https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiiBC8zBFMyntApWoZGvPUhTxa4Mhne9PlTbRdGurcNBv-IyAgvAHeHPvY9lpuAd3OROQHq3fGmOnf67o0LA-G42cqjI6GySmvhIQ-7FJtRHnADifymjskPc9HBWfap-ddUSoG9W6vzZB4/s320/image_preview.htm
இன்றைய உலகில் நாம்பார்க்கிறோம்.ஆசிரியருக்கு மாணவனும்,பெரியவர்களுக்குசிறியவர்களும்,பணக்காரனுக்கு ஏழையும்,அரசியல்வாதிகளுக்கு மக்களும் எழுந்து நின்று மரியாதைசெய்கிறார்கள்.இப்படி எழுந்து நின்று மரியாதைசெய்பவர்கள் தங்களைத் தாங்களே தாழ்த்திக்கொள்கின்றனர்.ஆனால் எல்லாவிடயத்திறகும்;வழிகாட்டக்கூடிய இஸ்லாம் இந்த விடயத்தை முற்றுமுலுதாக தடை செய்கின்றது.ஏனென்றால் இந்தவிடயத்தின் மூலம் ஏற்றத் தாழ்வுகளும்,பகைமைகளும்மனிதர்கள் மத்தியில் உண்டாகும் என்பதற்க்காகவேஇதனை இஸ்லாம் தடை செய்கின்றது.மரியாதைக்காகஎழுந்து நிற்பது ஒரு வணக்கம்தான்.ஆனாலும் அந்த நிற்றல்என்ற வணக்கம் எல்லாவற்றையும் படைத்தஅல்லாஹ_க்கு மாத்திறம்தான் செய்ய வேண்டும்அவனைத்தவிர எந்த ஒரு மனிதனுக்கும் இந்தவணக்கத்தை செய்யக்கூடாது.


அல்லாஹ_த்தஆலா தனது திருமரைக் குர்ஆனில் கூறும்போது கூட கியாம் (நிற்றல்) என்ற பொருள் தரக்கூடியஅறபுச் சொல்லைத்தான் பயன்; படுத்துகிறான்.
அல்லாஹ்வுக்கே கட்டுப்பட்டு நில்லுங்கள்”(அல்குர்ஆன்.2:238)

மேலும், இரவில் நின்று தொழும் தொழுகையைக்குறிப்பதற்கு கியாமுல்லைல்(இரவில் நிற்றல்) என்றவார்த்தையைத் தான் அல்லாஹ் பயன் படுத்துகிறான்.

இரவில் குறைவான நேரம் தவிர நிற்பீராக” (அல்குர்ஆன்73:02)


எனவே மரியாதைக்காக நிற்பது என்பது அல்லாஹ்விற்குமாத்திரம் தான் என்பது இந்த குர்ஆன் வசனங்களின் மூலம்தெட்டத்தெளிவாக விளங்குகின்றது.அப்படியே ஒரு புரம்முஸ்லிம் சமுதாயத்தை உற்று நோக்கினால் மார்கத்துக்குமுரனான இந்த விடயத்தை செய்துகொண்டிருக்கின்றார்கள்.இன்றைக்கு இருக்கக்கூடியமுஸ்லிம் பாடசாலைகளில் இந்த அனாச்சாரம் அதிகமாகநடப்பதை காணலாம்.வகுப்பறைக்குள் ஆசிரியர் வந்தால்எழுந்து நின்று மரியாதை செய்ய வேண்டும் என்றுமாணவர்களுக்கு முஸ்லிமான ஆசிரியர்கள்கட்டளையிடுகிறார்கள்.இந்தச் செயலை நபி(ஸல்)அவர்கள் வெறுத்தது இவர்களுக்குத்தெரியவில்லையா?அல்லது தெறிந்தும் இவர்களுக்குமரியாதை கிடைக்க வேண்டும் என்பதற்காகவேண்டிஇப்படிச் செய்கிறார்களா?


நபிகள் நாயகம் (ஸல்)அவர்கள் தமக்காக எழுந்துநிற்பதைக்கூட வெறுத்திறுக்கிறார்கள்.

ஒரு முறை நபி(ஸல்) அவர்கள்நோய்வாய்ப்பட்டார்கள்.அப்போது அவர்கள் உட்கார்ந்தநிலையில் தொழுகை நடத்தினார்கள். நாங்களும்அவர்களுக்குப் பின்னால் நின்று தொழுதோம். அவர்கள்திரும்பிப் பார்த்த போது நாங்கள் நின்று கொண்டிருப்பதைக்கண்டார்கள்.சைகை மூலம் எங்களை உட்காரச்சொன்னார்கள்.நாங்கள் உட்கார்ந்த நிலையில் அவர்களைப்பின்பற்றித் தொழுதோம். தொழுகையை முடித்தவுடன்பாரசீக,ரோமபுரி மன்னர்கள் அமர்ந்திருக்க மக்கள்நிற்பார்களே அது போன்ற செயலைச் செய்ய முற்பட்டுவிட்டீர்களே. இனிமேல்அவ்வாறு செய்யாதீர்கள். உங்கள்இமாம்களைப் பின்பற்றித் தொழுங்கள்.என்றுநபி(ஸல்)அவர்கள் கூறினார்கள். ஆதாரம்:(முஸ்லிம்,புகாரி.689,732,805,688 )

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiiBC8zBFMyntApWoZGvPUhTxa4Mhne9PlTbRdGurcNBv-IyAgvAHeHPvY9lpuAd3OROQHq3fGmOnf67o0LA-G42cqjI6GySmvhIQ-7FJtRHnADifymjskPc9HBWfap-ddUSoG9W6vzZB4/s320/image_preview.htm

யாருக்கேனும் நின்றுதொழுவதற்குமுடியாவிட்டால்இருந்து தொழுவதற்குமார்க்கத்தில் அனுமதிஇருக்கின்றது.அதனால்தான் நபியவர்கள்உட்கார்ந்துதொழவைத்தார்கள்.ஆனால் ஸகாபாக்களுக்கு நின்றுதொழுவதற்கு சக்தி பெற்றிருந்தார்கள்.அதனால்தான்அவர்கள் நின்று தொழுதார்கள்.அப்படி இருந்தும்கூடநபியவர்கள் அதனை தடை செய்கிறார்கள்.பாரசீகரோமபுரி மன்னர்கள் இருந்து கொண்டிருக்கும் போது மக்கள்அந்த மன்னர்களுக்கு மரியாதை செய்வதற்காக வேண்டிஎழுந்து நிற்பார்கள்அது போன்று இந்த விடயம்ஆகிவிடக்கூடாது என்பதற்காக வேண்டித்தான் நபியவர்கள்இதனைதடை செய்தார்கள்.இன்னும்சொல்லப்போனால.அப்படியானால் இந்த ஹதீஸ்மரியாதைக்காக எழுந்து நிற்பதைதடுக்கின்றது.என்பதைநாம் விளங்கிக்கொள்ளலாம்.இன்னுமொரு ஹதீஸைப் பார்ப்போம்



உலகத்தில் நபிகள் நாயகத்தை விட எங்களுக்குவிறுப்பமான ஒருவரும் இருக்கவில்லை. அவர்கள்எங்களை நோக்கி வரும் போது நாங்கள் அவர்களுக்காகஎழுந்து நிற்க மாட்டோம்.ஏனென்றால் எழுந்து நிற்பதைஅவர்கள் கடுமையாகவெருப்பார்கள் என்பதே இதற்குக்காரணம்.இதனை அனஸ்(ரழி)அறிவிக்கிறார்கள். ஆதாரம்;(அஹ்மது.12068,11895, திர்மிதி:-2678)


இந்த செய்தியின் மூலம் ஸகாபாக்கள் அமர்ந்துகொண்டிருக்கும் போது நபி(ஸல்) அவர்கள் வந்தால் கூடஎழுந்து நிற்க மாட்டார்கள்.ஏன் இந்த விடயம் நபி(ஸல்)அவர்களுக்குப் பிடிக்காது என்பதற்காகத்தான். ஆனால் இந்தஆசிரியர்கள் தங்களுக்கு எழுந்து நின்று மரியாதை செய்யவேண்டும் என்று கூறிகிறார்களே இவர்கள் தான்முஸ்லிமான ஆசிரியர்களா?அல்லது மாற்றுமதத்தவர்களின் செயல்களை பின்பற்றக்கூடியவர்களா?இஸ்லாத்தை பின்பற்றக் கூடிய ஆசிரியர்கள்இதனை சிந்திக்க வேண்டும்..அது மட்டுமல்ல அரசியல்வாதிகளுக்கும் எழுந்து நிற்கக் கூடாது.

நபிகள் நாயகத்துக்குப் பின் முஸ்லிம் சாம்ராஜ்யத்தின் 5வதுஅதிபதியாகத் திகழ்ந்தவர் முஆவியா (ரழி). அவர் வெளியேவந்த போது அவரைக் கண்டஅபதுல்லாஹ் பின் சுபைர்அவர்களும் இப்னு சஃப்வான் அவர்களும் எழுந்து நின்றனர்.உடனே முஆவியா(ரழி) அவர்கள் அவ்விருவருக்கும்அமருங்கள் என்றார்கள். பின்பு கூறினார்கள் தனக்காகமக்கள் எழுந்து நிற்க வேண்டும் என்று யார் விறும்புகிறாரோஅவர் தனது தங்குமிடத்தை நரகத்தில் ஏற்படுத்திக்கொள்கிறார். என்று நபி (ஸல்)அவர்கள் கூறியதை நான்கேட்டுள்ளேன்.என்று முஆவியா (ரழி)சொன்னார்கள்.ஆதாரம்:-(அபூதாவுத் 4552)


எனவே என் அன்பின் சகோதர,சகேதரிகளே! இப்படிப் பட்டசில செய்திகளிலிருந்து நாம் விளங்கிக் கொள்வது என்னவெனில் ஒரு மனிதன் இன்னுமொரு மனிதனுக்குமரியாதைக்காக எழுந்து நிற்கக் கூடாது என்பதை நாம்விளங்கிக் கொள்கிறோம். எனவே இந்த அனாச்சாரமானசெயல்களிலிருந்து எம்மை அல்லாஹ் பாதுகாப்பானாக!. 


ஆக்கம் :பாரிஸ் 

0 Response to " "

Popular Posts

Popular Posts