்வாறான நிகழ்வுகளினால் மாற்று கொள்கையாளர்களுக்கு மத்தியில் இஸ்லாம் மற்றும் முஸ்லிம்கள் பற்றிய தேடல் அதிகரித்தும் வருகின்றது.

எமது நாட்டிலும் இஸ்லாமிய விரோத சக்திகள் சிங்கள மொழி மூலமான சுமார் 11 இனைய தளங்களின் ஊடாக முஸ்லிம்களுக்கு எதிரான பிரச்சாரத்தை முன்னெடுத்து வருகின்றார்கள்.

நமது நாட்டில் அண்மைக் காலமாக முஸ்லிம்களுக்கு எதிரான செயற்பாடுகள் நிறுவன மயப்படுத்தப்பட்ட நிலையில் மிகவும் பகிரங்கமாக முன்னெடுக்கப்பட்டு வருவதை நாம் அவதானிக்கின்றோம். நமது வரலாற்றிலும் இது போன்ற பல சூழ்சிகளை நாம் சந்தித்திருக்கின்றோம். சகோதர பெரும்பான்மை மற்றும் சிறுபான்மை சமூகத்தில் உள்ள சில குழுக்களால் முஸ்லிம்கள் என்பதற்காகவே நாம் தாக்கப்பட்டுள்ளோம். பள்ளிவாசல்களில் வைத்து எமது சகோதர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். மூன்று தசாப்தங்கள் கடந்தும் நமது பூர்வீக பூமியை துறந்து வாழும் நிலை இன்னும் தொடர்கின்றது. ஒருசில கல்வி மற்றும் தொழில் நிறுவனங்களில் அவ்வப்போது எமது அடிப்படை உரிமைகள் மீறப் பட்டிருக்கிறது, எமது மத சம்பிரதாயங்களுக்கும் தடை விதிக்கப்பட்டிருக்கின்றது.

இந்த நாட்டில் ஏனைய சமூகங்களுக்கு இருக்கின்ற அனைத்து உரிமைகளும் முஸ்லிம் சமூகத்துக்கும் இருக்கின்ற நிலையில் நாம் இவ்வாறான நிகழ்வுகளுக்கு முகம் கொடுக்கும் போது எமது உரிமைகளை கோரி பாதையில் இறங்குகிறோம், அரசியல் அழுத்தங்களை பிரயோகிப்பதற்கு முயற்சிக்கின்றோம்.

எமது நாட்டிலும் சர்ச்சைக்குரிய திரைப்படத்துக்கு எதிரான எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள், ஹர்த்தால்கள் என நாட்டின் பல பகுதிகளிலும் நடைபெற்றும் நடாத்துவதற்கான முஸ்தீபுகளும் எடுக்கப்பட்டும் வருகின்றது. எமது ஈமானிய உணர்வுகளை வெளிப்படுத்தி எமது எதிர்பினை வெளிப்படுத்துவது முஸ்லிம்கள் மீதுள்ள சன்மார்க்க கடமையாகும்.

அத்துடன், இஸ்லாம் பற்றிய தெளிவை மாற்று மத சகோதரர்களுக்கு வழங்கக் கூடிய ஒரு வாய்ப்பாக இதனைப் பயன்படுத்துவது தொடர்பிலும் நாம் கவனம் செலுத்த வேண்டும்.

இப்தார் நிகழ்வுகள், பெருநாள் சந்திப்புக்கள் என கடந்த காலங்களில் மாற்று மத சகோதரர்களுடனான உறவு வலுப் பெற்று வருகின்றமை பாராட்டத்தக்க அம்சமாகும்.

எனினும், பரம்பரைச் சொத்தாக நாம் பெற்றுக் கொண்ட, மனித வாழ்க்கைக்கு சுபிட்சத்தை ஏற்படுத்த வந்த, இறை வழிகாட்டலின் சுவையை உணராது வழிகாட்டலில் வறுமையோடு வாழுகின்ற எமது கொள்கையில் அயலவர்களுக்கு வாழ்வின் நிம்மதிக்கான தீர்வை நாம் எப்பொழுது வழங்கப் போகிறோம் என்பது பற்றியும் நாம் சிந்திக்க வேண்டும்.

கடந்த காலங்களில் நாம் எமக்கு மத்தியில் சர்சைப்பட்டு மார்க்கம் அனுமத்தித்த கருத்து வேறுபாடுகளில் எமது பக்க நியாயங்கள் வெல்வதற்காக பரஸ்பரம் உழைத்து நேரம் செலவழித்தது போதும். உலகம் அழியும் வரையிலும் நிச்சயம் கருத்து வேறுபாடுகள் இருக்கவே செய்யும். இதனை விடுத்து, அனைத்து தரப்பினரும் முஸ்லிம் சமூகத்துக்கு வெளியே வந்து கொள்கை வறுமையில் வாடுகின்ற சகோதர சமூகத்துக்கு இறைவழி காட்டலை கொண்டுசேர்க்கும் பணியில் உழைப்பதே எமக்கு முன்னால் பணியாகும்.

 tothanks lankamuslim.org
 சமுக கதாநாயகர்- தவக்குல் கர்மான் – நோபல் பரிசு வென்ற முதல் அரபு பெண்மணி

சமுக கதாநாயகர்- தவக்குல் கர்மான் – நோபல் பரிசு வென்ற முதல் அரபு பெண்மணி

Add caption
 தவக்குல் கர்மான் – நோபல் பரிசு வென்ற முதல் அரபு பெண்மணி. 32 வயதான இவர் எமன் தேசத்தை சார்ந்தவர். அவர் அந்நாட்டின் புரட்சி தாய் என்றும் இரும்பு பெண்மணி என்றும் வர்ணிக்கப்படுகிறார்.
இவரிடம் ஒரு பத்திரிகையாளர் அவரது ஹிஜாப் பற்றிக் கேட்டார். அவர் கேட்டார் உங்களது அறிவுக்கும், படிப்புக்கும் எந்தவிதத்திலும் சம்பந்தமில்லாமல் உங்களது ஆடை உள்ளதே என்று. தவக்குல் கர்மானின் அழகான, அறிவான பதிலை கேளுங்கள்..தவக்குல் கூறினார்,
ஒரு காலத்தில் மனிதர் முழு நிர்வாணமாக இந்த உலகில் வாழ்ந்தான். அவனுக்கு எப்போது அறிவாற்றல் வளர ஆரம்பித்ததோ அப்போது அவன் தனது வெட்கத்தலங்களை மறைக்க ஆரம்பித்தான். நான் அணிந்திருக்கும் ஆடை மனிதனின் நாகரிக்கத்தை, உயர்ந்த அறிவாற்றலை காண்பிக்கிறது என்றார். இது பின்னோக்கிச் செல்வதல்ல என்றும் கூறினார். ஆடைகளை குறைப்பதென்பது மீண்டும் பழைய, நாகரீகமடையாத உலகை நோக்கி பின்னோக்கி செல்வது என்றும் கூறினார்.

என்னவொரு அழகான, அறிவான, ஆணித்தரமான, சிந்திக்க வைக்கும் வார்த்தைகள் இவை.

இன்று நமது கலாச்சாரம் அந்த முந்திய உலகை நோக்கி செல்கிறது. இஸ்லாமிய சமுதாயமும் க  லாச்சார சீரழிவை நோக்கி போய்க் கொண்டிருக்கிறது. ஹிஜாபை பேணி நடக்க வேண்டிய நமது சமுதாயம் கொஞ்சம், கொஞ்சமாக கற்கால மனிதர்கள் போல ஆடை குறிப்பில் செல்கிறது. சிறிய வயது முதலே ஹிஜாபை சொல்லிக் கொடுக்க வேண்டிய பெற்றோர்கள், சிறிய வயதிலேயே ஹிஜாபை நடைமுறைப் படுத்த வேண்டிய பெற்றோர்கள் சிறியவள்தானே, இப்போதுதானே இது போன்ற ஆடைகளை அணியமுடியும் என்று கூறி தொடை தெரியும் படியும், கைமுழுவது தெரியும் படியும் FASHION என்ற பெயரில் பெண்குழந்தைகளை வளர்த்து வருகிறது. பள்ளிச் சீருடைகளும் பள்ளிக்கு கட்டுப்பட்டு, தலையை மறைக்காமல், முட்டளளவு ஆடை உடுத்தி, ஆண்களுடன் CO-EDUCATIONசெல்லும் நிலையில்தான் நமது சமுதாயத்தில் பெரும்பாலோர்களின் நிலை உள்ளது.

இஸ்லாம் வெட்;கமெனும் பண்புக்கு கூடிய முக்கியத்துவம் அளிக்கிறது.

‘ஒவ்வொரு மதத்திற்குமுரிய ஒரு விஷேட ஒழுக்கப் பண்பு உண்டு. இஸ்லாத்திற்குரிய ஒழுக்கப் பண்பு வெட்கமாகும் என்றார்கள் நபி (ஸல்) அவர்கள்.’ (முவத்தா)

‘வெட்கம் ஈமான் சார்ந்தது. ஈமான் சுவனத்திற்குரியது’ என்பதும் ஒரு நபிமொழி. (திர்மிதி)

‘வெட்கமும் ஈமானும் ஒன்றோடொன்று இணைந்தவை. பின்னிப்பிணை ந்தவை. இவற்றுள் ஒன்றை எடுத்துவிட்டால் மற்றதும் எடுபட்டு விடும்’ என்ற ஹதீஸும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும். (ஹாகிம்)

இந்தளவு முக்கியத்துவம் வாய்ந்த வெட்க உணர்வு ஆண்களை விட பெண்களிடம் அதிகம் எதிர்ப்பார்க்கப்படுகிறது. அத்தகைய வெட்க உணர்வின் அடையாளமாகவும் வெளிப்பாடாகவும் இருப்பதே பெண்களுக்குரிய இஸ்லாமிய உடையாகும்.

உடை அணிந்தும் அணியாதது போன்ற பெண்கள்:-

இறுக்கமான அல்லது மெல்லிய உள்ளே உள்ளவைகளை காண்பிக்கும் அல்லது மறைப்பதை விட அதிகம் வெளிப்படுத்திக் காண்பிக்கும் உடைகளை அணிபவர்கள் உடை அணிந்தும் அணியாதது போன்றவர்களாவார்கள்.

நபி (ஸல்) அவர்களால் சபிக்கப்பட்டவர்கள்:-

நபி (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்: ‘உடை அணிந்தும் அணியாதது போன்றும் ஒட்டகத்தின் மிதிலைப் போன்று தங்களின் தலையில் ஏற்படுத்திக் கொண்டு பெண்கள் என் சமுதாயத்தில் தோன்றுவார்கள். அவர்களை சபியுங்கள். அவர்கள் சபிக்கப்பட்டவர்கள் ஆவார்கள்’ ஆதாரம்: தபரானி.

சுவர்க்கத்தின் நறுமணத்தைக் கூட நுகராத பெண்கள்:-

மற்றொரு நபிமொழியில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இந்த பெண்களை (அதாவது மேற்கூறப்பட்ட பெண்களைக்) குறிப்பிட்டுக் கூறுகிறார்கள்: ‘அவர்கள் சுவர்க்கத்தில் அனுமதிக்கப்பட மாட்டார்கள். மேலும், அதன் சுகந்தத்தைக் கூட நுகர மாட்டார்கள். அதன் சுகந்தமோ நீண்ட தூரத்திற்கு பரவக்கூடியதாகும். அதாவது அவர்கள் சுவர்க்கத்தை விட்டு மிக அதிக தொலைவில் இருப்பார்கள்’ (ஸஹீஹ் முஸ்லிம்).

எல்லாம் வல்ல அல்லாஹ் நம் அனைவருக்கும் நேர்வழி காட்டி, நம்மையும் நம் குடும்பத்தாரையும் சுவர்க்கத்தில் புகுத்துவானாக.
துபாயில் இவ்வாண்டு 1500 பேர் இஸ்லாத்தை தழுவியுள்ளனர்

துபாயில் இவ்வாண்டு 1500 பேர் இஸ்லாத்தை தழுவியுள்ளனர்


துபாய்:ஐக்கிய அரபு அமீரகத்தின் மாநிலமான துபாயில் இவ்வாண்டு மட்டும் 1500 க்கும் மேற்பட்ட நபர்கள் இஸ்லாத்தை தழுவியுள்ளனர். இத்தகவலை தார் அல் பிர் செய்தி தொடர்பாளர் ராஷித் அல் ஜுபைபி தெரிவித்துள்ளார்.
கடந்த ரமலான் மாதத்தில் மட்டும் 300க்கும் அதிகமான மாற்று மதத்தினர் இஸ்லாத்தை தங்களது வாழ்க்கை நெறியாக மனமுவந்து ஏற்றுக் கொண்டுள்ளனர் என் ஜுபைபி தெரிவிக்கிறார்.
அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் உள்பட உலகின் பல்வேறு நாடுகளைச் சார்ந்த ஆண்களும், பெண்களும் இதில் அடங்குவர். இஸ்லாத்தின் மகத்துவத்தைபுரிந்துகொண்டு அவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டதாக அவர் கூறினார்.
தார் அல் பிர் மையத்திற்கு வருகை தருவோரிடம் இஸ்லாத்தைக் குறித்தும், இறுதித் தூதரைக் குறித்தும் அவர்களின் உள்ளங்களில் எழும் சந்தேகங்களுக்கு உரிய முறையில் பதில் அளிக்கப்பட்டு விளக்கமளிக்கப்படுகின்றன. திருக்குர்ஆனின் மொழிப்பெயர்ப்புகள், நபி(ஸல்) அவர்களின் வாழ்க்கையைக் குறித்த பல்வேறு மொழிகளிலான நூற்களும் அவர்களுக்கு வழங்கப்படுகின்றன.
ஜசக்கல்லாஹ் ஹைர ....
http://www.thoothuonline.com/1500-people-accept-islam-in-dubai/
பெருநாள் தொழுகை

பெருநாள் தொழுகை


பெருநாள் தொழுகை

Post image for பெருநாள் தொழுகை
மாதம் ஒரு பண்டிகை நாள். ஊருக்கொரு திருநாள். ஒவ்வொரு குடும்பத்திற்கும் அவரவர் நேசிக்கும் அவ்லியாக்களுக்கொரு பெருநாள் என எந்த நன்மையும் இல்லாத பற்பல பெருநாட்களை கொண்டாடி வரும் இன்றைய முஸ்லிம்களுக்கு இறைத்தூதர் நபி அவர்கள் காட்டிச் சென்ற பெருநாட்களை தெளிவாக அறிந்து கொள்வோம்.


கடமையான ஃபித்ரா

கடமையான ஃபித்ரா


கடமையான ஃபித்ரா

Post image for கடமையான ஃபித்ராபசி தாகத்துடன் நோன்பு வைத்த நாம் பெருநாளுக்கு முன் தான தர்மத்தைக் கொண்டு ஆரம்பிக்க வேண்டும். அன்று எவரும் பசி பட்டினியுடன் இருக்கக்கூடாது. அன்று நோன்பு வைப்பதும் தடுக்கப்பட்டது என நபி  அவர்கள் அறிவுறுத்தினார்கள்.நபி  அவர்கள் அழைப்பாளர்களை மக்காவின் தெருக்களுக்கு அனுப்பி “தெரிந்து கொள்ளுங்கள்! நிச்சயமாக ஸதகத்துல் ஃபித்ர் ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கடமையாகும்” என்ற வாசகத்தை கூறச் சொன்னார்கள். ஆதாரம்: திர்மிதி
நோன்பில் நிகழ்ந்த தவறிலிருந்து தூய்மைப்படுத்துவதற்காகவும் ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும் என்பதற்காகவும் நபி  அவர்கள் ஸதகாத்துல் ஃபித்ரைக் கடமையாக்கினார்கள். ஆதாரம்: அபூதாவூத்
இறைவனையே இழிவுபடுத்தும்  ஒரு இறைவேதம் - பாகம் -02

இறைவனையே இழிவுபடுத்தும் ஒரு இறைவேதம் - பாகம் -02

கர்த்தருக்கு ஓய்வு தேவையா?

பலவீனமாகவே படைக்கப்பட்ட மனிதன் அளவுக்கு மீறிய வேலைகளை செய்வதால் அவனுக்கு கலைப்பு ஏற்படுவது இயல்பான ஒன்று. அதே போன்று அவனது பலவீனத்தின் காரணமாக அவனுக்கு ஓய்வும் உறக்கமும் அவசியமான ஒன்றாகிவிட்டது.

ஆனால், இந்த உலகம் மற்றும் இந்த அண்டசராசரங்கள் அனைத்தையும் படைத்து, பரிபாலித்து, இரட்சித்து வரும் ஏக இறைவனாகிய கர்த்தருக்கு இது போன்று பலவீனங்கள் இருக்குமா என்றால் கண்டிப்பாக இருக்காது - இருக்கவும் முடியாது. காரணம் பலவீனங்களுக்கெல்லாம் அப்பாற்பட்ட மகா சக்தி பொருந்தியவராகத்தான் கர்த்தர் இருப்பார் - இருக்க முடியும். இதில் எவருக்கும் எந்தவிதத்திலும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. அப்படியே எவரேனும் கர்த்தருக்கு கலைப்பு ஏற்படும் என்று கூறுவாரேயானால் அவர் சர்வ வல்லமைப் பொருந்திய கர்த்தரை குறைத்து மதிப்பிட்டுவிட்டார் என்பது தான் அர்த்தமாக இருக்க முடியும்.
கல்கி அவதாரம்

கல்கி அவதாரம்

இந்துக்களே,இது ஒரு இனிப்பான செய்தி!!!

ஹிந்துக்களின் வேதாகமத்தில் சொல்லப்படும், கடைசி அவதாரமான கல்கி, இறைதூதர் அப்துல்லாஹ்வின் மகன் முஹம்மதாவார்.

இதை நாம் சொல்லவில்லை, சமீபத்தில் ஹிந்தி மொழியில் வெளிவந்த புத்தகத்தின் சாராம்சமாகும். இந்த நூல் வெளியானபின், இந்தியாவே ஒரு கலங்கு கலங்கி விட்டது என்றால் மிகையல்ல. இதை ஒரு இஸ்லாமியர் எழுதியிருந்தால், அவர் இந்நேரம் சிறையிலடைக்கப்பட்டிருப்பதோடு, அந்த புத்தகத்தையும் தடை செய்திருப்பார்கள்.

ஆனால், கல்கி அவதாரத்தைப் பற்றிய இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டு, “பிரபஞ்ச இறைத்தூதின் வழிகாட்டி” என்னும் இந்த புத்தகம், வங்காளத்தில் இருந்து வெளிவந்ததாகும். இது அலஹாபாத் பல்கலைக்கழகத்தில் ஒரு முக்கிய அத்தாட்சியாக இருக்கிறது. இதை எழுதியது, தலைசிறந்த ஆய்வாளரான பண்டிட் வைத் ப்ரகாஷ் என்னும், ஒரு பிராமண சமஸ்கிருத பண்டிட்டாவார்.
இந்து புரோகிதர் இஸ்லாத்தில் இணைந்தார்

இந்து புரோகிதர் இஸ்லாத்தில் இணைந்தார்



இந்து புரோகிதர் இஸ்லாத்தில் இணைந்தார்
சுஷில் குமார் ஷர்மா எனும் அப்துர் ரஹ்மான் ஹரியானா மாநிலத்தில் உள்ள அமதல்பூர் எனும் குக்கிராமத்தை சேர்ந்தவர். அக்கிராமத்தில் உள்ள கோவிலில் மத சடங்குகளை செய்யும் இந்து வைதீக குடும்பத்தில் பிறந்தவர்.மே மாதம்12,2002 அன்று சவூதி அரேபியாவின் ஜித்தா நகருக்கு பணி நிமித்தமாக வந்தார்.
ஜித்தாவில் கம்பெனி இருப்பிடத்தில் தங்கி இருந்த போது உடன் வேலை செய்யும் ஒரு நண்பர் சில இஸ்லாமிய புத்தகங்களை கொடுத்துள்ளார். பிறகு சுஷில் குமார் சர்மா ரியாத் நகரில் உள்ள நௌரா மகளிர் பல்கலைகழகத்திற்கு பணி மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
அப்துர் ரஹ்மான் கூறுகிறார்.
நௌரா மகளிர் பல்கலைகழகத்தில் கம்பெனி கேம்ப்-ல் இஸ்லாத்தை பற்றி கூறிய நிறைய இந்தியா மற்றும் பாகிஸ்தானை சேர்ந்த பல நண்பர்களை சந்தித்தேன். அவர்கள் ஒய்வு நேரத்தில் இறைத்தூதர்கள் பற்றியும், இறைத்தூதர் முஹம்மது(ஸல்) அவர்களது பொன்மொழிகள் பற்றியும் கூறுவார்கள்
எனது இதயம் நடுக்கத்திற்கு உள்ளானது. எனது மரணத்திற்கு பிறகு எனது நிலை என்னவாகும்? என்னுடைய பாவங்கள் என்னை நரகத்திற்கு கொண்டு சேர்க்குமா? என்று என்னை நானே கேட்டு கொண்டேன்.நிராகரிப்பாளர்கள் மற்றும் பாவிகளின் மண்ணறை வேதனை பற்றி நான் மிகவும் அச்சப்படேன்.
தூக்கமின்றி இரவுகளை கழித்தேன். இஸ்லாத்தை தழுவவும், முஹம்மது நபி(ஸல்) அவர்களை உண்மையாக பின்பற்றுபவனாகவும் மாற இதுவே சரியான தருணம் என உணர்ந்தேன்.என்னுடைய வாழ்வின் உண்மையின் தேடுதல் இஸ்லாத்தில் முழுமை அடைந்தது.

இன வேறுபாடுகள் இல்லாமல் சகோதரத்துவத்தை பேணும் பண்பே இஸ்லாத்தை நோக்கி என்னை ஈர்த்தது.
அல் ஃபத்தாவில் உள்ள இஸ்லாமிய அழைப்பகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் என்னை கலிமா கூற இமாம் அவர்கள் அழைத்தார்.
“அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரிய இறைவன் வேறு யாரும் இல்லை. முஹம்மது (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் திருத்தூதர் ஆவார்” என்று முழுமனதுடன் கூறினேன்.இமாம் அவர்கள் அப்துர் ரஹ்மான் என்று எனது பேரை மாற்றி கொள்ள ஆலோசனை வழங்கினார்கள்.நானும் உடனே முழுமனதுடன் ஒப்புக்கொண்டேன்.
எனக்கு மனைவியும் 16 வயதில் மற்றும் 7 வயதில் இரு மகன்களும் உள்ளனர். இஸ்லாமிய தூதை என்னுடைய குடும்பத்திற்கு கொண்டு சேர்க்கும் பொறுப்பு என் முன்னால் இருக்கிறது. நான் தொலைபேசி மூலம் இஸ்லாத்தை தழுவியதை குடும்பத்தாரிடம் தெரிவித்தேன். அவர்கள் முதலில் நம்பவில்லை. என்னுடைய மனைவி நான் விடுமுறைக்கு இந்தியா வரும் போது முடிவு செய்வதாக கூறுகிறாள்.
ஒவ்வொரு நாளும் அல்லாஹ்விடம் என குடும்பத்தாருக்கு நேர்வழி காட்டவும் அவர்களுடைய இதயங்களை இஸ்லாத்தின் பால் இணக்கமாக்கவும் கண்ணீரோடு அழுது பிரார்த்தித்து கொண்டே இருக்கிறேன்.
ஊர்மக்கள், உறவினர்கள், குடும்பத்தாரின் எதிர்ப்புகளை நான் சந்திக்க வேண்டியிருக்கும்.ஆனால் அவற்றை எதிர்கொள்ள நான் உறுதியாக இருக்கிறேன். “அல்லாஹ் எனக்கு உதவி செய்வான்” என உறுதியாக நம்புகிறேன்.
“இம்மை மறுமையில் வெற்றி பெற இஸ்லாத்தை தழுவுங்கள் என்று முஸ்லிமல்லாத சகோதரர்களை பார்த்து அப்துர் ரஹ்மான் இறுதியாக அனைவருக்கும் அழைப்பு விடுத்தார்.”
-சவுதிகேசட் நியுஸ்
தமிழாக்கம்: அப்துல்லாஹ் முஹம்மது
tntj.net
http://onlyoneummah.blogspot.com/2010/11/blog-post_10.htm

ஏபல் சேவியர்! சத்தியபாதையை ஏற்றார்


சத்தியபாதையை ஏற்றார் ஏபல் சேவியர்!

புகழ்பெற்ற கால்பந்தாட்ட வீரர் ஏபல் சேவியர் கடந்தவாரம் தன்னுடைய அமீரக பயணத்தின்போது இஸ்லாம் மார்க்கத்திற்கு மாறினார். ஆப்பிரிக்க நாடான மொசாம்பிக்கில் பிறந்த இவர் லாஸ் ஏஞ்சல்ஸ் கேலாக்ஸி, போர்ச்சுகல், இத்தாலி, ஸ்பெயின், நெதர்லாந்து, இங்கிலாந்து, துருக்கி, ஜெர்மனி மற்றும் அமெரிக்கா அணிக்காகவும் விளையாடியவர். மேலும் தன்னுடைய 38வது வயதில் கால்பந்தாட்டத்திலிருந்து ஓய்வுப்பெறப்போவதாகவும் அறிவித்துள்ளார். ஓய்வு பெறுவது வருத்தமாக இருந்தாலும் என்னுடைய வாழ்கையின் புதிய கட்டத்திற்கு செல்வது மகிழ்ச்சியளிப்பதாகவும் தெரிவித்துள்ளார். அவர் தன்னுடைய பெயரை பைசல் சேவியர் என்று மாற்றியுள்ளார். இஸ்லாமிய மார்க்கமானது அமைதி, சமத்துவம், சுதந்திரம் மற்றும் நம்பிக்கை அளிப்பதாகவும் இவைகள் அடிப்படையில் முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் தெரிவித்துள்ளார்.

தற்போது இவர் ஐ.நா.வின் சார்பில் பல்வேறு சேவைகளில் ஈடுபட்டுள்ளார்.

தகவல்:
அல் அராபிய

தமிழில் : அபு இஸாரா 
கேள்வி எண் 1.
குர்ஆனின் பல பிரதிகள் உஸ்மான் (ரலி) அவர்கள் காலத்தில்; உஸ்மான் (ரலி) அவர்களால் எரிக்கப்பட்டது. குர்ஆன் இறைவனால் அருளப்பட்டதல்ல. மாறாக உஸ்மான் (ரலி) அவர்களால் தொகுப்பட்ட பிரதிதானே தற்போதுள்ள குர்ஆன்?.


பதில்:
இஸ்லாத்தின் மூன்றாவது கலிபா உஸ்மான் (ரலி) அவர்கள் காலத்தில் ஒன்றுக் கொன்று முரண்பட்ட பல குர்ஆனின் பிரதிகளை தொகுத்து ஒரே குர்ஆனாக உருவாக்கப் பட்டதுதான் இன்றைய அருள்மறை என்பது, குர்ஆனை பற்றி உலவுகின்ற கட்டுக்கதைகளில் ஒன்று. எந்த அருள்மறை முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ்வால் இறக்கியருளப்பட்டதோ அதே அருள்மறைதான், இஸ்லாமிய உலகத்தினரால் பெரிதும் போற்றி மதிக்கப்படும் அல்லாஹ்வின் வேதமாக இன்றும் இவ்வுலகில் திகழ்கின்றது. இன்றைக்கு இருக்கும் அருள்மறை குர்ஆன் அல்லாஹ்வின் தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் நேரடி கண்காணிப்பில் தொகுக்கப்பட்ட ஒன்று. கட்டுக்கதைக்கான ஆணிவேர் எது என்று நாம் இப்போது ஆய்வு செய்வோம்.



விவேகானந்தர் பார்வையில் இஸ்லாம்

விவேகானந்தர் பார்வையில் இஸ்லாம்


விவேகானந்தர் பார்வையில் இஸ்லாம்

நன்றி : மதுக்கூர் இராமலிங்கம்
சுவாமி விவேகானந்தர் ஒரு உண்மையான ஆன்மீகவாதி. உலகின் அனைத்து மதங்களின் உன்னதங்களையும், போற்றிப் பாராட்டியவர். ஆனால் இன்று மதவெறியைக் கிளறி நாட்டை சுடுகாடாக்க முயலும் இயக்கத்தினர் தனது பிரச்சாரத்திற்கு விவேகானந்தரை பயன்படுத்திக் கொள்கிறது. இது விவேகானந்தரை இழிவுபடுத்துவது ஆகும்.

இஸ்லாம் மதம் குறித்தும், முகலாய மன்னர்களின் ஆட்சி குறித்தும் அவர்கள் பொய்மூட்டைகளை அவிழ்த்து விடுகின்றனர். ஆனால் விவேகானந்தர் இஸ்லாம் மதம் குறித்து மிக உயரிய எண்ணம் கொண்டு இருந்தார்.

''சமத்துவத்தைப் பற்றி ஏதேனும் ஒரு மதம் பாராட்டத்தக்க முறையில் சொல்லியிருந்தால் அது இஸ்லாம் மட்டுமே என்பது தான் எனது அனுபவம்.''

முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், கம்யூனிஸ்டுகள் ஆகிய மூவரும் தான் எங்கள் பிரதான எதிரிகள் என்று கூறும் அவர்கள் விவேகானந்தர் பெயரை உச்சரிக்கக் கூட தகுதியற்றவர்கள் என்பதை இதன் மூலம் உணரலாம்.

இஸ்லாமிய மன்னர்கள் இந்துக்களைச் சித்ரவதை செய்து பலவந்தமாக மதம் மாற்றினர் என்ற பொய்யை வாய் வலிக்காமல் சொல்லி வருகின்றார்கள். ஆனால் விவேகானந்தர்..,

''பாமர மக்களுக்கு இஸ்லாம் ஒரு செய்தியாக வந்தது. முதல் செய்தி சமத்தவம், ஒரே மதம் தான் உள்ளது.., அது அன்பு, வம்சம், நிறம்.. அல்லது வேறு எதுபற்றியும் எந்தக் கேள்வியும் கிடையாது'' என்று கூறினார்.

ஜாதியக் கொடுமைகளின் வெப்பம் தாங்காமல் தான் பெரும்பகுதி மக்கள் இஸ்லாமியர்களாக மதம் மாறினார்கள் என்பதை விவேகானந்தர் இதயப்பூர்வமாக ஒப்புக் கொண்டிருக்கிறார் என்பதையே இது காட்டுகின்றது.

கேரள மாநிலம் மலபார் பகுதியைச் சேர்ந்த ஏராளமாக தலித் மக்கள் இஸ்லாம் மதத்தைத் தழுவினார்கள். இதைக் கண்ட சனாதனவாதிகள் எதிர்ப்பு கிளப்பிய போது விவேகானந்தர் அவர்களுக்கு அமைதியாகப் பதில் சொன்னார்..,

ஒலிம்பிக்ஸ் 2012 - இஸ்லாமை நோக்கி மக்கள்

பெங்களூர் - ஒலிம்பிக்ஸ் 2012 - இஸ்லாமை நோக்கி மக்கள்


நம் அனைவர் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமீன்...

பெங்களூர் மாநகரம். 

1. தன் கார் பழுதடைந்ததால் ஆட்டோவுக்காக காத்திருக்கின்றார் அந்த ஹிந்து சந்நியாசி. ஆட்டோ வருகின்றது. உட்காரும்போதே அவரை ஆச்சர்யம் தொற்றிக்கொள்கின்றது. தன் கண்ணெதிரே இருந்த இஸ்லாம் குறித்த துண்டுப்பிரசுரங்களை ஆர்வமாக எடுத்து படிக்க ஆரம்பிக்கின்றார். வியப்புடன் அந்த வார்த்தைகள் அவரிடம் இருந்து வெளிப்படுகின்றன "நீங்கள் எப்படியெல்லாம் இஸ்லாமை பரப்புகின்றீர்கள் என்பதை ஆச்சர்யத்துடன் பார்க்கின்றேன்". 

இஸ்லாம் குறித்து மேலும் அறிந்துக்கொள்ளும் ஆர்வம் அவருக்கு மிகுந்துவிட, அந்த ஆட்டோ ஓட்டுனரான ஹபிஸ் முஹம்மத் சாதிக்கிடம் "குர்ஆன் அர்த்தங்களின் கன்னட மொழிப்பெயர்ப்பை" அனுப்புமாறு கேட்டுக்கொள்கின்றார். 

2. இதே போன்றே மற்றொரு நிகழ்வை விவரிக்கின்றார் மற்றொரு ஆட்டோ ஓட்டுனரான பாஷா. அன்று ஹெப்பலில் (Hebbal) இருந்து ஒரு வாடிக்கையாளரை ஏற்றிக்கொண்டு ஒரு தொலைத்தூர பயணத்திற்கு ஆயத்தமாகின்றார் பாஷா. பயணத்தின் போது அந்த ஆட்டோவில் இருந்த இஸ்லாம் குறித்த அனைத்து பிரசுரங்களையும் படித்த அந்த கஸ்டமர், தன் வீட்டு முகவரியை கொடுத்து குர்ஆன் அனுப்ப முடியுமா என்று கேட்டுக்கொள்ள பாஷாவிற்கு மகிழ்ச்சி தாளவில்லை.

அடுத்த நாளே குர்ஆன் அடங்கிய பரிசுப்பெட்டகத்தை அந்த கஸ்டமரின் வீட்டிற்கு சென்று கொடுக்கின்றார் பாஷா. புத்தகங்களுக்கு விலையாக ஆயிரம் ருபாய் நோட்டை எடுத்து அந்த வாடிக்கையாளர் நீட்ட நெகிழ்ச்சியுடன் கூறினார் பாஷா, "இல்லை சார். எனக்கு வேண்டாம். மறுமை நாளில் இதற்குரிய வெகுமதி எனக்கு கிடைத்தால் போதும்". 

பாஷாவின் பதில் ஒரு கணம் அந்த வாடிக்கையாளரை திகைக்க வைக்க தன் ஆசையை வெளிப்படுத்தினார் பாஷா, "என்னுடைய ஒரே ஒரு வேண்டுகோள், குர்ஆனை நீங்கள் படித்து புரிந்துக்கொண்டு உங்கள் குடும்பத்தினருக்கும் இந்த செய்தியை ஏற்றிவைக்க வேண்டும் என்பதுதான். உங்கள் நண்பர்களுக்கும் குர்ஆனை அறிமுகப்படுத்தி அவர்களுக்கும் நான் இத்தகைய பரிசுப்பெட்டகத்தை கொடுக்கும் நிலை ஏற்பட்டால் நான் மிகுந்த மகிழ்ச்சியடைவேன்".

3. வெள்ளரா சந்திப்பில் நிசார் அஹமது அவர்களுக்கு ஏற்பட்ட அனுபவம் சற்றே கிலியூட்டக்கூடியது. அவருடைய ஆட்டோவை பின்தொடர்ந்து வந்த போலிஸ் ரோந்து வாகனம் அவரை மடக்கியது அந்த சந்திப்பில் தான். 

முகத்தில் கலவரத்துடன் என்னவோ ஏதோ என்று பயந்து விசாரிக்க சென்ற அஹமதுவிடம் அந்த ரோந்து வாகனத்தில் இருந்த போலீஸ்காரர், "எனக்கு 'இஸ்லாம் குறித்த தவறான புரிதல்கள்' என்ற புத்தகத்தை கொடுக்க முடியுமா? பாதுகாப்பு பணியில் ஒருமுறை ஈடுபட்டிருந்த போது அதனை பார்த்திருக்கின்றேன். அன்றிலிருந்து அந்த புத்தகத்தை தேடிக்கொண்டிருக்கின்றேன். இன்று உங்கள் ஆட்டோவில் அந்த புத்தகத்தை கண்டவுடன் உங்களை பின்தொடர ஆரம்பித்துவிட்டேன்" என்று காரணத்தை கூறினார். 

மகிழ்ச்சியுடன் அந்த புத்தகத்தை அதிகாரிக்கு பரிசளித்துவிட்டு நடையை கட்டினார் நிசார் அஹமது. 

இந்த நிகழ்வுகள் உங்களில் பலருக்கு வியப்பையும், இவையெல்லாம் என்ன என்று அறியும் ஆர்வத்தையும் கொடுத்திருக்கலாம். நமக்கே இப்படியென்றால், இந்த பணியை செய்யும் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு எப்படியிருக்கும்? 

சென்ற மாதத்தின் பிற்பகுதியில் பெங்களூர் நகரின் முஸ்லிம் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு ஒரு இனம் புரியாத பரபரப்பும், மகிழ்ச்சியும் தொற்றிக்கொண்டிருந்தது. சும்மாவா என்ன? இதுநாள் வரை வாடிக்கையாளர்களை ஏற்றி சென்றுக்கொண்டிருந்த அவர்களது வாகனம், இனி இறைச்செய்திகளையும் தாங்கி செல்லப்போகின்றது. 

இந்த செயல்திட்டத்திற்கு பின்னால் இருப்பது "சலாம் சென்டர்" என்ற அமைப்பு. இவர்களுடைய அணுகுமுறை நிச்சயம் புதுமையானது, புரட்சிகரமானது. இஸ்லாம் குறித்த தவறான புரிதலை களையவும், இஸ்லாமை எடுத்துக் கூறவும் ஆட்டோக்களில் சிறிய அளவிலான இஸ்லாமிய நூலகத்தை அமைத்து அழைப்பு பணியை மேற்கொண்டுள்ளது இந்த அமைப்பு. 

ஓட்டுனருக்கு பின்புறம், அழகாக வடிவமைக்கப்பட்ட ஸ்டாண்டில், இஸ்லாம் குறித்து பல்வேறு தலைப்புகளில் துண்டுப்பிரசுரங்கள் வைக்கப்படுகின்றன. பயணம் செய்பவர்கள் அந்த பிரசுரங்களை எடுத்து படிக்குமாறு ஊக்கப்படுத்தப்படுகின்றார்கள். இஸ்லாம் குறித்து மேலும் அறிந்துக்கொள்ள விரும்புபவர்கள் தங்கள் முகவரியை கொடுப்பதின் மூலம் குர்ஆன், நாயகம் (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு, இஸ்லாம் குறித்த தவறான புரிதல்களை விளக்கும் ஒரு புத்தகம் ஆகியவை அடங்கிய பரிசுப்பெட்டகத்தை பெற்றுக்கொள்ளலாம். 


ஒவ்வொரு மாதமும் ஆட்டோக்களில் வைக்கப்படும் துண்டுப்பிரசுரங்களின் தலைப்புகள் மாற்றப்படுகின்றன. 

சலாம் சென்டரின் "எல்லோருக்கும் குர்ஆன்" என்ற செயல்திட்டத்தின் ஒரு பகுதியான இந்த அணுகுமுறை பரவலான வரவேற்பை பெற்றுள்ளது. இந்த திட்டம் முதல்முறையாக அறிவிக்கப்பட்ட போது, இதனை செயல்படுத்த முன்வந்தவர் நாம் மேலே பார்த்த நிசார் அஹமத் என்ற சகோதரர் தான். 

நிசார் அஹமது ஒரு அற்புதமான பட்டத்திற்கு சொந்தகாரரும் கூட. பெங்களூர் நகரின் "மிக நேர்மையான ஆட்டோ ஓட்டுனர்" என்ற விருதை மாநகர போலிஸ் கமிஷனரிடம் பெற்றவர் இவர். தன் நேர்மையான வாழ்விற்கு காரணமான இஸ்லாமை அடுத்தவருக்கும் எடுத்து சொல்லவேண்டும் என்ற ஆழ்ந்த ஈடுபாடு நிசார் அஹமதுவிடம் இருந்து தீவிரமாகவே வெளிப்பட்டது. விளைவோ, அவர் தன் நண்பர்களுக்கு இந்த திட்டத்தை அறிமுகப்படுத்த, இன்று சுமார் 50 ஆட்டோக்கள் இறைச்செய்தியை அடுத்தவருக்கு எடுத்துக் கூறிக்கொண்டிருக்கின்றன.


ஆனால் விஷயம் இத்தோடு முடியவில்லை. வேறு பல நெகிழ்ச்சியான நிகழ்வுகளும் நடந்தேறியிருக்கின்றன. தன் மார்க்கத்தை அடுத்தவருக்கு எடுத்துக்கூற வேண்டிய நிலை வந்தபோது தான், இந்த ஆட்டோ ஒட்டுனர்களில் சிலர் தங்கள் மார்க்கத்தையே படிக்க ஆரம்பித்து இருக்கின்றனர். அந்த வகையில், தங்கள் வாடிக்கையாளர்களை விட தங்களுக்கே இந்த செயல்திட்டம் அதிகளவில் பயனளிப்பதாக கூறுகின்றனர் அவர்கள். 

"என் வாழ்க்கையை நேர்மையான முறையில் அமைத்துக்கொள்ள இந்த செயல்திட்டம் உதவுகின்றது. முன்பு என் வாடிக்கையாளர்களிடம் தவறான முறையில் நடந்துக்கொண்டதற்காக இன்று அதிகமதிகமாக வெட்கப்படுகின்றேன்" - உணர்ச்சிப்பெருக்கில் கூறுகின்றார் காதர் பாஷா என்ற ஓட்டுனர். 

இஸ்லாமை சரியாக விளங்கி இந்த ஆட்டோ ஓட்டுனர்கள் தங்கள் வாழ்வை அமைத்திடவும், இவர்கள் மேற்கொண்டுள்ள இந்த அற்புதமான முயற்சி மேலும் வெற்றியடையவும் பிரார்த்தியுங்கள். 

ஒலிம்பிக்ஸ் 2012:

ஆஹா..வந்துவிட்டார்கள் IERA (இஸ்லாமிய கல்வி மற்றும் ஆய்வு மையம்).

பிரிட்டனை சேர்ந்த இந்த அமைப்பின் செயல்திட்டங்கள் என்றுமே ஆச்சர்யத்தையும், புதுமையையும், புத்துணர்ச்சியையும் கொடுக்கக்கூடியவை (அல்ஹம்துலில்லாஹ்). உலக நாத்திக மாநாட்டில் கலந்துக்கொண்டு அவர்களை அசரடித்தாகட்டும், பிரபல நாத்திகர்கள் என்ற அறியப்படுபவர்களுடன் விவாதங்களில் கலந்துக்கொண்டு அவர்களை திணறடித்தாகட்டும், இவர்கள் என்றுமே ஆச்சர்யத்தை கொடுக்க தவறியதில்லை. 

இப்போது மற்றுமொரு செயல்திட்டத்துடன் அதிரடியாக இறங்கிவிட்டது இஸ்லாத்தை தழுவியவர்களால் துவக்கப்பட்ட இந்த அமைப்பு. 

மேட்டர் இதுதான். வரும் ஆகஸ்ட் நான்காம் தேதி, இதுவரை பிரிட்டனில் இல்லாத அளவு, நூற்றுக்கணக்கான முஸ்லிம்களுடன் "வாழ்க்கை விளையாட்டு மட்டுமா? (Is life just a game?)" என்ற வாசகத்துடன் ஒலிம்பிக் கிராமத்தில் அழைப்பு பணியை மேற்கொள்ளப்போகின்றது இந்த அமைப்பு. நீங்கள் இங்கிலாந்தில் வசிப்பவரா? ஒலிம்பிக் கிராமத்திற்கு வரும் ஆயிரக்கணக்கான மக்களில் சிலருக்காவது இஸ்லாமை எடுத்துக்கூற விரும்புகின்றீர்களா? நீங்களும் இந்த அழைப்பு பணியில் பங்கேற்கலாம். மேலும் விபரங்களுக்கு இங்கே பார்க்கவும். 


ஒலிம்பிக் கிராமத்திற்கு வெளியே அழைப்பு பணியில் ஈடுபட்டுள்ள IERA குழுவினர் (மஞ்சள் டீ-ஷர்ட் அணிந்திருப்பவர்கள்)



நான்காம் தேதி நடப்பது நடக்கட்டும். அதுவரை ஏன் வெயிட் செய்யவேண்டுமென்ற நோக்கில் IERA-வின் சிலர் ஒலிம்பிக் போட்டிகள் துவங்கிய அன்றே களமிறங்கிவிட்டனர். மிக அருமையான இவர்களுடைய அழைப்பு பணி பொதுமக்கள், மீடியாக்கள் என்று சமூகத்தின் அனைத்து பார்வையாளர்களையும் வெகுவாக கவர்ந்துள்ளது. 

இலண்டன் மேயர் போரிஸ் ஜான்சனுக்கு அழைப்பு பிரசுரம் அளிக்கப்பட்ட போது... 

IERA-வை பொருத்தவரை இந்த செயல்திட்டத்தில் பெண்களை அனுமதிக்கவில்லை. இது நிச்சயமாக ஆச்சர்யமான ஒன்று. மிக வீரியமான பெண்கள் அழைப்பு குழுவை கொண்டது இந்த அமைப்பு. கேம்பிரிஜ் பல்கலைகழக வளாகத்தில் செயல்படும் இவர்களின் பெண்கள் பிரிவை இதற்கு உதாரணம் கூறலாம். ஆயிரகணக்கானோர் கூடும் இடத்தில், பெண்களுக்கான பாதுகாப்பு குறித்த அச்சம் காரணமாக பெண்கள் பிரிவை இந்த குறிப்பிட்ட செயல்திட்டத்தில் பங்கேற்க அனுமதிக்கவில்லை என்று விளக்கம் கூறியிருக்கின்றது IERA. 

எது எப்படியோ, இவர்கள் அழைப்பு பணியை தொடங்கிய சில நாட்களிலேயே இறைவன் மகத்தான வெற்றியை கொடுத்துள்ளான். இதுவரை சுமார் 10-15 சகோதர சகோதரிகள் ஒலிம்பிக் கிராமத்தில் இஸ்லாமை ஏற்றுக்கொண்டுள்ளனர். 

பாதுகாப்பு வீரர்களுக்கு இஸ்லாமை எடுத்து கூறுதல் 

"நான் முஸ்லிமாக முடியுமா?" என்று தாமாக முன்வந்து கேட்ட சகோதரியாகட்டும், கிருத்துவத்தை எடுத்து கூற வந்து முஸ்லிமான அந்த கிருத்துவ மிஷனரியாட்டும், விவாதத்திற்கு பின்னால் இஸ்லாமை தங்கள் வாழ்வியல் நெறியாக ஏற்றுக்கொண்ட அந்த நாத்திகர்களாகட்டும் - என பல சுவாரசியமான நிகழ்வுகளுடன் அசத்தலாக சென்றுக்கொண்டிருக்கின்றது இந்த ஒலிம்பிக் அழைப்பு பணி. 

IERA குழுவினர் 

உலகளவில் இஸ்லாமை எடுத்துக்கூறும் பணிகள் சமீப காலங்களாக அதிகரித்து இருக்கின்றன. அதிக அளவிலான புதிய முஸ்லிம்களையும் இப்போதெல்லாம் நட்பு வட்டாரத்தில் பார்க்க முடிகின்றது. இந்த சூழ்நிலையில் IERA எடுத்துள்ள இந்த மகத்தான பணி வெற்றி பெற இறைவனை பிரார்த்திப்போம். 

இறைவன் நம் அனைவரையும் நேர்வழியில் நிலைநிறுத்துவானாக...ஆமீன்.

இறைவேனே எல்லாம் அறிந்தவன்... 

References:
1. Auto Drivers Now Turn ‘Divine Couriers’ - karnataka muslims. link
2. Is life just a game - IERA. link

வெள்ளியால் செய்யப்பட்ட புனித அல்குர்ஆன்

வெள்ளியால் செய்யப்பட்ட புனித அல்குர்ஆன் துபாயில் அறிமுகம்.

வெள்ளியால் செய்யப்பட்ட புனித அல்குர்ஆன் துபாயில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஈரானைச் சோந்த துபாய் கலைஞரான ரஹீன் அக்பர் கன்ஸடியால் வெள்ளியலான புனித அல்குர்ஆன் பிரதி உருவாக்கப்பட்டுள்ளது.கன்ஸடியால் கடந்த 12வருடங்களில் ஒவ்வொருவருடமும் புனித அல்குர்ஆனின் வெவ்வெறுபட்ட பிரதிகள் உருவாக்கப்பட்டு சாதனைகள் நிகழ்த்தப்பட்டு வருகின்றன.

இப் புனித அல்குர்ஆன் வெள்ளி மற்றும் பிளட்டினம் முலாம் பூசப்பட்ட தாள்களைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதுடன், இது 6கிலோகிராம் எடையைக் கொண்டதாகும்.மேலும் இத்தாள்கள் 21 சென்றிமீற்றர் நீளத்தையும், 15சென்றிமீற்றர் அகலத்தையும் கொண்டதுடன்,20கரட் வைரம்,10கரட் ரூபி மற்றும் நீலமாணிக்கம் அடங்களாக 2500 மாணிக்கக்கற்களை கொண்டு அழகுபடுத்தப்பட்டுள்ளது. 

 இப் புனித குர்ஆனை உருவாக்குவதற்கு 10மாதங்கள் சென்றுள்ளதுடன்,இதன் உருவாக்கத்திற்கு 150,000திர்ஹம்கள் செலவிடப்பட்டுள்ளது. சித்திரக்கலை பற்றிய ஏதெனும் முறையான பயிற்சி கன்ஸடி பெறவில்லை, எனினும் சிறுவயலிருந்தே சித்திரக்கலை ஆற்றல் அவரிடம் காணப்பட்டுள்ளது.சாதாரண வெற்றுக் கண்னுக்கு புலப்படும் எழுத்துக்களின் 20மடங்கான சிறியஅளவான எழுத்துக்களை எழுத மற்றும் வாசிக்கக்கூடிய திறமை கன்ஸடிக்கு காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. 2மில்லிமீற்றர் நீளமும், 1.5மில்லிமீற்றர் அகலமும் 600 பக்கங்களையும் கொண்ட உலகின் மிகச்சிறிய குர்ஆனும் ரஹீன் அக்பர் கன்ஸடியால் உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆபாச பத்திரிகைகளும் அதன் விபரீதங்களும் - சவூதி ஃபத்வா

ஆபாச பத்திரிகைகளும் அதன் விபரீதங்களும் - சவூதி ஃபத்வா

ஆபாச பத்திரிகைகளும் அதன் விபரீதங்களும் - சவூதி ஃபத்வா

பிஸ்மில்லாஹ்ஹிர் ரஹ்மானிர் ரஹீம்

புகழ் அனைத்தும் அல்லாஹ்விற்கே உரித்தானது. அல்லாஹ்வின் அருளும் சாந்தியும் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும் அவர்களின் குடும்பத்தினர்கள் தோழர்கள் தோழியர்கள் அனைவர்கள் மீதும் என்றென்றும் உண்டாகட்டுமாக !

நவீன காலத்தில் வாழும் முஸ்லிம்கள் பல சோதனைகளுக்கு உட்பட்டுள்ளனர். குழப்பம் அனைத்து திசைகளிலும் அவர்களைச் சூழ்ந்துள்ளன. முஸ்லிம்களில் பெரும் பான்மையினர் அதில் வீழ்ந்து தத்தலித்துக் கொண்டிருக்கின்றனர். (மார்க்கத்தில்) வெறுக்கப்பட்ட காரியங்கள் தலை விரித்தாடுகிறது. மனிதர்கள் அல்லாஹ்வுக்கு எவ்வித பயமோ, வெட்கமோ, இன்றி மானக்கேடான காரியங்களைப் பகிரங்கமாக துணிந்து செய்கின்றனர்.

இதற்கெல்லாம் பிரதான காரணமாக விளங்குவது இறை மார்க்கத்தின் பொடு போக்கும் இறைவனது சட்ட வறையறைகளை மீறுவதும் சீர்திருத்தவாதிகளாக இருக்கும் பெரும் பான்மையான மக்கள் அல்லாஹ்வின் மார்க்கத்தை எடுத்து நடக்காததும், நன்மையை ஏவி தீமையை தடுக்காததுமாகும். குழப்பமான இச்சூழலிருந்து விடுதலை பெற இறைவனிடம் பாவ மன்னிப்புத் தேடுவதோடு அவனது கட்டளைகளை எடுத்து அவனது விலக்கல்களைத் தவிர்த்து நடந்து, அசத்திய வழியில் செல்லும் தீயோர்களின் கரங்களைப் பிடித்து சத்திய வழியில் இருத்துவதைத்தவிர முஸ்லிம்களின் ஈடேற்றத்திற்கான வேறு வழிகள் எதுவும் இருக்கவே முடியாது.நவீன காலத்தில் குழப்பங்களின் அச்சாணியாக தீய வார்த்தைகளையும் அழிவின் வாடிக்கையாளார்களையும், செக்ஸ் தொழிலாளர்களையும், விசுவாசிகளிடையே தீமைகள் பரவி அதில் குளிர் காய்வோரையும் அல்லாஹ்வும் அவனது திருத்தூதரும் ஏவியதும் விலக்கியதுமாகக் காணப்படுவதை எதிர்த்துப் போராடத்தூண்டுகின்ற தீயோர்களையும் அவர்களின் ஆதரவில் நடந்தேறுகின்ற ஆபாசப் பத்திரிப்கைகளையும், மனித உணர்வுகளைத் தூண்டுகின்ற பாலியல் அம்சங்களைத் தன்னகத்தே தாங்கி நிற்கும் பல்வகை ஆபாச சஞ்சிகைகள் பத்திரிக்கைகளையும் குறிப்பிடலாம்.

ஆய்வின் முடிவில் இவைகள் அனைத்தும் தீமைகளுக்கான விளம்பர சாதனமாகவும் மனித உணர்வுகளைத் தூண்டும் ஊடகங்களாகவும் அல்லாஹ் ஹராமாக்கியவைகளை செய்யுமாறு ஊக்குவிக்கின்றவைகளாகவுமே இருக்கிறன.

இப்பத்திரிக்கைகளில் பின் வரும் தீமைகள் காணப்படுகிறது ..

1 அதன் அட்டையின் மேற்புறமும் உட்புறமும் ஆபாசப் படங்கள்.

2 அதனுள் நிர்வாண கோலத்தில் அலங்கரிக்கப்பட்டுள்ள பெண்கள்.

3 பாலியல் உணர்வுகளை தூண்டும் அசிங்கமான வார்த்தைகளும் வெட்கம்

மானம் சூடு சொரணையற்ற வாசகங்கள், சமூக விழுமியங்கள் ஒழுக்கமாண்புகளைச் சிiதைக்கும் சிpங்கார வார்த்தைகள்.

4 அசிங்கமான ஆபாசக் கதைகள் கேடுகெட்ட தீய பாடகிகள் நடிகர்

நடிகைகளின் பயனற்ற செய்திகள் உளறல்கள்.

5 பெண்களைப் போகப் பொருளாகச் சித்தரித்து நிர்வாண உலகிற்கு

அவர்களை அழைத்துச் சென்று அவர்களின் உரிமைகளைப் பறித்து பெண் உரிமை

என்ற ஆபாச மாயையில் அவர்களை விழச்செய்து அவர்களின் கௌரவ

ஆடையான ஹிஜாபை (பர்தாவை)க்களையும் கோஷங்கள்.

6 இறை விசுவாசிகளான பெண்களை நிர்வாண வலையில் சி;க்க வைக்கும்பிரதான நோக்கில் நிர்வாண கோலத்துடன் காட்சிpத் தரும் பெண்களைக்

பெல்ஜிய நாட்டு கத்தோலிக்க புரோகிதர்  பாலியல் கொடுமையை செய்ததாக ஒப்புதல்

பெல்ஜிய நாட்டு கத்தோலிக்க புரோகிதர் பாலியல் கொடுமையை செய்ததாக ஒப்புதல்


நோபல் பரிசுக்கு பரிசீலிக்கப்பட்ட பெல்ஜிய நாட்டு கத்தோலிக்க புரோகிதர் பாலியல் கொடுமையை செய்ததாக ஒப்புதல்

ப்ரஸ்ஸல்ஸ்,ஜன.30:சமூக களத்தில் தீவிரமாக பணியாற்றிய பெல்ஜிய நாட்டு கத்தோலிக்க புரோகிதர் ஃப்ரான்காய்ஸ் ஹவ்டார்ட் பாலியல் கொடுமை செய்ததாக ஒப்புக்கொண்டுள்ளார்.

வளர்ந்துவரும் நாடுகளில் உலகமயமாக்கலின் விளைவுகளுக்கெதிராக போராட்டம் நடத்தியதால் ஹவ்டார்ட்டை நோபல் பரிசுக்கு பரிசீலிக்க வேண்டும் என்ற பிரச்சாரம் நடந்துவரும் வேளையில்தான் இக்குற்றச்சாட்டு எழுந்தது.

புரோகிதர் ஹவ்டார்ட்டின் குற்ற ஒப்புதலை பெல்ஜிய நாட்டு பத்திரிகைகள் வெளியிட்டுள்ளன. பெல்ஜியத்தில் பாலியல் வன்கொடுமைகளில் கத்தோலிக்க கிறிஸ்தவ பாதிரியார்கள் ஈடுபட்ட செய்தி அந்நாட்டை உலுக்கிய வேளையில் இச்சம்பவம் வெளியானது கத்தோலிக்க சபையை மேலும் நெருக்கடியில் ஆழ்த்தியுள்ளது.

பாதிக்கப்பட்டவர்களின் நிர்பந்தத்தால் கத்தோலிக்க சபை 100க்கும் மேற்பட்ட பாலியல் வன்கொடுமைகள் குறித்த தகவல்களை கடந்த செப்டம்பர் மாதம் வெளியிட்டிருந்தது. இரண்டு வயது சிறுவன் வரை பாதிரிகளின் காமவெறிக்கு பலியாகியுள்ளார்.

கடந்த அக்டோபர் மாதம் ஹவ்டார்ட்டை நோபல் பரிசுக்கு பரிசீலிக்க வேண்டும் என்ற பிரச்சாரம் துவங்கியது. அவ்வேளையில்தான் ஹவ்டார்ட் 40 ஆண்டுகளுக்கு முன்பு தனது சகோதரனை பாலியல் வன்கொடுமைச் செய்த நிகழ்வை ஒரு பெண்மணி வெளிக்கொணர்ந்தார். இதனைத் தொடர்ந்து நோபல் பரிசுக்கு ஹவ்டார்ட்டை முன்மொழியும் முயற்சியிலிருந்து அவரது ஆதரவாளர்கள் வாபஸ்பெற்றனர்.

உலகமயமாக்கலுக்கெதிராக போராடும் செட்ரா என்ற அமைப்பிலிருந்து ஹவ்டார்ட் ராஜினாமாச் செய்திருந்தார். தற்போது ஹவ்டார்ட் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Popular Posts

Popular Posts