இல்லறம் - பாசமும் நேசமும் பூத்துக்  குலுங்க! 

திருமணம் என்பது மனிதர்கள் இழைப்பாற ஒதுங்கும் நந்தவனம் போன்றது, இன்னும் ஒவ்வொரு நாள் பொழுதினில் ஏற்படும் கஷ்டங்களையும், துன்பங்களையும் துடைத்து விடக் கூடிய ஆறுதல் அளிக்கும் தளமுமாகும். இஸ்லாம் இந்தத் திருமணத்தின் மூலமாக மட்டுமே எதிர்எதிர் பாலியல் கொண்டவர்களை இணைக்கின்றது. இஸ்லாம் இந்தத் திருமண பந்தத்தினை மிக அதிகமாகவே வலியுறுத்துவதோடு, அதில் பல அருட்கொடைகளும் உங்களுக்கு இருக்கின்றது என்று அறிவுறுத்துகின்றது.
"நீங்கள் அவர்களிடம் ஆறுதல் பெறுதற்குரிய (உங்கள்) மனைவியரை உங்களிலிருந்தே உங்களுக்காக அவன் படைத்திருப்பதும்; உங்களுக்கிடையே உவப்பையும், கிருபையையும் உண்டாக்கியிருப்பதும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதாகும்; சிந்தித்து உணரக்கூடிய சமூகத்திற்கு நிச்சயமாக, இதில் (பல) அத்தாட்சிகள் இருக்கின்றன."(அல்குர்ஆன் 30:21)
இஸ்லாம் வலியுறுத்தும் திருமணத்தின் நோக்கம் என்பது பல பயன்பாடுகளை உள்ளடக்கியுள்ளது. அது தனிமனிதர்களை தவறான கெட்ட நடத்தைகளிலிருந்தும், விபச்சாரத்தில் ஈடுபடுவதிலிருந்தும் பாதுகாக்கின்றது. இயற்கையிலேயே மனிதன் ஆசாபாசங்களில் தன்னை இழந்து விடக் கூடியவனாக இருக்கின்றான். இன்னும் ஷைத்தான் அவனது ஆசாபாசங்களைத் தூண்டி விட்டு, மனித இனம் வெட்கித்தலைகுனியக் கூடிய விபச்சாரத்தின் பக்கம் அழைத்துச் சென்று விடக் கூடியவனாகவும் இருக்கின்றான்.
பெண் ஷைத்தானைப் போலவே (மனதை மயக்கும் விதத்தில்) அணுகுகின்றாள், இன்னும் ஷைத்தானால் பீடிக்கப்பட்ட (மனதை மயக்கும் விதத்தில்) நிலையிலேயே வெளியேறுகின்றாள். உங்களில் ஒருவர் மனதை மயக்கும் விதத்தில் ஒரு பெண்ணைப் பார்ப்பீர்கள் என்றால், அவன் அவளது மனைவியிடம் செல்லட்டும், ஏனென்றால், மற்ற பெண்களிடம் உள்ளது போலவே உங்கள் மனைவியிடம் உள்ளது. அவன் தனது இச்சையை ஆகுமான வழியில் தீர்த்து திருப்தி கொள்ளட்டும். (முஸ்லிம்)இரண்டாவதாக, திருமணத்தின் மூலம் வாரிசுகள் உருவாகி, அதன் மூலம் இஸ்லாமிய சமுதாயம் வளர்வதற்கு வாய்ப்பு ஏற்படுகின்றது. முறையான திருமண உறவு முறையின் மூலம் பெற்றெடுக்கின்ற மழலைச் செல்வங்களின் மூலம், இறைத்தூதர் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ  அலைஹி வஸல்லம் அவர்களின் விருப்பத்தையும் நாம் நிறைவேற்றியவர்களாகின்றோம்.அபூஹ{ரைரா (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள் : இறைத்தூதர் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ  அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள், "திருமணம் செய்து கொள்ளுங்கள், ஏனென்றால் (மறுமை நாளில்) மற்ற சமுதாயங்களைக் காட்டிலும் என்னுடைய சமுதாயத்தவர்கள் அதிகமாக இருப்பதைக் காண நான் விரும்புகின்றேன்." (பைஹகி).
இவை தான் இஸ்லாம் வலியுறுத்தும் திருமணத்தின் நோக்கமெனினும், இன்னும் பல சிறப்பு அம்சங்கள் அதனுள் பொதிந்து கிடக்கின்றன.அதாவது ஒருவருக்கொருவர் அன்பு பாராட்டுவது, ஒருவர் மற்றவர் மீது கருணையோடும், இரக்கத்தோடும் நடந்து கொள்வது, இன்னும் ஒருவர் மற்றவரின் கெடுதல்களிலிருந்து பாதுகாப்புப் பெற்றுக்கொள்வது, அது மட்டுமல்ல இருவரும் இல்லறத்தை நல்லறமாக மாற்றுவதன் மூலம் நன்மையான பல காரியங்களை இணைந்து செய்வதற்கான சூழல் அங்கு நிலவ ஆரம்பிக்கின்றது, இருவருது அன்புப் பிணைப்பின் மூலமாக இஸ்லாமிய சமுதாயம் ஒரு பாதுகாக்கப்பட்ட சமுதாயமாக, பாதுகாப்புணர்வு கொண்ட சமுதாயமாக பரிணமிப்பதோடு, அங்கு பழக்க வழக்கங்களில் நன்னடத்தையும், சமூகம் மற்றும் உடல் ரீதியான ஆரோக்கியத்தையும் பெற்றுக் கொள்கின்றது.
துரதிருஷ்டவசமாக, மற்ற சமுதாயங்களைப் போலவே இன்றைக்கு முஸ்லிம் சமுதாயத்திலும் மணவிலக்குகள் அதிகரித்து வருவது மிகவும் கவலை அளிப்பதாக உள்ளது.
இன்றைக்கு நீங்கள் வாழக் கூடிய சூழலில் இவ்வாறான மணவிலக்குகள் அதிகமில்லாதிருந்தாலும் கூட, மேலே நாம் சொன்ன திருமணத்தின் காரணமாக விளையக் கூடிய நன்மைகள் தானாக விளைந்து விடுவதில்லை. மாறாக, அன்பு, பண்பாடுகள், பழக்க வழக்கங்கள், முயற்சிகள், இன்னும் ஒருவர் மீது ஒருவர் அக்கறை கொள்ளுதல், இவை அனைத்தையும் விட அற்பணிப்பு மனப்பான்மையுடன் ஒருவர் மற்றவரிடம் நடந்து கொள்ளுதல் போன்றவற்றின் மூலமாகத் தான் அத்தகைய நன்மைகளைப் பெற்றுக் கொள்ள முடியுமே தவிர, தானாக எந்த நன்மையும் விளைந்து விடுவதில்லை. அனைத்திற்கும் நமது முயற்சி இன்றியமையாததொன்றாக இருக்கின்றது.
இறைவன் தன்னுடைய திருமறையிலே கூறுவது போல, "உங்களுக்காக அவன் படைத்திருப்பதும்; உங்களுக்கிடையே உவப்பையும், கிருபையையும் உண்டாக்கியிருப்பதும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதாகும்;" (அல்குர்ஆன் 30:21)
கணவன் மனைவிக்கிடையே காதலும், கனிந்துருகச் செய்யும் விளையாட்டும் விடைபெற்று விடுமென்று சொன்னால், அதனை மீட்டிக் கொண்டு வருவதற்கு அங்கு கருணையும், சகிப்புத் தன்மையும், ஒருவர் மற்றவருக்கிடையே தொடர்புகள் நீடித்திருக்கச் செய்வதும் அவசியமானதாகும், இவை மூலம் விடைபெற்றுச் சென்ற காதலும், கனிந்துருகச் செய்யும் விளையாட்டுக்களும் அங்கு தலைத்தோங்க ஏதுவாகும். ஊடலுக்குப் பின் கூடல் என்பதுதான் உறவை இருகச் செய்யும் சாதனமாகும்.
தம்பதிகள் இருவரும் சந்தோஷமாக வாழ்வது என்பது அவர்களுக்கு மட்டும் நன்மை பயப்பதல்ல, மாறாக, அது உங்களது குழந்தைக்கும் சந்தோஷத்தைக் கொடுக்கும் அம்சமாக இருக்கின்றது. நீங்கள் உங்களுக்கிடையே ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து, அன்பு பாராட்டி, சகிப்புத் தன்மையுடன் நடந்து கொள்ளும் பொழுது, அந்தச் சூழலில் வாழக் கூடிய உங்களது குழந்தைகளும் இத்தகைய நற்பழக்கங்களைக் கற்றுக் கொண்டு, தங்களது வாலிப நாட்களில் அதனைக் கடைபிடிப்பதற்கான முன்மாதிரிகளைப் பெற்றுக் கொள்வார்கள் என்பதுஆய்வுகள் கூறும் முடிவுகளாகும். இன்னும் அமைதியான சூழ்நிலைகள் நிலவக் கூடிய இல்லறத்தில், வாழ்வின் வசந்தங்கள் என்றென்றும் பூத்துக் குலுங்கிக் கொண்டே இருக்கும். இது ஒன்றும் கடிமான விஷமுமல்ல, இதற்கென நீங்கள் கடுமையாக உழைக்க வேண்டிய அவசியமுமில்லை, உங்களது பழக்கவழக்கங்களில் சற்று மாறுதல்களைக் காண்பித்தாலே போதும், இல்லறத்தில் நல்லறங்கள் பூக்க ஆரம்பித்து விடும். அவற்றில் சிலவற்றை இங்கு நாம் காண்போம் :
ஒருவர் மற்றவர் உரிமைகளை மதித்து நடப்பது
உங்களது திருமணம் வெற்றிகரமான திருமணமாக பரிணமிக்க வேண்டுமென்றால், திருமணமான ஆண்-பெண் இருவரும், ஒருவர் மற்றவர் மீது என்னனென்ன உரிமைகள் இருக்கின்றன என்பதைப் பற்றித் தெளிவாக அறிந்து கொள்வதுடன், அவற்றை மதித்து நிறைவேற்ற கூடுதல் முயற்சி எடுத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு கணவனின் மீது உள்ள உரிமைகள் என்னவென்றால், தன்னை நம்பி உள்ள குடும்பத்தினருக்கு தாய், தந்தை, மனைவி, பிள்ளைகள் போன்றவர்களுக்கான வாழ்வியல் தேவைகளை அதாவது, உடை, உணவு, உறையுள், கல்வி இன்னும் பல அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றிக் கொடுப்பது, அதற்கான பொருளாதாரத்தைத் திரட்டிக் கொடுப்பது.
இன்னும் குடும்பத் தலைவன் என்ற முறையில் குடும்பப் பராமரிப்பு அத்துடன் மார்க்க வழிகாட்டுதல்கள் மற்றும் குடும்பத்தினரிடையே ஒழுக்க மாண்புகளில் கவனம் செலுத்துதல் ஆகியவை கணவன் மீதுள்ள இன்றியமையாத கடமைகளாகும். இவை யாவும் அவன் மீதுள்ள தவிர்க்க முடியாத கடமைகளாகும்.
மனைவியைப் பொறுத்தவரையில், இறைவன் அனுமதித்துள்ள வரம்புகளைப் பேணுவதும், அதற்காக கணவனுக்குக் கட்டுப்பட்டு நடப்பதும், குடும்பப் பராமரிப்பு, குழந்தை வளர்ப்பு போன்றவற்றில் தனிக் கவனம் செலுத்துவதும் அவளது இன்றியமையாத கடமைகளில் ஒன்றாக இருக்கின்றது. இன்னும் பல பொறுப்புக்களை நிறைவேற்றக் கூடியவளாக அவள் இருந்தாலும், மேலே சொன்னவைகள் தான் அவளுக்குரிய அடிப்படைக் கடமைகள் என்பதை அவள் மறந்து விடக் கூடாது. இவற்றை அவள் நிறைவேற்றத் தவறுவாளாகில், அந்தக் கணத்திலிருந்து குடும்பத்தில் குழப்பங்கள் தலைதூக்க ஆரம்பித்து விடும், குடும்பச் சூழ்நிலை பாழ்பட ஆரம்பித்து விடும். குடும்பத்தில் அமைதி நீங்கி, புயல் வீச ஆரம்பித்து விடும். இத்தகைய சூழ்நிலைகளினால் அங்கு அன்பு அழிந்து, கருணையை இழந்து, ஒருவர் மற்றவரைப் பிணைக்கக் கூடிய நற்பண்புகளையும் இல்லாமலாக்கி விடும்.
எனவே தான், கணவன் மனைவி இருவரும் தங்களுக்குரிய கடமைகள் என்னவென்பதை ஆராய்ந்து, அதனை நிறைவேற்றுவதில் கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டும். ஒருவர் மற்றவர் மீது காட்டக் கூடிய அலாதியான அந்த அன்பு, அவர்களது இதயத்தைப் பிணைப்பதோடு, இறைவன் நாடினால் மேலும் மேலும் வசந்தம் வீசக் கூடிய தளமாக இல்லறம் மாறவும் வாய்ப்பு ஏற்படும்.
தனிமைச் சந்திப்புக்கு நேரம் ஒதுக்குதல்
இன்றைய உலகம் என்பது அவசர உலகம். அதனால் வாழ்க்கையை வாழ்வதற்குக் கூட நேரமில்லாமல் வாழக் கூடிய நிலைமையில் தான் இன்று நாம் இருந்து கொண்டிருக்கின்றோம். வாழ்வியல் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளவே இருக்கின்ற 24 மணி நேரம் போதவில்லை என்று அங்கலாய்ப்பவர்களைத் தான் நாம் பார்த்திருக்கின்றோம். ஆனால் அந்த 24 மணி அலுவல்களுக்கிடையிலும் உங்கள் மனைவிக்காகவும் சில மணித்துளிகளை ஒதுக்குங்கள். அதில் அவளுடன் தனிமையைப் பகிர்ந்து கொள்ளுங்கள். மிகவும் அவசியமில்லாத முக்கியத்துவமில்லாத எத்தனையோ விஷயங்களுக்காக நாம் நம் நேரத்தையும், பணத்தையும் செலவழிக்கத் தயாராக இருக்கின்றோம். ஆனால் திருமணம் எனும் பந்தத்தில் நம்முடன் இணைந்த அவளுடன், வாழ்நாள் முழுவதும் நம்மையே நம்பி வாழ்ந்து வரக் கூடிய அவளுக்கென சில மணித்துளிகளை செவழிப்பதற்குத் தயங்குகின்றோம்.
சில குடும்பங்களில் கணவனும் மனைவியும் தனிமையில் சந்திப்பதே ஒரு சில நிமிடத்துளிகள் தான். எனக்கு நேரமில்லை, நேரமில்லை, காலையில் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புவது, அடுத்து வேலைக்குச் செல்வது, மாலையில் வீட்டுக்கு வருவது, உடன் அடுத்தடுத்த பணிகளுக்கு நேரத்தை ஒதுக்குவது இப்படியாக காலத்தை நகர்த்தக் கூடிய நாம், மனைவிகளுக்காகவும், பிள்ளைகளுக்காகவும் எந்தளவு நேரத்தை ஒதுக்கினோம் என்பதைப் பற்றிச் சிந்திப்பது நல்லது.
இன்றைக்கு பணம் வாழ்க்கையின் அடிப்படைத் தேவையாக மாறி விட்டது. பணம் தான் எல்லாம் என்ற மனநிலை மக்கள் மனதில் நோயாக மாறிக் கொண்டிருக்கின்றது. மனிதர்களது உணர்வுகளை பணத்தைக் கொண்டு திருப்திபடுத்தி விட முடியாது என்பதைப் புரியாதவர்களாக மனிதர்கள் மாறி விட்டிருக்கின்றார்கள். இதிலிருந்து தவிர்ந்து வாழ்வதற்கு உங்களது நேரங்களைத் திட்டமிட்ட அமைத்துக் கொள்ளுங்கள். நேர முகாமைத்துவம் ஒவ்வொரு மனிதர்களுக்கும் அவசியம். அவசர கால ஓட்டத்தில் உங்கள் மனைவிக்கும், பிள்ளைகளுக்கும் சில நேரத்துளிகளை ஒதுக்கித் தரும் பொழுது, பணம் தராத சுகத்தை உங்களது அருகாமை அவர்களுக்கு வழங்கும்.
அதிகாலை பஜ்ர் தொழுகைக்குப் பின் குடும்பத்தினர் அனைவருடனும் சிறிது நேரம் உட்கார்ந்திருப்பது, அல்லது இரவு சாப்பாட்டிற்குப் பின் சிறிது நேரம் குடும்பத்தினருடன் உட்கார்ந்திருப்பது ஆகியவற்றை பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள்.
நீங்கள் எந்தளவு பரபரப்பானவராக இருந்தாலும் சரி, குடும்பத்தினருக்காகவென ஒரு நேரத்தை ஒதுக்கி வைத்துக் கொள்வதன் மூலம் அவர்களது உணர்வுகளை நீங்கள் புரிந்து கொள்ள முடியும். அதன் மூலம் உங்களைப் பற்றி அவர்களும், அவர்களைப் பற்றி நீங்களும் அக்கறை கொண்டவர்களாக இருக்கின்றீர்கள் என்பதையும் உணர்த்த முடியும். உணர்வுகள் தான் மனிதனை உச்சத்திற்கும் கொண்டு செல்லும், அதே உணர்வுகள் தான் மனிதனை தாழ்நிலைக்கும் கொண்டு செல்லும்.
கவனிப்பு அல்லது அக்கறை
உங்களது திருமண பந்தம் நிலைத்திருக்க வேண்டுமா?! அப்படியானால், ஒருவர் மற்றவர் மீது அக்கறை கொண்டவர் என்பதை, ஒருவர் மற்றவருக்கு உணர்த்தத் தவறக் கூடாது.
உங்களது மனைவி சற்று தாகமெடுக்கின்றது என்று சொன்னால், உடனே சென்று ஒரு குவளைத் தண்ணீரைக் கொண்டு வந்து அவளுக்கு வழங்குங்கள். இல்லை, உங்களது கணவன் களைப்பாக இருக்கின்றது என்று சொன்னால், அவனது களைப்பு எதனால் ஏற்பட்டது என்று அறிந்து கொண்டு அதற்கான ஆறுதலைக் கூறுங்கள். எனவே, ஒருவர் மற்றவருக்கு இளைப்பாறும்தளமாக மாறிக் கொள்ளலாம். இன்னும் ஒருவர் மற்றவரது சுமைகளைத் தாங்கிக் கொள்ள முன்வர வேண்டும். குடும்ப அலுவல்களில் மனைவிக்கு உதவுவது கணவனின் உதவி என்றால், கணவனின் அலுவல்களுக்கு இடையூறாக இல்லாமல், அவனது சிரமங்களைப் புரிந்து கொண்டு, அந்த சிரமங்களைச் சமாளிப்பதற்குண்டான ஊக்கத்தை வழங்குவது மனைவி புரியக் கூடிய உதவியாக இருக்கும்.
ஒருவர் மற்றவரது அலுவல்களின் சுமைகளை இறக்கி வைப்பதன் மூலம், வேலைப் பளு குறைவதோடு, இணக்கமான சூழ்நிலையும் நிலவ ஆரம்பித்து விடும். இதுவே உங்களது பிணைப்பை உறவை வலுப்படுத்தும்.
அமைதியாகப் பேசுவது, கவனமாகச் செவிமடுப்பது
தம்பதிகளுக்கிடையே பிரச்னை உருவாகுவது என்பது இருவருக்குமிடையே புரிந்துணர்வு இல்லாததே காரணமாகும். அதாவது உங்கள் இருவருக்கிடையே பேச்சுவார்த்தையே கிடையாது என்பதல்ல, மாறாக, அர்த்தமுள்ள பேச்சுக்கள் குறைவாக இருப்பது தான் பிரச்னைக்கே காரணமாகும்.
நீங்கள் உங்களுக்கிடையே உரையாடும் பொழுது, நீங்கள் இருவரும் தம்பதிகளாக இருக்கின்றீர்கள், அவள் மனைவி, இவன் கணவன் என்ற உணர்வு மேலோங்க வேண்டும். நீங்கள் ஒருவர் மற்றவரிடம் பேசும் பொழுது சப்தமிட்டு, உரத்த குரலில் பேசுகின்றீர்களா? அல்லது மிக மெதுவாகப் பேசுகின்றீர்களா? ஒருவர் பேசும் பொழுது மற்றவர், அவர் என்ன சொல்ல வருகின்றார் என்பதை நிதானித்து கவனிக்கின்றீர்களா? அல்லது அவர் என்ன சொல்வது நான் என்ன கேட்பது? என்ற அலட்சியப் போக்கில் இருக்கின்றீர்களா?
ஒருவர் மற்றவரிடம் பேச்சுக் கொடுக்க வரும் பொழுது, அவள் என் மனைவி, இவன் எனது கணவன், அவன் அல்லது அவள் என்னிடம் அர்த்தமுள்ள பேச்சைத் தான் பேச வருகின்றான் அல்லது வருகின்றாள் என்ற உணர்வுடன், ஒருவர் மற்றவரது பேச்சை அக்கறையுடன் செவிமடுக்க வேண்டும்.
அவள் அல்லது அவன் என்ன சொல்ல வருகின்றார் என்பதை நிதானத்துடன் கவனித்து, அதனை முழுவதுமாக கிரகித்து, அதற்கான பதிலை அல்லது ஆலோசனைகளை வழங்க வேண்டும். அந்த ஆலோசனைகள் கூட அறிவுறுத்தலாக இருக்க வேண்டுமே ஒழிய, கட்டளைத் தொணியில் இருக்கக் கூடாது. இதன் மூலம் வற்புறுத்தல் இல்லாத நிலை உருவாகுவதோடு, இருவருக்குமிடையே நல்லதொரு புரிந்துணர்வு ஏற்படும். புரிந்துணர்வே பல பிரச்னைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து விடும்.
இறைவனிடம் உதவி கேளுங்கள்
திருமணத்தின் மூலம் உங்கள் இருவரையும் கணவன் மனைவி என்ற அந்தஸ்திற்கு உயர்த்தியன், அல்லாஹ் தான், அவனே உங்கள் இருவருக்குமிடையே அன்பையும், பாசப் பிணைப்பையும் உருவாக்கி வைத்தான்.
இப்னு மஸ்ஊது (ரலி) அவர்கள் கூறினார்கள் : நிச்சயமாக அன்பு என்பது இறைவன் புறத்திலிருந்து உருவானது, வெறுப்பு என்பது ஷைத்தானிடமிருந்து வந்தது, அவன் தான் உங்களுக்கு அல்லாஹ் எதனை ஆகுமாக்கி வைத்திருக்கின்றானோ அதன் மீது வெறுப்பைத் திணிக்கின்றான்...எனவே, உங்கள் மனைவி மீதுள்ள அன்பு குறைகின்றதென்றால், நீங்கள் அல்லாஹ்வின் புறம் திரும்புங்கள், அவனேஅனைத்து நல்லறங்களையும் வழங்கக் கூடியவன், அவனிடமே உதவி கேளுங்கள், உங்கள் மனைவி மீது அன்பாக இருப்பதற்காகவும்..! இன்னும் அவளிடம் காணக் கூடிய கெட்ட நடத்தைகளின் பொழுது பாராமுகமாக இருப்பதற்காகவும்..! உங்கள் இதயங்களை இணைப்பதற்காகவும், இன்னும் நீங்கள் எதனை விரும்புகின்றீர்களோ அத்தனையையும் கேளுங்கள், அவனே உங்களது தேவைகளை நிறைவேற்றக் கூடியவனாகவும், உங்களது கோரிக்கைகளுக்கு செவிமடுக்கக் கூடியவனாகவும் இருக்கின்றான், அவற்றுக்குப் பதிலளிக்கக் கூடியவனாகவும் இருக்கின்றான்.
திருமணம் என்பது இஸ்லாமிய சமுதாய வாழ்வில் தவிர்க்க முடியாத, இன்றியமையாத சாதனமாகும். ஒவ்வொரு நாள் சுமையிலிருந்தும், கஷ்டங்களிலிருந்தும் நீங்கள் ஓய்வெடுக்கக் கூடிய தளமாக திருமணம் எனும் பந்தம் இருக்க வேண்டும். அது குளிருக்குக் கதகதப்பானதாகவும், வெயிலுக்கு இதமான குளிர்ந்த தென்றலாகவும் திகழ வேண்டும். அதன் மூலம் அன்பும், பாசமும் தளைத்தோங்க வேண்டும். ஒருவரை ஒருவர் சரியான அளவில் புரிந்துணர்வு கொண்டு செயல்பட வேண்டும். அதன் மூலம் பாசப்பிணைப்பில் மேலும் இறுக்கம் ஏற்பட வேண்டும்.
உங்கள் குடும்பங்கள் புயல் வீசுகின்ற தளமாக இருக்குமென்றால், மேலே சொன்ன அறிவுரைகளைச் செயல்படுத்திப் பாருங்கள், உங்களுக்கிடையில் இருக்கின்ற தவறுகளைக் களைந்து, கருணை எனும் இறக்கையைத் தாழ்த்திப் பாருங்கள். வசந்தம் எனும் வானம்பாடி பாடித்திரியும் நந்தவனமாக, பாச மலர்க் கூட்டமாக உங்கள் இல்லம் திகழக் கூடும். இறைவன் நாடினால்..!
எல்லாவற்றுக்கும் மேலாக அவனிடமே கையேந்துங்கள். அவனே, இதயங்களைப் புரட்டக் கூடியவனாக இருக்கின்றான்

த்க்வா  


இஸ்லாமிய அகீதா 



பெண்களின் உரிமைகள்  




இஸ்மாயில் சலபி அவர்களின் உரைகள்  



01. நபி தோழர்களின் கண்ணியமும் நவீன கொள்கைகளும் 






02.தௌஹீத் வாதிகளும் இபாதத்களும் 

  .                                 



             03. நாவின் விபரீதங்கள்  
                                     




       செல்போன் காதலில் சீரழியும் பிள்ளைகள் 



பிள்ளை பெறுவது பெரிதல்ல! அதைப் பேணி வளர்ப்பது தான் பெரிது என்று பெரியவர்கள் சொல்வார்கள். இன்று நாம் நமது பிள்ளைகளைப் படிக்க வைக்க வேண்டும் என்று பள்ளிக்கு அனுப்புகிறோம்.

காலையில் செல்லும் பிள்ளைகள் மாலையில் திரும்புகின்றனர். தினமும் பள்ளிக்குப் போய் படித்து விட்டு வருகின்றனர் என்று நாம் திருப்திப்பட்டுக் கொண்டிருக்கிறோம்.

யாரேனும் ஒரு பள்ளி மாணவி, யாருடனோ ஓடி விட்டாள் என்று தகவல் வரும் போது, நம் பிள்ளை அப்படியெல்லாம் போகாது; நம் பிள்ளை தங்கக் கட்டி என்று ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் பிள்ளைகள் மீது தளராத நம்பிக்கை வைத்திருக்கின்றனர்.

பிள்ளைகள் மீது இப்படி ஒரு நம்பிக்கை வைத்திருப்பதில் தவறில்லை.

இருக்க வேண்டியது தான். ஆனால் தன் பிள்ளைகளின் நடவடிக்கை மீது ஒரு கண் வைக்காமல் இருப்பது, கவனிக்காமல் இருப்பது மிகப் பெரிய ஆபத்தை வரவழைத்து விடுகின்றது.

குறிப்பாக இன்றைய காலத்து சினிமாக் கலாச்சாரம் மாணவ, மாணவியரைப் பல தவறான பாதைக்கு அழைத்துச் செல்கின்றது.

பள்ளி விட்டு வந்ததும் நமது பிள்ளைகள் பாடம் படிப்பதை விட்டு விட்டு, படம் பார்க்கும் சூழ்நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். சீரியல்களின் பிடியில் கட்டுண்டு இருக்கும் நாம் டி.வி.யைப் பார்த்துக் கொண்டிருக்கும் போது நமது பிள்ளைகளும் சேர்ந்தே பார்க்கின்றனர்.

நம்மால் அந்தப் பிள்ளைகளைத் தடுக்க முடிவதில்லை.
நம் வீட்டிலோ, வெளியிலோ ஆண், பெண் இருவர் கட்டிப் புரளும் காட்சிகளைப் பார்க்க முடியாது. குளிக்கும் பெண்கள் கூட ஆபாசமாகக் குளிப்பது கிடையாது.

ஆனால் இந்த சினிமாக் காட்சிகளில் படுக்கையறைக் காட்சிகள், ஆபாசக் குளியல் காட்சிகள் அப்பட்டமாக அப்படியே காட்டப்படுகின்றன. இந்தக் காட்சிகளைத் தான் டி.வி.களில் பெற்றோர், பிள்ளைகள் என அனைவரும் உட்கார்ந்து பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

மாணவ, மாணவியர் எப்படிக் காதலிக்க வேண்டும் என்ற கேடு கெட்ட கலாச்சாரத்தையும் டி.வி.க்கள் கற்றுக் கொடுக்கின்றன. இதையும் பெற்றோர் சேர்ந்து கொண்டு தான் பார்க்கின்றனர். விளைவு, பிள்ளைகள் பரீட்சையில் பெயிலாகின்றனர். உடனே பெற்றோர்கள் பிள்ளைகளைத் திட்டுகின்றனர். அவர்கள் தேர்வில் தோற்றதற்குத் தாங்களும் ஒரு காரணம் என்பதைப் பெற்றோர்கள் வசதியாக மறந்து விடுகின்றனர்.
செல்லப் பிள்ளைக்கு ஒரு செல்போன்

பெற்றோர் செய்கின்ற மற்றொரு பெரிய தவறு, தங்கள் பிள்ளைகளுக்கு செல்போன்கள் வாங்கிக் கொடுப்பதாகும்.

இது பிள்ளைகளின் படிப்பைப் பாழாக்குவதன் காரணத்தால் தான் பல்கலைக் கழகங்கள், கல்லூரிகள் போன்ற இடங்களில் பாட நேரத்தில் செல்போன் பயன்படுத்துவதற்குத் தடை செய்துள்ளனர். செல்போன்களால் படிப்பு பாழாகின்றது என்பதற்கு இது சிறந்த சான்றாகும்.

செல்போன்கள் இவ்வாறு படிப்பை மட்டும் பாழாக்கவில்லை. அவர்களுடைய ஒழுக்க வாழ்வையும் பாழாக்கிக் கொண்டிருக்கிறது. பல்வேறு முனைகளில் செல்போன்கள் நமது பிள்ளைகளை ஒழுக்கக் கேட்டிற்கும், சீரழிவிற்கும் இழுத்துச் செல்கின்றன.

செல்போன்களில் நடமாடும் பாலியல் வக்கிர, ஆபாச செயல்களின் பட்டியலில் சிலவற்றை உங்கள் பார்வைக்குத் தந்திருக்கிறோம்.

1. நீலப்படங்களைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறோம். அவை நம்முடைய பிள்ளைகளின் செல்போன்களில் பதிவிறக்கம் செய்யப்பட்டு, பரிமாறவும் படுகின்றன.

2. அழகான மாணவிகள் அவ்வப்போது நேர்முகமாகவோ, மறைமுகமாகவோ படம் எடுக்கப்பட்டு, பாதுகாக்கப்பட்டு பல மாணவர்களின் பார்வைக்கு விருந்தாகப் படைக்கப்படுகின்றன.

3. SMS (Short Message Service) என்பது இப்போது Sex Message Service ஆக மாறி விட்டது. அந்த அளவுக்கு ஆபாசச் செய்திகள் இதில் பரிமாறப்படுகின்றன.

4. தங்கு தடையற்ற காதல் பேச்சுக்கள்: எந்த ஓர் ஆணும், பெண்ணும் நேரில் சந்திக்கும் போது, அவர்களது வெட்க உணர்வுகள் அவர்களிடமிருந்து வார்த்தைகள் வெளிவருவதைத் தடுத்து விடும். அத்துடன் சமுதாயத்தின் கழுகுப் பார்வைகள், சமூகக் கட்டுப்பாடுகள் பெரிய திரைகளாக நின்று, பெரும் தீமைகள் நடைபெறாமல் காக்கின்றன. ஆனால் இந்த வெட்கத் தடைகளையும், சமூகத் தடைகளையும் செல்போன்கள் தகர்த்தெறிந்து, தங்கு தடையற்ற செக்ஸ் பேச்சுக்களைப் பரிமாற்றம் செய்வதற்குத் துணை புரிகின்றன.

அண்மையில் நம்முடைய ரகசிய கண்காணிப்புக் குழுக்கள் மூலம், மகளிர் பள்ளிக்கூடங்கள் மற்றும் கோச்சிங் சென்டர்களைக் கண்காணித்ததில் பல அதிர்ச்சி தரும் செய்திகள் கிடைத்துள்ளன.

பருவமடைந்த பெண் பிள்ளைகள் சர்வ சாதாரணமாக வாலிபர்களுடன் செக்ஸ் பேச்சுக்களைப் பரிமாறுகின்றனர்.

பல சந்து பொந்துகளில் சந்திப்புகளும் நடைபெறுவதை அறிய முடிந்தது.

பக்காவாக உடல் முழுவதும் முக்காடு போட்ட பருவ வயதுப் பெண்கள் இதில் முன்னணியில் உள்ளனர்.
ஏற்கனவே வீட்டில் இருக்கும் கன்னிப் பெண்களும், திருமணமான பெண்களும் செல்போன் செக்ஸில் பலியாகி அந்நிய ஆடவருடன் ஓடிப் போகும் கொடுமை ஆங்காங்கே நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

இதையே நம்மால் தாங்கிக் கொள்ள முடியாமல் இருக்கும் போது, பள்ளிக்கூடம் செல்லும் பருவ வயதுப் பிள்ளைகள் பற்றிய இந்த அதிர்ச்சித் தகவல் நம்முடைய இரத்தத்தை உறைய வைக்கின்றது.

இந்த அதிர்ச்சித் தகவலைத் தெரிந்து கொள்ளும் பெற்றோர்கள் உடனடியாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகளைக் கீழே தருகிறோம்.

தங்கள் பிள்ளைகளுக்கு செல்போன் கொடுக்காமல் இருத்தல்.

ஆண், பெண் பிள்ளைகளுக்கு செல்போன்கள் வழங்கினால் நாமே அவர்களை விபச்சாரத்திற்கு ஊக்குவித்தவர்களாவோம். வாலிப வயது ஆண், பெண் இருபாலரும் செல்போன்களை செக்ஸ் போன்களாகத் தான் பயன்படுத்துகின்றனர்.

“விபச்சாரத்தில் ஆதமுடைய மகனுக்குள்ள பங்கை இறைவன் எழுதியுள்ளான். அதை அவன் அடைந்தே தீருவான். கண் செய்யும் விபச்சாரம் பார்வையாகும். நாவு செய்யும் விபச்சாரம் பேச்சாகும். மனம் ஏங்குகின்றது. இச்சை கொள்கின்றது. பிறப்பு உறுப்பு இவை அனைத்தையும் உண்மையாக்குகிறது. அல்லது பொய்யாக்குகிறது” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ர) நூல்: புகாரி 6243

இந்த ஹதீஸில் வருகின்ற கடைசிக் கட்ட விஷயத்தைத் தவிர அனைத்து விஷயங்களும் செல்போன்கள் வழியாக நடக்கின்றன.

கடைசிக் கட்டத்தை அடைய வேண்டும் என்று அவர்கள் உறுதி கொள்ளும் போது, ஓடிப் போக ஆரம்பிக்கிறார்கள். அப்போது நாம் கைசேதப்பட்டுப் பயனில்லை.

செல்போன் இல்லாவிட்டாலும் பள்ளி செல்கின்ற ஆண், பெண் பிள்ளைகளின் அனைத்து நடவடிக்கைகளின் மீதும் முழுக் கவனம் செலுத்த வேண்டும்.

அவ்வாறு செலுத்தாவிட்டால் கீழ்க்கண்ட ஹதீஸின்படி அல்லாஹ்விடத்தில் நாம் பதில் சொல்லாமல் தப்ப முடியாது என்று தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளர்கள். தமது பொறுப்பின் கீழ் உள்ளவர்கள் பற்றி ஒவ்வொருவரும் விசாரிக்கப் படுவீர்கள். தலைபர் பொறுப்பாளி யாவார். அவர் தம் குடிமக்கள் பற்றி விசாரிக்கப்படுவார். ஒரு ஆண் மகன் தன் குடும்பத்துக்குப் பொறுப்பாளி யாவான்.

தன் பொறுப்பில் உள்ளவர்கள் பற்றி அவனும் கேட்கப்படுவான். ஒரு பெண், கணவனின் வீட்டுக்குப் பொறுப்பாளி யாவாள். அவள் தனது பொறுப்பில் உள்ளவர்கள் பற்றி விசாரிக்கப் படுவாள். ஒரு ஊழியன் தன் முதலாளியின் செல்வத்திற்குப் பொறுப்பாளியாவான். அவன் தனது பொறுப்பு பற்றி விசாரிக்கப்படுவான்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
நூல்: புகாரி 893

         நற்செயல்களால் நம்மை அலங்கரிப்போம்!

Post image for நற்செயல்களால் நம்மை அலங்கரிப்போம்!

நீங்கள் உடலால் பேரழகனா, இல்லை பேரழகியா என்று அல்லாஹ் பார்க்க மாட்டான். மாறாக  நீங்கள் உள்ளத்தால் அழகானவரா என்பதை மட்டுமே அல்லாஹ் பார்ப்பான். எனவே, நீங்கள் உங்கள் உள்ளங்களை அழகு படுத்திக்கொள்ளுங்கள்.
சமூகத்தில் நீங்கள் எந்த தரம் என்பதை அல்லாஹ் பார்க்கமாட்டான்.  நீங்கள் சமூகத்தில் எந்த தரத்தில் நடந்து கொண்டீர்கள் என்பதையே அல்லாஹ் பார்ப்பான். எனவே நற்பண்புகளால் உங்கள் தரத்தை உயர்த்திக்கொள்ளுங்கள்.
உங்களுக்கு எத்தனை வீடுகள், பங்களாக்கள் இருந்தன என்று அல்லாஹ் பார்க்க மாட்டான். அவைகளில் எத்தனை அனாதைகளுக்கு அடைக்கலம் தந்தீர்கள் என்றே பார்ப்பான்.  எனவே, உங்கள் இல்லங்களில் ஆதரவற்ற அனாதைகளுக்கு அடைக்கலம் கொடுங்கள்.
நீங்கள் என்னென்ன உணவு உண்டீர்கள் என்பதை அல்லாஹ் பட்டியல் கேட்க மாட்டான்.  பசியோடு வந்த எத்தனை ஏழைகளின் பசியை போக்கினீர்கள் என்றுதான் அல்லாஹ் கேட்பான். எனவே, பசித்தோருக்கு உணவளியுங்கள்.
உங்களது அலமாரி மற்றும் பீரோக்களில் நீங்கள் எத்தனை டிசைன்களில் எத்தனை ஆடைகள் அடுக்கி வைத்திருக்கிறீர்கள் என்பதை அல்லாஹ் கேட்கமாட்டான்.  ஆடையற்ற ஏழைகளுக்கும் அனாதைகளுக்கும் அவற்றிலிருந்து தந்து உதவினீர்களா என்று மட்டுமே கேட்பான். எனவே, ஆடையற்ற ஏழைகளுக்கும் அனாதைகளுக்கும் ஆடைகளை தந்து உதவிடுங்கள்.
நீங்கள் சினிமா தொலைக்காட்சித் தொடர்களை கண்டு எத்தனை முறை அழுதீர்கள் என்று அல்லாஹ் கேட்க மாட்டான். நீங்கள் எத்தனை முறை சமூகத்திற்காகவும் அல்லாஹ்விற்கு அஞ்சியும் அழுதீர்கள் என்றே கேட்பான்.  எனவே உங்கள் அழுகைகளை அர்த்தமுள்ளதாக ஆக்கிக்கொள்ளுங்கள்.
நீங்கள் எத்தனை முறை சிரித்து மகிழ்ந்தீர்கள் என்பதை அல்லாஹ் கேட்கமாட்டான். நீங்கள் பிறருக்கு உதவியதின் மூலம் எத்தனை முறை அவர்கள் சிரித்து மகிழ்ந்தார்கள் என்றே அல்லாஹ் உங்களிடம் கேட்பான். எனவே, பிறருக்கு உதவிகள் புரிந்து அவர்களை சிரிக்கவும், மகிழவும் வையுங்கள்.
சமூகத்தில் உங்களது மதிப்பெண் என்ன என்பதை அல்லாஹ் ஒருபோதும் பார்க்கமாட்டான். வீட்டில் உங்கள் மனைவியிடம், அண்டை வீட்டாரிடம் உங்கள் மதிப்பெண் என்ன என்பதையே அல்லாஹ் பார்ப்பான். எனவே மனைவியிடமும், அண்டை வீட்டாரிடமும் அழகிய முறையில் நடந்து கொள்ளுங்கள்.
நீங்கள் எத்தனை பிள்ளைகளை பெற்றீர்கள் என்பதைவிட  உங்கள் பிள்ளைகளுக்கு  சிறந்த கல்வியையும் ஒழுக்கத்தையும் கற்றுத்தந்தீர்களா என்பதையே அல்லாஹ் பார்ப்பான். எனவே உங்களது பிள்ளைகளுக்கு நல்ல கல்வியையும், நல்ல ஒழுக்கத்தையும் கற்றுக்கொடுங்கள்.
நீங்கள் குர்ஆனை எத்தனை முறை ஓதினீர்கள் என்பதைவிட அதிலிருந்து எத்தனை விஷயங்களை உங்கள் வாழ்வில் கடை பிடித்தீர்கள் என்பதையே அல்லாஹ் கேட்பான். எனவே, குர்ஆனை பொருளறிந்து ஓதுவதோடு அதை கடைபிடிக்கவும் செய்யுங்கள்.
நற்செயல் என்பது உங்கள் முகங்களைக் கிழக்கிலோ, மேற்கிலோ திருப்பிக்கொள்வதில் இல்லை; ஆனால் நற்செயல் என்பது அல்லாஹ்வின் மீதும், இறுதி(த் தீர்ப்பு) நாளின் மீதும், மலக்குகளின் மீதும், வேதத்தின் மீதும், நபிமார்கள் மீதும் ஈமான் கொள்ளுதல்; (தன்) பொருளை இறைவன் மேலுள்ள நேசத்தின் காரணமாக, பந்துக்களுக்கும், அநாதைகளுக்கும், மிஸ்கீன்(ஏழை)களுக்கும், வழிப் போக்கர்களுக்கும், யாசிப்பவர்களுக்கும், (அடிமைகள், கடனாளிகள்) போன்றோரின் மீட்புக்காகவும் செலவு செய்தல்; இன்னும் தொழுகையை ஒழுங்காகக் கடைப்பிடித்து முறையாக ஜகாத் கொடுத்து வருதல்(இவையே நற்செயல்களாகும்). அல்குர்ஆன் 2:177


ஷஃபான் மாதத்தில் செய்ய வேண்டியவைகளும், செய்யக் கூடாதவைகளும்

 மௌலவி முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி
                               அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால். அவனது சாந்தியும், சமாதானமும் இவ்வுலகிற்கு அருட்கொடையாக வந்த இறுதித்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் மீதும், அவர்களின் வழிமுறையை பின்பற்றிய அன்னாரது குடும்பத்தவர்கள், தோழர்கள் அனைவர் மீதும் உண்டாவதாக.
ஷஃபான் மாதம் என்பது சந்திர மாத கணக்கின்படி எட்டாவது மாதமாகும், இன்னும் ரமழானுக்கு முன்னுள்ள மாதமாகும். இந்த வெளியிட்டீன் மூலம்ஷஃபான் மாத சிறப்புகளையும், இன்னும் ஷஃபான் மாதத்தில் அரங்கேற்றப்படும் ஓர் சில வழிகேடான பித்அத்துகளையும் தெளிவுபடுத்துவது தான் நமது நோக்கம்.
ஷஃபான் மாதத்தில் அதிகம் நோன்பு நோற்பதற்கு ஆதாரமாக உள்ள ஹதீஸ்கள்:

عَنْ عَائِشَةَ رَضِي اللَّهم عَنْهَا قَالَتْ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهم عَلَيْهِ وَسَلَّمَ يَصُومُ حَتَّى نَقُولَ لَا يُفْطِرُ وَيُفْطِرُ حَتَّى نَقُولَ لَا يَصُومُ فَمَا رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهم عَلَيْهِ وَسَلَّمَ اسْتَكْمَلَ صِيَامَ شَهْرٍ إِلَّا رَمَضَانَ وَمَا رَأَيْتُهُ أَكْثَرَ صِيَامًا مِنْهُ فِي شَعْبَانَ (متفق عليه).

நபிகளார் (ஸல்) அவர்கள் நோன்பை விடமாட்டார்கள் என்று நாம் சொல்லுமளவுக்கு நோன்பு வைப்பவர்களாக இருந்தார்கள். நோன்பு வைக்கவில்லை என்று நாம் சொல்லுமளவுக்கு நோன்பு வைக்காதவர்களாகவும் இருந்தார்கள். நபியவர்கள் ரமழானைத் தவிர முழமையாக நோன்பு நோற்ற வேறொரு மாதத்தை நான் பார்க்கவில்லை. நபியவர்கள் அதிகம் நோன்பு வைத்த மாதம் ஷஃபானாகும். என்று ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: முத்தபகுன் அலைஹி).

عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي قَيْسٍ سَمِعَ عَائِشَةَ تَقُولُ كَانَ أَحَبَّ الشُّهُورِ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهم عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يَصُومَهُ شَعْبَانُ ثُمَّ يَصِلُهُ بِرَمَضَانَ (أبوداود, نسائي).

நபியவர்கள் நோன்பு வைப்பதற்கு அதிகம் விரும்பிய மாதம் ஷஃபானும், அதைத் தொடர்ந்துள்ள ரமழானுமாகும். என்று ஆயிஷா (ரலி) அவர்களிடம் செவிமடுத்தாக அப்துல்லாஹ் இப்னு கைஸ் (ரலி) குறிப்பிடுகிறார். (அபூதாவுத், நஸாயி).
ஷஃபானில் அமல்கள் உயர்த்தப்படுகின்றன:

قَالَ حَدَّثَنِي أَبُو سَعِيدٍ الْمَقْبُرِيُّ قَالَ حَدَّثَنِي أُسَامَةُ ابْنُ زَيْدٍ قَالَ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ لَمْ أَرَكَ تَصُومُ شَهْرًا مِنَ الشُّهُورِ مَا تَصُومُ مِنْ شَعْبَانَ قَالَ ذَلِكَ شَهْرٌ يَغْفُلُ النَّاسُ عَنْهُ بَيْنَ رَجَبٍ وَرَمَضَانَ وَهُوَ شَهْرٌ تُرْفَعُ فِيهِ الْأَعْمَالُ إِلَى رَبِّ الْعَالَمِينَ فَأُحِبُّ أَنْ يُرْفَعَ عَمَلِي وَأَنَا صَائِمٌ (نسائي, أحمد).

உஸாமதிப்னு ஸைத் (ரலி) அவர்கள் நபியவர்ளிடம்: அல்லாஹ்வின் தூதரே! ஷஃபானை போன்று வேறொரு மாதத்தில் நீங்கள் நோன்பு நோற்பதை நான் காணவில்லை என்று கூறிய போது, நபியவர்கள்: மனிதர்கள் ரஜப், ரமழான் ஆகிய இரு மாதங்களுக்கு மத்தியிலுள்ள ஒரு மாதம் விஷயத்தில் பாராமுகமாக இருக்கின்றனர். அது எப்படிப்பட்ட மாதம் எனில் அகிலத்தாரின் அதிபதியாகிய அல்லாஹ்வின்பால் வணக்க வழிபாடுகள் உயர்த்தப்படக்கூடிய மாதமாகும். எனது வணக்க வழிபாடுகள் நான் நோன்பாளியாக இருக்கும் நிலையில் உயர்த்தப்பட வேண்டுமென விரும்புகிறேன் என கூறினார்கள். (ஆதாரம்: நஸாயி, அஹ்மத்).

عَنْ أَبِي سَلَمَةَ أَنَّ عَائِشَةَ رَضِي اللَّهم عَنْهَا حَدَّثَتْهُ قَالَتْ لَمْ يَكُنِ النَّبِيُّ صَلَّى اللَّهم عَلَيْهِ وَسَلَّمَ يَصُومُ شَهْرًا أَكْثَرَ مِنْ شَعْبَانَ فَإِنَّهُ كَانَ يَصُومُ شَعْبَانَ كُلَّهُ وَكَانَ يَقُولُ خُذُوا مِنَ الْعَمَلِ مَا تُطِيقُونَ فَإِنَّ اللَّهَ لَا يَمَلُّ حَتَّى تَمَلُّوا وَأَحَبُّ الصَّلَاةِ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهم عَلَيْهِ وَسَلَّمَ مَا دُووِمَ عَلَيْهِ وَإِنْ قَلَّتْ وَكَانَ إِذَا صَلَّى صَلَاةً دَاوَمَ عَلَيْهَا * (متفق عليه).

நபியவர்கள் ஷஃபான் மாதத்தை போன்று வேறொரு மாதத்தில் அதிகம் நோன்பு நோற்கவில்லை. ஷஃபானில் அதிகம் நோன்பு வைப்பவர்களாக இருந்தார்கள். இன்னும் நபியவர்கள்: உங்களுக்கு முடியுமான வணக்க வழிபாடுகளை செய்யுங்கள், நீங்கள் சோர்வடையும் வரை அல்லாஹ் சோர்வடைவதில்லை என்று கூறக்கூடியவர்களாக இருந்தார்கள். குறைவான வணக்க வழிபாடுகளாக இருந்தாலும் அதைத் தொடர்ந்து செய்து வருவதுதான் நபியவர்களுக்கு விருப்பமாக இருந்தது.
நபியவர்கள் தொழுவார்கள் என்றால், தொடர்ந்து அதை நிறைவேற்றுபவர்களாக இருந்தார்கள். (முத்தபகுன் அலைஹி).
மேலே குறிப்பிடப்பட்ட அனைத்து ஹதீஸ்களும் ஷஃபான் மாதத்தில் நபிகளார் (ஸல்) அவர்கள் அதிகம் நோன்பு நோற்றுள்ளார்கள் என்பதற்கு ஆதாரமாகும். எனவே நாமும் நபியவர்களின் இந்த நடைமுறையை செயல்படுத்துவோம். அதன் மூலம் ரமழான் மாத நோன்புக்கும் ஒரு பயிற்ச்சி கிடைக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. நபியவர்கள் குறிப்பிட்டது போல் ஷஃபான் மாத விஷயத்தில் பெரும்பாலான முஸ்லிம்கள் பாராமுகமாகத் தான் இருக்கிறார்கள். அல்லாஹ்விடத்தில் அமல்கள் உயர்த்தப்படுகின்ற இம்மாதத்தில் நாமும் அதிகம் நோன்பு வைப்பதற்கு முனைவோம்.
விடுபட்ட நோன்புகளை நோற்றல்:

عن أبي سلمة قال : سمعت عائشة – رضي الله عنها – تقول : (( كان يكون علي الصوم من رمضان ، فما استطيع أن أقضيه إلا في شعبان (متفق عليه).

‘எனக்கு ரமழான் மாதத்தில் விடுபட்ட நோன்புகளை ஷஃபானில் தவிர நிறைவேற்ற முடிவதில்லை’ என ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள். (முத்தபகுன் அலைஹி).
விடுபட்ட ரமழான் மாத நோன்பை ஷஃபான் வரை பிற்படுத்துவதற்கு இந்த செய்தியிலிருந்து அனுமதி கிடைக்கிறது என்பதை அறியமுடிகிறது. மார்க்கம் கூறிய காரணங்களுக்காக ஒருவர் நோன்பை விடும் போது அல்லது குறிப்பாக பெண்கள் மாத விடாய், பிள்ளைப் பேறு ஆகியவைகளின் மூலம் நோன்பை விடும்போது, அதனை ஏனைய காலங்களில் நோற்க வேண்டும்.
ரமழானுக்கு ஒரிரு நாட்கள் மாத்திரம் இருக்கும் போது நோன்பு நோற்பது தடை:

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِي اللَّهم عَنْهم عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهم عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَا يَتَقَدَّمَنَّ أَحَدُكُمْ رَمَضَانَ بِصَوْمِ يَوْمٍ أَوْ يَوْمَيْنِ إِلَّا أَنْ يَكُونَ رَجُلٌ كَانَ يَصُومُ صَوْمَهُ فَلْيَصُمْ ذَلِكَ الْيَوْمَ (البخاري, ومسلم).

‘ரமழானுக்கு ஓரிரு நாட்கள் மாத்திரம் இருக்கும் போது நீங்கள் நோன்பு நோற்க வேண்டாம். வழமையாக நோன்பு வைக்கும் ஒரு மனிதரைத் தவிர, அவர் மாத்திரம் அந்நாளில் நோன்பு வைத்து கொள்ளட்டும்’ என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), (புஹாரி, முஸ்லிம்).
உதாரணமாக: திங்கள், வியாழன் வழமையாக நோன்பு வைக்கும் ஒருவர், ரமழானுக்கு முந்தியுள்ள ஓரிரு நாட்கள் திங்கள் அல்லது வியாழனாக அமையுமானால் அவருக்கு நோன்பு நோற்பதற்கு அனுமதியுள்ளது என்பதை மேற்கூறிய ஹதீஸிலிருந்து விளங்க முடிகிறது.
ஷஃபானின் 15 வது தினத்தை சிறப்பிப்பது வழிகேடானபித்அத்தாகும்:
‘நிச்சயமாக நாம் அதனை (அல்குர்ஆனை) பாக்கியமுள்ள இரவிலே இறக்கினோம், நிச்சயமாக (அதன் மூலம்) அச்சமூட்டி எச்சரித்துக் கொண்டே இருக்கின்றோம். அதில் முக்கியமான ஒவ்வொரு விஷயங்களும் தீர்மானிக் கப்படுகிறது.’ (அத்துகான் 44: 3,4).
இவ்வசனத்தில் அல்லாஹ் ‘அருள் நிறைந்த இரவில்’ அல்குர்ஆனை இறக்கியதாகவும், அந்த இரவில் மனிதனின் வாழ்வாதரங்களுடன் தொடர்புபட்ட விஷயங்களை தீர்மானிப்பதாகவும் கூறப்படுகிறது. இங்கே குறிப்பிடப்படும் அருள் நிறைந்த இரவு என்பது ஷஃபானின் 15 வது இரவாகும் என்று சிலர் வாதிக்கின்றனர். இது நேரடியாகவே குர்ஆனுடன் மோதக்கூடிய ஒரு வாதம் என்பதை ஏனோ அவர்கள் கவனிக்கத் தவறிவிட்டனர்.
அல்லாஹ் புனிதமிக்க அல்குர்ஆனில் மற்றுமோர் இடத்தில்: ‘ரமழான் மாதம் எத்தகையது எனில் அதில் தான் மனிதர்களுக்கு நேர்வழி காட்டக்கூடிய அல்குர்ஆனை நாம் அருளினோம்’. (2: 185).
மற்றுமோர் இடத்தில்: ‘லைலதுல் கத்ர் இரவில் நாம் இதை (அல்குர்ஆனை) அருளினோம்’ என குறிப்பிடுகிறான். எனவே அத்துகான் அத்தியாயத்தில் இடம் பெற்ற ‘அருள் நிறைந்த இரவு’ என்பது ரமழான் மாதத்தின் லைலதுல் கத்ர் இரவு தான் என்பதை அல்குர்ஆனின் ஏனைய வசனங்களையும் பார்க்கும் போது தெளிவாக விளங்க முடிகிறது. எனவே இவர்களில் கூறுவது போன்று ஷஃபானின் 15 வது இரவுக்கும் இதற்கும் மத்தியல் எந்த தொடர்பும் இல்லை.
ஷஃபானின் 15 வது இரவை ‘பராஅத்’ என்று கூறி அந்த இரவை புனிதப்படுத்துவதும், அதன் பகல் காலத்தில் நோன்பு நோற்பதும், மூன்று யாசீன்கள் ஓதி ரொட்டி போன்ற உணவு வகைகளை தயாரித்து பகிர்ந்தளிப்பதும் இந்த நாளில் செய்யப்படும் தெளிவான பித்அத்துகளாகும். மார்க்கத்தில் இவைகளுக்கு எந்த அடிப்படையுமில்லை.
பித்அத்துகள் அனைத்தும் தெளிவான வழீகேடு என்பது நபியவர்களின் கூற்று என்பதை உணர்ந்து இவ்வாறான பித்அத்துகளை விட்டு விழகி இருப்பதுடன், ஏனையவர்களையும் தடுப்போமாக.
ஷஃபானின் 15 வது இரவுடன் தொடர்பு படுத்தி சில புணைந்துரைக்கப்பட்ட செய்திகளும் இருக்கின்றன அவைகளையும் இங்கு குறிப்பிடுவது பொறுத்தமென நினைக்கிறேன்.

قوله صلى الله عليه وسلم : (( رجب شهر الله وشعبان شهري ورمضان شهر أمتي…….)).

‘ரஜப் அல்லாஹ்வின் மாதம், ஷஃபான் எனது மாதம், ரமழான் எனது சமுதாயத்தின் மாதம்’ என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

قوله صلى الله عليه وسلم:((من صلى ليلة النصف من شعبان ثنتي عشرة ركعة، يقرأ في كل ركعة((قل هو الله أحد)) ثلاثين مرة ، لم يخرج حتى يرى مقعده من الجنة..

‘ஷஃபானின் 15 வது இரவில் எவர் 12 ரக்அத்துகளை தொழுது, அதன் ஒவ்வொரு ரக்அத்திலும் இஹ்லாஸ் அத்தியாயத்தை 30 தடவை ஓதவாரோ, சுவர்க்கத்தில் அவர் தங்கும் இடத்தை பார்க்காமல் அங்கிருந்து வெளியேற மாட்டார்’ என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
இச்செய்திகள் அனைத்தும் நபியின் பெயரால் புணைந்துரைக்கப்பட்ட வைகளாகும். இவைகளை இமாம் இப்னு ஜவ்ஸி (ரஹ்) அவர்கள் தனது ‘மவ்லூஆத்’ என்ற கிரந்தத்தில் குறிப்பிடுகிறார். இவைகளை விட்டு நாம் எச்சரிக்கையாக இருப்பது கட்டாயமாகும்.

to thanks...... www.islamkalvi.com

                                          ஷீயாக்கள் 
அப்துல்லாஹ் பின் ஸபா எனும் யூதனால் தோற்றுவிக்கப்பட்ட ஒரு அமைப்பே ஷீயாயிஷமாகும். ஆரம்பத்தில் அரசியல் ரீதியில் சிந்தித்த இவர்கள், பின்னர் தமது அரசியல் சிந்தனைகளுக்கெல்லாம் மதச்சாயம் பூசச் சென்றதால் இஸ்லாத்தை விட்டும் விலகிச் சென்றுவிட்டனர்.
நபியவர்களது மரணத்தின் பின்னர் அலி(ரழி) அவர்கள்தான் ஆட்சித் தலைமைக்குரியவர்கள் என்று ஆரம்பத்தில் சிந்தித்தனர். அன்று வாழ்ந்த சில நல்லவர்களிடமும் இந்த எண்ணம் இருந்தது. ஆனால் அவர்கள் ஏனையவர்களின் ஆட்சியை எதிர்க்கவில்லை. இந்த ஷீயாக்கள் தமது தவறான சிந்தனைகளையெல்லாம் இங்கிருந்துதான் ஆரம்பித்தனர்.
‘நபியவர்களுக்குப் பின்னர், அலி(ரழி) அவர்கள்தான் ஆட்சிக்கு வரவேண்டும் என அல்லாஹ் குர்ஆனிலும் கூறியிருக்கின்றான். இவர்கள் அந்த ஆயத்துக்களை நீக்கிவிட்டனர். அபூபக்கர்(ரழி), உமர்(ரழி), உஸ்மான்(ரழி) ஆகிய மூவரும் அலி(ரழி) அவர்களுக்குத் துரோகம் செய்துவிட்டனர். அதற்கு ஏனைய ஸஹாபாக்கள் அனைவரும் உடந்தையாக இருந்தனர். எனவே, நபித்தோழர்கள் அனைவரும் காபிராகி விட்டனர்’ என்று அவர்கள் கூறினார்.
இவ்வாறு இஸ்லாத்தில் இல்லாத இஸ்லாத்தை விட்டும் வெளியேற்றக்கூடிய பல கருத்துக்களைக் கொண்டவர்கள்தான் ஷீயாக்களாவர். எல்லா வகையான வழிகேடுகளும் இந்த ஷீயாக்களிடம் குடிகொண்டுள்ளன.
குர்ஆன் மாற்றப்பட்டு விட்டதாக நம்புகின்றனர்:
நபித்தோழர்கள் குர்ஆனை மாற்றிவிட்டனர் என்பது ஷீயாக்களின் நம்பிக்கையாகும். நம்மிடம் ஸஹீஹுல் புஹாரி பெற்றிருக்கும் அந்தஸ்தை அவர்களிடம் ‘அல்காபீ’ எனும் நூல் பெற்றுள்ளது. இந்த நூலில், ‘நபி(ஸல்) அவர்களுக்கு அருளப்பட்ட ஆயத்துக்களின் எண்ணிக்கை பதினேழாயிரமாகும். எனக் கூறுகின்றனர்.
உண்மையான முழுக்குர்ஆனும் தமது இமாம்களிடம் இருப்பதாகவும் நம்புகின்றனர். தம்மிடம் முஸ்ஹபு பாத்திமா உள்ளது. அல்லாஹ்வின் மீது சத்தியமாக உங்களின் குர்ஆனில் இருக்கக்கூடிய ஒரு எழுத்துக்கூட அதில் இல்லை என அவர்களின் முக்கிய இமாம் ஜஃபர் ஸாதிக்(ரழி) கூறியதாகப் பதியப்பட்டுள்ளது.
குர்ஆனில் மாற்றங்கள் நடந்துள்ளன என்பதை விளக்கி ‘பஸ்லுல் கிதாப் பி இஸ்பாதி தஹ்ரீபி ரப்பில் அர்பாப்’ என்ற பெயரில் நூரி அத்தப்ரிஸீ என்பவர் தனி நூலையே எழுதியுள்ளார். ஷீயாக்களின் இஸ்னா அக்ஷரிய்யா பிரிவினரிடம் குர்ஆன் மாற்றப்பட்டு விட்டது என்ற கொள்கை பரவலாக உள்ளது.
ஹதீஸ் தொடர்பில் இவர்களது நம்பிக்கை:
அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத்தினர் ஹதீஸ் என நம்புவதை ஷீஆக்கள் ஹதீஸ் என நம்புவதில்லை. தாம் நம்பக்கூடிய தமது இமாம்கள் தொடர்பாக அறிவிக்கப்படும் செய்திகளையே இவர்கள் ஹதீஸ் என்று கூறுகின்றனர். ஆரம்ப காலத்திலிருந்தே ஷீயாக்கள் போலி ஹதீஸ்களை இட்டுக் கட்டுவதில் விற்பன்னர்களாகத் திகழ்ந்தனர். தமக்குத் தேவையானதை ஹதீஸ் என்ற பெயரில் புனைந்து அதற்கு ஸனத் எனும் அறிவிப்பாளர் தொடர்களையும் உண்டாக்கி வைத்துள்ளனர்.
ஸஹாபாக்கள்:
நபித்தோழர்கள் அல்லாஹ்வின் திருப்பொருத்தம் பெற்றவர்கள். இவர்களில் அதிகமானவர்கள் சுவனவாசிகள் என சுபசோபனம் சொல்லப்பட்டுள்ளனர். பைஅதுர் றிழ்வானில் பங்கு கொண்ட 1400 ஸஹாபாக்களும் நரகம் செல்லமாட்டார்கள் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
ஷீயாக்கள் உஷார்
‘முஹாஜிர்கள் அன்ஸார்களை அல்லாஹ் பொருந்திக் கொண்டான். அவர்களுக்கு சுவனம் தயார் பண்ணப்பட்டுள்ளது’ என குர்ஆன் கூறுகின்றது. ‘பத்ர் ஸஹாபாக்கள் சுவனவாசிகள்’ என்றெல்லாம் ஹதீஸ் கூறுகின்றது.
ஆனால் ஷீயாக்களோ சுமார் 17 பேர்களைத் தவிர ஏனைய ஸஹாபாக்கள் நரகவாசிகள் என்று கூறுகின்றனர். அபூபக்கர், உமர் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும் என தொடர்ந்து சபித்து வருகின்றனர்.
அபூபக்கர்(ரழி) அவர்கள் ஷைத்தானின் கொம்பு என்றும் அவரும் அவரது தோழர் உமரும் முனாபிக்குகள், பொய்யர்கள், அநியாயக்காரர்கள். இவர்கள் இருவரின் இமாமத்தை யாரெல்லாம் ஏற்றுக் கொண்டார்களோ அவர்கள் ஜாஹிலிய்யத்தினதும், வழிகேட்டினதும் மரணத்தையே அடைவர் என்றும் கூறுகின்றனர். (அத்தராயிப் பீ மஃரிபதித் தவாயிப் 401)
உமர்(ரழி) அவர்கள் ஸிஹாக் எனும் விபச்சாரிக்குப் பிறந்தவர் என்றும் இதே நூல் கூறுகின்றது.
உஸ்மான்(ரழி) அவர்கள் சபிக்கப்பட்டவர். அசத்தியத்தில் இருந்தார் என ‘தீகதுஷ் ஷீயா’ என்ற நூல் கூறுகின்றது. ஈரானியப் புரட்சிக்குப் பின்னர் எழுதப்பட்ட ‘தும்ம இஹ்ததைத்து’ என்ற நூலும், ‘அஷ்ஷீஆ ஹும் அஹ்லுஸ்ஸுன்னா’ என்ற நூலும் நம்மிடம் நடைமுறையில் உள்ள ஹதீஸ்களைத் தப்பும், தவறுமாக விளக்கி முன்னைய மூன்று குலபாக்களையும் காபிர்கள் எனக் கூறும் விதத்தில் எழுதப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
தனி மனித வழிபாடு:
தனி மனித வழிபாட்டின் மொத்த வடிவமாக ஷீயாயிஷம் உள்ளது. அலி(ரழி) அவர்கள் மீதான வழிபாட்டின் மீதுதான் இந்த மதமே நிறுவப்பட்டுள்ளது. அலி(ரழி) அவர்களையும் தமது இமாம்களையும் எல்லை மீறிப் புகழ்வதுதான் இவர்களின் மதத்தின் சாரமாக உள்ளது. இவர்களில் சிலர் அலி(ரழி) அவர்களை அல்லாஹ்வின் இடத்திற்கே உயர்த்தினர். இவர்களது ஒரு பாடலில், ‘லாஇலாஹ இல்லஸ் ஸஹாரா’ பாத்திமா தவிர வேறு இறைவன் இல்லை என்றும் இடம்பெற்றுள்ளது.
தமது பன்னிரெண்டு இமாம்களும் மறைவானவற்றை அறிந்தவர்கள் என்றும், பாவங்களை விட்டும் பாதுகாக்கப்பட்ட மஃசூம்கள் என்றும் நம்புகின்றனர். தமது இமாம்களுக்கு முர்ஸலான தூதர்களோ, சங்கையான மலக்குகளோ அடைய முடியாத உயர்ந்த அந்தஸ்து உள்ளதாக நம்புகின்றனர்.
கப்று வழிபாடு:
முஸ்லிம் சமூகத்திற்குள் கப்று வழிபாட்டை நுழைத்ததில் இவர்களுக்கு அதிக பங்கு உள்ளது. ஹஜ்ஜிற்கு வந்தாலும் இவர்கள் கப்றுகளுக்குத்தான் முக்கியத்துவம் கொடுத்துக் கொண்டிருப்பதைக் காணலாம்.
ஹுஸைன்(ரழி) அவர்களது கப்ரை ஸியாரத் செய்பவர் அல்லாஹ்வை அர்ஷில் சந்தித்தவர் போலாவார் என்று இன்றுவரையும் பிரச்சாரம் செய்கின்றனர். கப்றுக்குச் செல்லும்போது தவழ்ந்து தவழ்ந்தும் இழுகியும் செல்லும் காட்சிகளை இன்றும் இணையத்தளங்களில் காணலாம்.
கர்பலா பூமி, மக்கா, மதீனா, பலஸ்தீனத்தைவிட இவர்களிடம் புனிதம் பெற்றதாகும். கர்பலா யுத்தம் நடந்த தினத்தை துக்க தினமாக இன்றும் அனுஷ்டிக்கின்றனர். தமது உடல்களில் காயத்தை ஏற்படுத்திக் கொள்கின்றனர். ‘யா ஹுஸைன்! யா ஹுஸைன்!’ என்று ஒப்பாரி வைக்கின்றனர்.
முத்ஆ திருமணம்:
தான் விரும்பும் பெண்ணை தற்காலிகமாகத் திருமணம் செய்து கொள்ளும் பழக்கம் இவர்களிடம் இருக்கின்றது. இதை ஆதரித்து இவர்கள் பிரச்சாரம் செய்கின்றனர். சின்னப் பிள்ளைகளையும் இதற்காகப் பயன்படுத்த முடியும் என்று நம்புகின்றனர். ஒரு முறை உறவு கொள்வதற்காகக் கூட வாடகைப் பெண்களை அமர்த்திக் கொள்ளலாம் என நம்புகின்றனர்.
‘முத்ஆ என்பது எனதும் எனது முன்னோர்களினதும் தீனாகும். யார் அதைச் செய்தாரோ அவர் எமது மார்க்கத்தின்படி செயற்பட்டவராவார். யார் அதை மறுத்தாரோ அவர் எமது மார்க்கத்தை மறுத்தவராவார், வேறு மார்க்கத்தை நம்பியவராவார்’ என அவர்களது இமாம் ஒருவர் கூறியதாக ‘மன்லா யஹ்லுருஹுல் பகீஹ்’ (3:3661) என்ற ஷீயாக்களின் நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த அடிப்படையில் முத்ஆ என்பது ஷீஆ மதத்தின் முக்கிய அம்சமாகத் திகழ்கின்றது. ஷீஆ மத குருக்கள் பெண்கள் மத்தியில் ஒரு முறையேனும் நீங்கள் முத்ஆவில் ஈடுபடுங்கள் என்று போதிக்கும் காட்சிகளை இன்றும் நாம் இணையத்தளங்களில் காணலாம்.
இந்த விபச்சாரத்தின் மீது பெண்களைத் தூண்டும் விதத்தில் ஏராளமான செய்திகளை இட்டுக்கட்டியுள்ளனர்.
நபி(ஸல்) அவர்கள் இஸ்ரா சென்றபோது, ‘முஹம்மதே உமது உம்மத்தில் உள்ள முத்ஆ திருமணம் செய்யும் பெண்களை நான் மன்னித்து விட்டேன் என அல்லாஹ் கூறுகின்றான்’ என ஜிப்ரீல்(அலை) அவர்கள் கூறினார்கள். (மன்லாயஹ்லுருஹுல் பகீஹ்: 2:493) என்று ஹதீஸ்களை இட்டுக்கட்டியுள்ளனர்.
இன்னமும் ஈரான், பஹ்ரைன் ஷீயாக்களிடம் இந்தப் பழக்கம் இருப்பதையும், பாடசாலைச் சிறுமிகளைக் கூட இதற்கு சாதகமாகத் தூண்டுவதையும் இணையத்தளங்களில் காணலாம். ஷீயாக்களை ஆதரிப்பவர்கள் இதையும் ஆதரிப்பார்களா?
தகிய்யா:
பொய் பேசுதல், உள்ளொன்று வைத்து வெளியில் அதற்கு மாற்றமாக வேஷம் போடுதல் என்பது இதன் அர்த்தமாகும்.
இவர்கள் அபூபக்கர்(ரழி) அவர்களைக் காபிர் என்று கூறுவர். ஆனால் அலி(ரழி) அவர்கள் அபூபக்கர்(ரழி) அவர்களை மதித்து நடந்துள்ளார்கள். உமர்(ரழி) அவர்களைக் காபிர் என்பார்கள். ஆனால் அலி(ரழி) அவர்கள் தமது மகள் உம்மு குல்தூமை உமர்(ரழி) அவர்களுக்கு மணமுடித்துக் கொடுத்தார்கள். இந்த முரண்பாட்டை நீக்குவதற்காக இந்தத் ‘தகிய்யா’ கோட்பாட்டை உருவாக்கினார்கள்.
உள்ளொன்று வைத்து அதற்குப் புறம்பாக நடப்பது மார்க்கக்கடமை. அந்த அடிப்படையில்தான் அலி(ரழி) அவர்கள் நடந்து கொண்டார்கள் என்று கூறுவர். இன்றும் இவர்களது எல்லா வழிகேடுகளையும் இதை வைத்தே பாமர மக்களிடம் மூடி மறைத்து வருகின்றனர்.
தகிய்யா என்ற நயவஞ்சகத்தனம் இல்லாதவனுக்கு தீனே இல்லை என இவர்களது உஸுலுல் காபீ (2:217, 223) கூறுகின்றது.
இவர்களது ஒரு அறிஞர் அல் இஃதிகாதாத் (114 – 115) என்ற நூலில் 12 ஆம் இமாம் வரும் வரை தகிய்யா (எனும் நயவஞ்சகத்தனம்) வாஜிபாகும். அதனை நீக்கிட முடியாது. 12 ஆம் இமாம் வருவதற்கு முன்னர் யார் அதனை விட்டு விடுகின்றாரோ அவன் அல்லாஹ்வின் மார்க்கத்தையும், இமாமிய்யத் மதத்தையும் விட்டவனாவான். அவன் அல்லாஹ்வுக்கும், இமாம்களுக்கும் மாறு செய்தவனாவான் என்று எழுதியுள்ளனர்.
இவர்களது 12 ஆம் இமாம் வந்து நீதியை நிலைநாட்டுவார் என்றும், அபூபக்கர்(ரழி) உமர்(ரழி) அவர்களை எழுப்பி சிலுவையில் அறைவார் என்றும், அவர்களை அறைவதற்கு முன்னர் பச்சை மரமாக இருந்த அந்த (சிலுவை மரம்) இவர்களை அடித்ததும் காய்ந்துவிடும் என்றெல்லாம் நம்புகின்றனர்.
இவ்வாறு இந்த ஷீஆக்களிடம் இல்லாத வழிகேடே இல்லை எனலாம். ஷீயாயிஸம் பரவுகின்ற பகுதிகளில் பரவலாக வன்முறைகள், குண்டுத் தாக்குதல்கள் இடம்பெற்று வருவதையும் காணலாம். இந்த சீரழிந்த சிந்தனைகளை இலங்கையில் பரப்புவதற்குப் பெருத்த முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன.
இன்றைய அரசியல் உலகில் ஈரான் ஒரு ஹீரோவாகப் பார்க்கப்படுவதால் சிலர் ஷீயாயிஸத்தை ஆதரிக்கின்றனர். மற்றும் பலரும் அவர்களது பிரச்சார முயற்சிகளுக்குப் பலியாகி ஷியாயிஸத்தையும் ஒரு மத்ஹபு போன்று, சாதாரண ஒரு இயக்கம் போன்று பார்க்கின்றனர். இது தவறாகும். ஷீயாயிஸம் என்பது இஸ்லாத்துக்கு முற்றிலும் முரணான ஒரு தனியான மதமாகும். அவர்கள் நம்பும் குர்ஆன் வேறு, அவர்கள் நம்பும் ஹதீஸ் வேறு, அவர்களது அகீதா கோட்பாடு வேறு, அவர்கள் முன்வைக்கும் ஈமானிய அம்சங்கள் வேறு. எனவே, இவர்களது பிரச்சாரம் குறித்து விழிப்பாக இருப்பது அவசியமாகும்.
இவர்கள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஊட்டுவது அறிஞர்களின் அடிப்படையான கடமையாகும். அல்லாஹ்வால் புகழப்பட்ட ஸஹாபாக்களைத் தூற்றுபவர்களுடன், நபியவர்களின் மனைவியர்களான ஆயிஷா(ரழி), ஹப்ஸா(ரழி) ஆகியோரைக் கேவலப்படுத்துபவர்களுடன் நட்புறவுக்கோ அல்லது சமரசத்திற்கோ அறவே இடமில்லை என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். ஷீயாக்கள் குறித்து விழிப்புணர்வுடனும், தெளிவுடனும் இருக்குமாறு இலங்கை வாழ் மக்களைக் கேட்டுக் கொள்கின்றோம்.

எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி) – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ்

 

 



தக்வா என்றால் என்ன?

உரை அப்துல் வதுத் ஜிப்ரி அவர்கள்


கேட்க அல்லது பதிலிறக்கம் செய்ய........



அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.............
எனதருமை வாசகர்களுக்கு இது எனது சிறு முயற்சியே.... இதனை பார்வையிடுவதோடு உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள்.

      கற்றுக்கொண்ட எட்டுப் பாடங்கள்

கட்டுரை வரைந்தவர். எஸ்எச்.எம்.இஸ்மாயில் (ஸலபி) ஆசிரியர் உண்மை உதயம் மாத இதழ்.

ஒரு ஆசிரியரிடம் மாணவர் ஒருவர் நீண்டகாலமாகக் கற்று வந்தார். ஒரு நாள் அந்த ஆசிரியர் தனது மாணவரிடம் எவ்வளவு காலமாக நீ என்னுடன் நெருக்கமாக இருக்கிறாய்? என்று கேட்டார். அதற்கு மாணவர் 33 வருடங்கள் என்று கூறினார். தொடந்து அந்த,

ஆசிரியர் : என்னிடமிருந்து நீ இந்தக் காலப் பகுதியில் எதைக் கற்றாய்?
மாணவன் : எட்டு விடயங்களைக் கற்றுக் கொண்டேன்.
(இது கேட்ட ஆசிரியர் அதிர்ந்து போனார். திறமையான மாணவன். ஆனால் இவ்வளவு காலமாக எட்டே எட்டு விடயங்களைத்தான் கற்றுக் கொண்டதாகக் கூறுகின்றானே! என ஆச்சரியப்பட்டார்.)
ஆசிரியர் : என் வாழ்நாள் எல்லாம் உன்னோடு கழிந்துவிட்டது. ஆனால் நீ எட்டே எட்டு விடயங்களைத்தான் கற்றுக் கொண்டதாகக் கூறுகின்றாயே!
மாணவன் : உண்மைதான் ஆசிரியரே! எட்டே எட்டு விடயங்களைத்தான் நான் கற்றுக் கொண்டேன். நான் பொய் சொல்ல விரும்பவில்லை.
ஆசிரியர் : சரி, நீ கற்றுக் கொண்ட பாடங்கள் என்னவென்று கூறு பார்க்கலாம்
மாணவன் :
முதலாவது பாடம்: இந்த உலகில் ஒவ்வொருவரும் மற்றவரை நேசிப்பதைக் கண்டேன். ஆனால் மரணித்து மண்ணறைக்குச் சென்றுவிட்டால் அந்த நேசர்கள் பிரிந்து விடுவதையும் கண்டேன். எனவே, நல்லறங்களையே என் நேசத்துக்குரியவைகளாக நான் எடுத்துக் கொண்டேன். ஏனெனில், நான் கப்றுக்குச் சென்ற பின்னரும் அவை என்னை விட்டும் பிரிந்து விடாமல் என்னுடன் கப்றுக்கும் வரும்.
(ஆசிரியர் உஷாரானார். தனது மாணவன் வித்தியாசமான கோணத்தில்தான் விடை கூறுகின்றான் என்று தொடர்ந்து கேட்க ஆசைப்பட்டார்.)
இரண்டாவது பாடம்: நான் ‘யார் தனது இரட்சகன் முன் நிற்பதை அஞ்சி, மனோ இச்சையை விட்டும் தன்னைத் தடுத்துக் கொண்டாரோ, நிச்சயமாக சுவர்க்கம் (அவரது) ஒதுங்குமிடமாகும். ‘ (79:40-41) என்ற குர்ஆன் வசனத்தைப் பார்த்தேன். எனவே, நான் முழுமையாக அல்லாஹ்வுக்குக் கட்டுப்படும் அளவுக்கு என் ‘ஹவா’ மனோ இச்சையைக் கட்டுப்படுத்த பகீரதப் பிரயத்தனத்தை மேற்கொண்டேன்.
மூன்றாவது பாடம்: உலகத்தில் இருக்கும் அனைவரும் ஏதோ ஒன்றைப் பெறுமதியாகக் கருதி அதைப் பாதுகாக்கக் கடுமையான முயற்சிகளில் ஈடுபடுவதைக் கண்டேன். பின்னர் ‘உங்களிடம் உள்ளவை முடிந்து விடக்கூடியவையே. அல்லாஹ்விடம் உள்ளவையோ நிலையானவையாகும். மேலும், பொறுமையுடன் இருந்தவர்களுக்கு அவர்கள் செய்து கொண்டிருந்த நல்லவற்றிற்காக அவர்களது கூலியை நாம் வழங்குவோம்.’ (16:96) என்ற வசனத்தைப் பார்த்தேன். எனவே, என்னிடம் கிடைக்கும் பெறுமதிவாய்ந்த எதுவாக இருந்தாலும் அது பாதுகாப்பாக இருப்பதற்காக அல்லாஹ்விடமே ஒப்படைத்து விட்டேன்.
நான்காவது பாடம்: உலகத்தில் ஒவ்வொருவரும் தமது பணம், குடும்பப் பாரம்பரியம், பட்டம் பதவி மூலம் கண்ணியத்தையும் சிறப்பையும் பெற போட்டி போடுவதைக் கண்ணுற்றேன். பின்னர் ‘உங்களில் மிகப் பயபக்தியுடையவரே, நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் உங்களில் மிக கண்ணியத்திற்குரியவர்.’ (49:13;) என்ற வசனத்தைப் பார்த்தேன். எனவே, அல்லாஹ்விடம் கண்ணியத்தைப் பெறும் முகமாக தக்வாவுடன் செயல்பட்டேன்.
ஐந்தாவது பாடம்: மக்களில் சிலர் சிலரைக் குறை கூறுகின்றனர். மற்றும் சிலர் சிலரை சபிக்கின்றனர். இதற்கான காரணம் என்ன என்று தேடினேன். பொறாமைதான் அதற்கு அடிப்படை என்று அறிந்து கொண்டேன். பின்னர் ‘(நபியே!) அவர்கள் உமது இரட்சகனின் அருளைப் பங்கிட்டுக் கொள்கின்றனரா? இவ்வுலக வாழ்க்கையில், அவர்களது வாழ்க்கைத் தேவைகளை அவர்களுக்கிடையில் நாமே பங்கிடுகின்றோம். அவர்களில் சிலர் மற்றும் சிலரைப் பணிக்கமர்த்திக் கொள்வதற்காக, அவர்களில் சிலரை மற்றும் சிலரைவிட அந்தஸ்துக்களால் நாம் உயர்த்தியிருக்கின்றோம். அவர்கள் ஒன்றுதிரட்டியிருப்பதை விட உமது இரட்சகனின் அருள் மிகச்சிறந்ததாகும்.’ (43:32) என்ற வசனத்தைப் பார்த்தேன். எனவே, நான் பொறாமையைக் கைவிட்டேன். மக்களை விட்டும் ஒதுங்கிக் கொண்டேன். எனவே, பொறாமைப்படுவதை விட்டும் ஒதுங்கிக் கொண்டேன்.
ஆறாவது பாடம்: மக்களில் சிலர் சிலரைக் கோபித்துக் கொள்வதையும், எதிரியாக எடுத்துக் கொள்வதையும், தமக்குள் சண்டையிட்டுக் கொள்வதையும் கண்டேன். பின்னர் ‘நிச்சயமாக ஷைத்தான் உங்களுக்கு விரோதியாவான். எனவே, அவனை நீங்கள் விரோதியாகவே எடுத்துக் கொள்ளுங்கள். அவன் தனது கூட்டத்தாரை, நரகவாசிகளில் அவர்கள் ஆகிவிட வேண்டும் என்பதற்காகவே அழைக்கின்றான்.’ (35:6) என்ற வசனத்தைப் பார்த்தேன். அல்லாஹ் ஷைத்தானை எதிரியாக எடுத்துக் கொள்ளுமாறு கூறியிருப்பதனால் படைப்பினங்கள் மீதான எதிர்ப்புணர்வை விட்டு விட்டு ஷைத்தானை மட்டும் எதிர்ப்பதை இலக்காகக் கொண்டு செயற்படுவதற்கு நான் என்னைத் தயார் பண்ணிக் கொண்டேன்.
ஏழாவது பாடம்: படைப்பினங்களில் அனைவரும் தனக்குரிய வாழ்வாதாரத்தைத் தேடுவதற்காகப் பெரும் பிரயத்தனத்தை மேற்கொள்வதைக் கண்டேன். சிலர் தடுக்கப்பட்ட வழிமுறைகள் மூலமாகவாவது தமக்குரிய ரிஸ்கைத் தேட முயற்சிப்பதைக் கண்டேன். இதற்காகவே தமது வாழ்வின் பெரும் பகுதியை கழிப்பதைக் கண்டேன். பின்னர் ‘பூமியில் உள்ள எந்த உயிரினமாயினும் அதற்கு உணவளிக்கும் பொறுப்பு அல்லாஹ்வின் மீதே உள்ளது. அதன் வாழ்விடத்தையும், அதன் சென்றடையும் இடத்தையும் அவன் நன்கறிவான். (இவை) அனைத்தும் தெளிவான பதிவேட்டில் இருக்கின்றன.’ (11:6) என்ற வசனத்தைப் பற்றி சிந்தித்தேன். அல்லாஹ் உணவளிக்கப் பொறுப்பெடுத்துக் கொண்ட உயிரினங்களில் நானும் ஒருவன் என்பதை அறிந்து கொண்டேன். அல்லாஹ் எனக்காகப் பொறுப்பெடுத்துக் கொண்ட ரிஸ்கைத் தேடுவதில் மூழ்குவதை விட்டு விட்டு அவனுக்காக நான் செய்ய வேண்டிய பணிகளில் ஈடுபாடு காட்டலானேன்.
எட்டாவது பாடம்: உலகில் உள்ள ஒவ்வொருவரும் ஏதோ ஒன்றின் மீது நம்பிக்கை வைத்து செயற்படுவதைக் கண்டேன். சிலர் தமது பணத்தில் நம்பிக்கை வைக்கின்றனர். சிலர் தமது பதவியில் சிலர் தமது கட்சியில், சிலர் தமது தொண்டரில், சிலர் தமது தலைமையில்…. என பொறுப்புச்சாட்ட, நம்பிக்கை வைக்க என்று வேறு படைப்பை நாடுவதைக் கண்டேன். பின்னர் ‘நிச்சயமாக அவர்கள் நம்பிக்கை கொண்டு, பின்னர் நிராகரித்ததே இதற்குக் காரணமாகும். எனவே, அவர்களது உள்ளங்கள் மீது முத்திரை குத்தப்பட்டுவிட்டது. ஆகவே, அவர்கள் விளங்கிக்கொள்ள மாட்டார்கள்.’ (63:3) என்ற வசனத்தைப் பார்த்தேன். எனவே, படைக்கப்பட்டவற்றின் மீது நம்பிக்கை வைப்பதை விட்டுவிட்டு படைத்தவனான அல்லாஹ்வின் மீதே நானும் தவக்குல் வைக்கலானேன்.
மாணவனின் பதில் கேட்ட ஆசிரியர் பெரிதும் மகிழ்ந்தார். தமது மாணவனுக்காக துஆச் செய்து இன்னும் உற்சாகமூட்டினார். மாணவன் பற்றிய தனது நல்லெண்ணம் வீண் போகவில்லை என்பதை அறிந்து கொண்டார்.
இது உண்மையில் நடந்த நிகழ்ச்சியா அல்லது கற்பனைச் சித்திரமா என்பதைப் பற்றிய அலசல் அவசியமல்ல. கூறப்பட்ட எட்டுப் பாடங்களும் எமக்கு அவசியமான வழிகாட்டல்கள் என்பது மட்டும் சர்வ நிச்சயமாகும்.

நன்றி....... இணையம்.

 

ரமழானை வரவேற்கும் ஷஃபான்

Post image for ரமழானை வரவேற்கும் ஷஃபான்

நபி ஸல் அவர்களால் கண்ணியப்படுத்தப்பட்ட மாதாம் ஷஃபான் மாதமாகும். இந்த மாதத்தில் உபரியான நோன்புகளை நோற்றார்கள். அதன் சிறப்பினையும் எடுத்துரைத்தார்கள்.  ஆயிரம் மாதங்களைவிட சிறப்புமிக்க “லைலத்துல்கத்ர்” இரவைக்கொண்ட தொடரும் ரமழான் மாதத்தை வரவேற்கும் வழிமுறைகளை வகுத்தளித்தார்கள்.  ஷஃபான் மாதத்தின் சிறப்புகளை கூறினார்களேயன்றி அம்மாதத்தின் ஒரு குறிப்பிட்ட நாளுக்கோ இரவுக்கோ மகிமையிருப்பதாக கூறவில்லை. அதற்கான உண்மையான ஆதாரப்பூர்வமான நபிமொழிகள் இல்லை. ஷஃபே பராஅத் அரபி சொல்லல்ல இது உருது சொல்லாகும்.

அடுத்து ஷஃபான் பிறை 15ன் இரவைப்பற்றி “நிஸ்ஃப் ஷஃபான்” என இப்னு மாஜ்ஜாவில் வரும் நான்கு ஹதீஸ்களும் திர்மிதியில் இடம்பெற்றுள்ள ஹதீஸும் இவ்விரு நூல்களிலிருந்து அறிவிப்பாளர் வரிசையின்றி மிஷ்காத் ஹதீஸும் ஆதாரப்பூர்வமானவையல்ல. எனவே உண்மையான ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் வெளிச்சத்தில் காண்போம்.
உஸாமா பிப் ஜைது (ரலி) அறிவிக்கிறார்கள்.

ரமழானைத்தவிர வேறு எந்த மாதத்தில் நபி(ஸல்) அவர்கள் அதிகமாக நோன்பு வைத்தார்கள் என்பதை அறிய ஆசைப்பட்டேன். ஷஃபான் மாதத்தில் அம்மாதத்தின் சிறப்பை விளக்கும் விதமாக நோன்பு வைத்தார்கள் என்பதை அறிந்தேன். ஷஃபான் மாதத்தின் சிறப்பை குறிப்பிட்ட நபி (ஸல்) அவர்கள் இம்மாதத்தில் அனைவரின் செயல்(அமல்)கள் அல்லாஹ்விடம் சமர்ப்பிக்கப்படுகின்றன. எனது செயல்கள் நான் நோன்பு வைத்த நிலையில் சமர்ப்பிக்கப்படுவதை ஆசிக்கிறேன் (எனவே நோன்பு வைக்கிறேன்) எனக்கூறினார்கள். (ஆதாரம்: அபூதாவூத் நஸயீ, அஹ்மத்)
இதனை உண்மைப்படுத்தும் விதமாக நபி (ஸல்) அவர்களின் அன்பு மனைவி உம்மு சலமா(ரலி) தெரிவிக்கிறார்கள்.
ஷஃபான், ரமழான் என்ற இரு மாதங்களைத்தவிர வேறு இரு மாதங்களில் தொடர்ந்து நோன்பு வைத்ததை நான் கண்டதேயில்லை. (ஆதாரம்: ஆபூதாவூத், நஸயீ)

உஸாமதிப்னு ஸைத் (ரலி) அவர்கள் நபியவர்களிடம்: அல்லாஹ்வின் தூதரே! ஷஃபானை போன்று வேறொரு மாதத்தில் நீங்கள் நோன்பு நோற்பதை நான் காணவில்லை என்று கூறிய போது நபியவர்கள்: மனிதர்கள் ரஜப் ரமழான் ஆகிய இரு மாதங்களுக்கு மத்தியிலுள்ள ஒரு மாதம் விஷயத்தில் பாராமுகமாக இருக்கின்றனர். அது எப்படிப்பட்ட மாதம் எனில் அகிலத்தாரின் அதிபதியாகிய அல்லாஹ்வின்பால் வணக்க வழிபாடுகள் உயர்த்தப்படக்கூடிய மாதமாகும். எனது வணக்க வழிபாடுகள் நான் நோன்பாளியாக இருக்கும் நிலையில் உயர்த்தப்பட வேண்டுமென விரும்புகிறேன் என கூறினார்கள். (ஆதாரம்: நஸயீ அஹ்மத்)
மேற்கண்ட நபிமொழிகள் மூலம் ஷஃபான் மாதத்தில் நமது அமல்கள் அல்லாஹ்விடம் சமர்ப்பிக்கப்படுவதாக அறிகிறோம்.  நபி (ஸல்) அவர்கள் தனது அமல்கள் நோன்பு வைத்த நிலையில் சமர்ப்பிக்கப்படுவதை விரும்பியுள்ளார்கள். அதற்காக நோன்பு வைத்துள்ளார்கள். மேலும் இம்மாதத்தில் ஒரு குறிப்பிட்ட பகலையோ இரவையோ சிறப்பித்து நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளதற்கு நம்பகமான ஹதீஸ்கள் இல்லையென்பது குறிப்பிடத்தக்கது.
வெள்ளிக்கிழமை (மட்டும் சிறப்பான நாளென) நோன்பு வைக்கவேண்டாம். (அப்படி வெள்ளியன்று நோன்பு வைக்க நாடினால்) அதற்கு முந்திய பிந்திய (சனிக்கிழமை) நாளிலும் நோன்பு வைக்கவும். (அபூஹுரைரா ரலி நூல்: முஸ்லிம், அஹமத்)

மேற்படி நபிமொழியை நபி (ஸல்) அவர்கள் தனது வாழ்வில் செயல்படுத்தியுள்ளதை கீழ்காணும் நிகழ்ச்சி உண்மைப்படுத்துகிறது.
நபி (ஸல்) மனவியரில் ஒருவரான ஜுவைரியா ரலி அவர்கள் ஒரு வெள்ளிக்கிழமை (சிறப்பென) நோன்பு வைத்திருந்தார்கள். இதனையறிந்த நபி (ஸல்) அவர்களுக்கும் அவர்களது மனைவிக்கும் நடந்த உரையாடலைப் பாரீர்.
நபி(ஸல்):       நீ நேற்று (வியாழன்) நோன்பு நோற்றாயா?
ஜுவைரியா (ரலி):  இல்லை
நபி(ஸல்):   நாளை (சனிக்கிழமை) நோன்பு வைக்கும் நாட்டமுண்டா?
ஜுவைரியா (ரலி): இல்லை
நபி(ஸல்):   அப்படியானால் இன்றைய நோன்பை விட்டு விடுவாயாக!
(அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) நூல்: நஸயீ, முஸ்னத் அஹ்மத்)
ஒரு குறிப்பிட்ட நாளுக்கோ பகலுக்கோ இரவுக்கோ அல்லாஹ்வும் அவனது தூதரும் முக்கியத்துவம் கொடுத்திருந்தாலேயொழிய நாமாக கொடுக்க நமக்கு உரிமையில்லை.

அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் ஒரு காரியத்தைப்பற்றிக் கட்டளையிட்டு விட்டால், அவர்களுடைய அக்காரியத்தில் வேறு அபிப்பிராயம் கொள்வதற்கு ஈமான் கொண்டுள்ள எந்த ஆணுக்கோ பெண்ணுக்கோ உரிமையில்லை; ஆகவே, அல்லாஹ்வுக்கும் அவனுடைய ரஸூலுக்கும் எவரேனும் மாறு செய்தால் நிச்சயமாக அவர்கள் பகிரங்கமான வழிகேட்டிலேயே இருக்கிறார்கள். (அல்குர்ஆன் 33:36)
தொடர் நோன்பு வைத்து வந்த அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்களை, அவ்விதம் வைக்க வேண்டாம்; மாதத்தில் மூன்று நாட்கள் வை, அது முழு மாதம் வைப்பதற்குச் சமம் என அறிவுரை கூறினார்கள். (ஆதாரம்: புகாரி முஸ்லிம்)

மாதா மாதம் மூன்று நோன்புகள் வைப்பது நபி (ஸல்) அவர்களின் அழகிய வழிமுறையாகும். (அறிவிப்பு: இப்னு மஸ்வூது ரலி நூல்: அபூதவூத் நஸயீ
எந்தெந்த நாட்கள் என்ற கேள்விக்கு பதிலளித்த நபி (ஸல்) அவர்கள் அம்மாதத்தின் பிறை 13,14,15 வைப்பதே மிகைத்து காணப்படுகிறது.
இவ்விதம் மாதா மாதம் நோன்புகளை வைப்பதற்கு வழிகாட்டித்தந்த நபி (ஸல்) அவர்கள் ஷஃபான் மாதத்தின் மத்தியில் (பிறை 15ல்) நோன்பு வைக்காதீர்கள் என தடுக்கவும் செய்தார்கள்.  (ஆனால் வழக்கமாக மாதா மாதம் அந்நாட்களில் நோன்பு வைப்பவர்களைத் தவிர)  ஆதாரம்: அபூஹுரைரா (ரலி) நூல்: அபூதாவூத், தாரமி, இப்னுமாஜ்ஜா, அஹமத்.
இந்த உண்மையான நபிமொழிக்கு மாற்றமாகவே இன்று நம்மிடையே பலர் “ஷபே பராஅத்” என்ற பெயரில் பிறை 15ல் நோன்பு வைக்கிறார்கள்.
ரமழானின் ஆரம்பத்தை அறிந்துகொள்ள ஷஃபான் முதல் பிறையிலிருந்து கணக்கிடுங்கள் என நபி (ஸல்) அவர்கள் அறிவித்தார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: திர்மிதி, அஹ்மத்.

‘ரமளானுக்காக ஷஃபான் பிறையைக் கணக்கிட்டு வாருங்கள்’ என்று நபி (ஸல்) கூறியதாக அபூஹுரைரா (ரலி) அறிவிக்கிறார்கள். (திர்மிதி)
‘ரமளானுக்கு முதல் நாளும், அதற்கு முதல் நாளும் உங்களில் எவரும் நோன்பு நோற்கக் கூடாது. அந்நாட்களில் வழக்கமாக நோற்கும் நோன்பு அமைந்தாலே தவிர! அவ்வாறு அமைந்தால் அந்நாட்களில் நோன்பு நோற்கலாம்!’ (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி, திர்மிதி)
ஷஃபான் மாதத்தை நபி (ஸல்) அவர்கள் சிறப்பித்ததுபோல் நாமும் சிறப்பித்து நபி (ஸல்) அவர்கள் அங்கீகரிக்காத காட்டித்தராத வழியிலோ பலஹீனமான இட்டுக்கட்டப்பட்ட கதைகளின் அடிப்படையிலோ மார்க்கத்தில் புதுமைகளை (பித்அத்) புகுத்தாமல் நபி வழி வாழும் உம்மத்தாக (சமுதாயமாக) அல்லாஹ் நம்மை ஆக்கி வைப்பானாக! ஆமீன்.
நன்றி...... ரீட்இஸ்லாம்


 
புதிய வீடியோ இணைப்புக்கள்


 

 

இறுதி நாளும் அதன் அடையாளங்களும்!

Post image for இறுதி நாளும் அதன் அடையாளங்களும்! 
 
1- அல்லாஹ் இவ்வுலகத்தை நிரந்தரமாக இருப்பதற்காக படைக்கவில்லை. மாறாக அதற்கென முடிவு நாள் வரும். அந்நாளே இறுதி நாளாகும். அதுவே ஐயத்திற்கிடமில்லாத உண்மையுமாகும். அல்லாஹ் சொல்கிறான்:
நிச்சயமாக இறுதிநாள் வந்தே தீரும் அதில் சந்தேகமில்லை.(40:59) நிராகரிப்பாளர்கள் இறுதி நாள் எங்களிடம் வருமா? எனக் கேட்கிறார் கள்(நபியே) நீர் கூறும்: ஆம்! எம் இறைவனின் மீது சத்தியமாக நிச்சயமாக அது உங்களிடம் வரும்.(34:3)

(விசாரணைக்குரிய) காலம் நிச்சயமாக வந்தே தீரும்; அதில் சந்தேகமே இல்லை – எனினும் மனிதர்களில் பெரும்பாலோர் இதில் நம்பிக்கை கொள்ளவில்லை. (54:1)

மனிதர்களுக்கு அவர்களுடைய கணக்கு (விசாரணை நாள்) நெருங்கிவிட்டது. ஆனால் அவர்களோ அதைப் புறக்கணித்து பராமுகமாக இருக்கிறார்கள்.(21:1)

எனினும் அது நெருக்கமாக இருக்கிறதென்பது மனித அறிவால் அறிந்து கொள்ளக்கூடிய விஷயமல்ல. அதை அவர்கள் அறிந்து கொள்ளவும் முடியாது. எனினும் அல்லாஹ்வின் விசாலமான அறிவையும் உலகத்தில் கடந்துவிட்ட கால அளவையும் கவனிக்கும்போது மறுமைநாள் சமீபமானது என அறியலாம். மறுமை பற்றிய அறிவு அல்லாஹ் தனக்கே சொந்தமாக்கிக் கொண்ட மறைவான விஷயங்களிலுள்ளதாகும். அவன் இவ்விஷயத்தைத் தனது படைப்புகளில் எவருக்கும் அறிவித்துக் கொடுக்கவில்லை. அல்லாஹ் கூறுகிறான்:

மக்கள் உம்மிடம் மறுமை நாள் பற்றிக் கேட்கிறார்கள். நிச்சயமாக அது பற்றிய அறிவு அல்லாஹ்விடமே இருக்கிறதென நீர் கூறுவீராக! அதை நீர் அறிவீரா? அது சமீபமாக வந்துவிடலாம். (33:63)

நபி(ஸல்) அவர்கள் இறுதி நாள் நெருங்கிவிட்டது என்பதை அறிவிக்கக்கூடிய அடையாளங்களைக் கூறியுள்ளார்கள். அவை: தஜ்ஜால் வருவது இது மக்களுக்கு மிகப் பெரும் குழப்பமாக அமையும். மக்களில் அதிகமானோர் ஏமாந்து போகுமளவிற்கு சில அற்புதங்களைச் செய்து காட்டுவதற்கு அல்லாஹ் அவனுக்கு சக்தி வழங்குவான். அதாவது வானத்திற்கு உத்தரவு போடுவான். அது மழை பொழியும். புற்பூண்டுகளை முளைவிக்கும்படி பூமிக்கு ஆணையிடுவான். அது அவற்றை முளைவிக்கும். இறந்தவனை உயிர்ப்பிப்பான். இன்னும் இதுபோன்ற அற்புதங்களைச் செய்வான்.

அவனைப் பற்றி நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: அவன் ஒற்றைக் கண்ணன். சுவர்க்கம் நரகம் போன்றதைக் கொண்டு வருவான். அவன் எதை சுவர்க்கம் என்று கூறுவானோ அது நரகமாகும். அவன் எதை நரகமென்று கூறுவானோ அது சுவர்க்கமாகும். அவன் பூமியில் நாற்பது நாட்கள் இருப்பான். அதில் ஒரு நாள் ஒரு வருடம் போன்றும் ஒரு நாள் ஒரு மாதம்;; போன்றும் ஒரு நாள் ஒரு வாரம் போன்றும் ஏனைய நாட்கள் சாதரண நாட்கள் போன்றுமிருக்கும். பூமியில் மக்கா மதீனா வைத்தவிர அவன் நுழையாத இடங்களே இருக்காது.

மேலும் அதன் அடையாளங்களில் இதுவும் ஒன்றாகும். அதாவது சுபுஹுத் தொழுகை நேரத்தில் டமாஸ்கஸின் கிழக்குப் பகுதியிலுள்ள வெள்ளை மனாராவிலிருந்து ஈஸா(அலை) அவர்கள் இறங்கி வருவார்கள். அவர்கள் சுபுஹுத் தொழுகையை மக்களுடன் தொழுவார்கள். அதன் பின் தஜ்ஜாலை தேடிச் சென்று கொன்று விடுவார்கள். சூரியன் மேற்கில் உதிப்பதும் இறுதி நாளின் அடையாளமாகும். அதை மக்கள் காணும்போது நடுங்கி ஈமான் கொள்வார்கள். எனினும் அவர்களின் ஈமான் அவர்களுக்குப் பலனளிக்காது. இறுதி நாளுக்கு மேலும் பல அத்தாட்சிகளுள்ளன.
2- இறுதி நாள் பாவிகளின் மீதே ஏற்படும். அதாவது இறுதி நாள் ஏற்படும் முன் முஃமின்களின் உயிர்களைக் கைப்பற்றக்கூடிய தூய்மையான காற்றை அல்லாஹ் அனுப்பிவைப்பான். அதன் பின்னர் அல்லாஹ் எல்லா படைப்பினங்களையும் மரணிக்கச் செய்து இவ்வுலகத்தை முடிவுக்குக் கொண்டு வர வேண்டுமென்று நாடினால் சூர் ஊதும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்ட மலக்கிடம் அதில் ஊதும்படி ஏவுவான்.(சூர் என்பது ஒரு பெரும் கொம்பாகும்) மக்கள் அந்த சப்தத்தைக் கேட்டவுடன் மயங்கிவிடுவார்கள். அல்லாஹ் கூறுகிறான்:
சூர் ஊதப்படும். அப்போது அல்லாஹ் நாடியவர்களைத் தவிர வானம் பூமியிலுள்ள அனைவரும் மயங்கிவிடுவார்கள்.(39:68) இது வெள்ளிக்கிழமை ஏற்படும். அதன் பின்னர் அனைவரும் மரணித்துவிடுவார்கள். அல்லாஹ்வைத் தவிர வேறு எவரும் இருக்க மாட்டார்கள்.
3- மனிதனின் உடலனைத்தும் அழிந்துவிடும். மனிதனின் முதுகந்தண்டின் கடைசியிலுள்ள ஒரு சிறு எலும்பைத் தவிர வேறு எல்லாவற்றையும் பூமி தின்றுவிடும். எனினும் நபிமார்களின் உடல்களைப் பூமி தின்னாது. அல்லாஹ் வானிலிருந்து ஒரு தண்ணீரை இறக்கிவைப்பான். (அழிக்கப்பட்ட) உடல்கள் வளர்ந்துவிடும். அல்லாஹ் மக்களை உயிரூட்டி எழுப்ப நாடினால் சூர் ஊதும் பொறுப்பிற்குரிய மலக்கு இஸ்ராஃபீல் அவர்களை உயிர்ப்பிப்பான். அவர் இரண்டாம் முறை சூர் ஊதுவார். அல்லாஹ் எல்லாப் படைப்புகளையும் உயிர்ப்பிப்பான். மக்கள் தம் மண்ணறைகளிலிருந்து அல்லாஹ் அவர்களை ஆரம்பமாக படைத்தது போன்று செருப்பு அணியாதவர்களாக நிர்வாணிகளாக விருத்தசேதனம் செய்யப்படாதவர்களாக வெளிவருவார்கள். அல்லாஹ் சொல்கிறான்:
சூர் ஊதப்படும் அந்நேரம் அவர்கள் மண்ணறையிலிருந்து அவர்களின் இறைவனிடம் விரைந்து வருவார்கள். (36:51)
அவர்கள் (தாங்கள் ஆராதனை செய்யும்) கற்களின் பால் விரைந்து செல்பவர்களைப்போல் அந்நாளில் கபுருகளிலிருந்து வெளியேறுவார்கள். அவர்களின் பார்வை கீழ்நோக்கி இருக்கும். இழிவு அவர்களைச் சூழ்ந்து கொள்ளும் அந்நாள் தான் அவர்களுக்கு வாக்களிக்கப்பட்டிருந்த நாளாகும். (70:43-44)
82-1 வானம் பிளந்து விடும்போது நட்சத்திரங்கள் உதிர்ந்து விழும்போது- கடல்கள் (பொங்கி ஒன்றால் ஒன்று) அகற்றப்படும் போது, கப்றுகள் திறக்கப்படும் போது, ஒவ்வோர் ஆத்மாவும், அது எதை முற்படுத்தி (அனுப்பி) வைத்தது, எதைப் பின்னே விட்டுச் சென்றது என்பதை அறிந்து கொள்ளும். (82:1-5)
இதன் பின் மக்கள் மஹ்ஷர் மைதானத்திற்கு கொண்டு வரப்படுவார்கள். அது பரந்த விசாலமான பூமியாகும். காஃபிர்கள் முகம் குப்புற கொண்டு வரப்படுவார்கள். எப்படி அவர்கள் முகம் குப்புற கொண்டு வரப்படுவர்கள்? என நபி(ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர்களைப் பாதங்களால் நடக்க வைத்தவன் அவர்களை முகம் குப்புறவும் நடக்க வைக்க சக்தி உள்ளவன் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அல்லாஹ்வின் நல்லுரையை; புறக்கணித்து நடந்தவன் மறுமையில் குருடனாக எழுப்பப்படுவான். அந்நாளில் சூரியன் மக்களை நெருங்கியிருக்கும். அப்போது மனிதர்கள் அவரவர்களின் செயல்கள் அளவிற்கு வேர்வையிலிருப்பார்கள். சிலருக்கு கணுக்கால் வரை வேர்வை இருக்கும். சிலருக்கு இடுப்பளவு இருக்கும். இன்னும் சிலர் முழுக்க வேர்வையில் மூழ்கிவிடுவார்கள்.
அல்லாஹ்வின் நிழலைத் தவிர வேறு நிழலே இல்லாத அந்நாளில் அவனின் நிழலின் கீழ் சிலர் நிழல் கொடுக்கப்படுவார்கள். அங்கு இருப்பார்கள். நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வின் நிழலைத் தவிர வேறு நிழலே இல்லாத அந்நாளில் அல்லாஹ் ஏழு நபர்களுக்கு நிழல் கொடுப்பான். நீதமாக நடந்து கொண்ட ஆட்சியாளன் அல்லாஹ்வின் வணக்கத்திலேயே வளர்ந்த இளைஞன் தனது உள்ளத்தைப் பள்ளியுடன்; தொடர்பு படுத்திக் கொண்டிருந்த மனிதன் அல்லாஹ்வுக்காக நேசம் கொண்டு அதற்காகவே இணைந்து அதற்காகவே பிரிந்த இரு மனிதர்கள் அந்தஸ்தும் அழகுமுள்ள பெண் தவறு செய்ய அழைத்தபோது நிச்சயமாக நான் அல்லாஹ்வைப் பயப்படுகிறேன் எனக் கூறிய மனிதன் வலது கை கொடுப்பதை இடது கை அறியாவண்ணம் தர்மம் செய்யும் மனிதன் தனித்திருந்து அல்லாஹ்வை நினைவு கூர்ந்து கண்ணீர் வடித்த மனிதன். இது ஆண்களுக்கு மட்டுமல்ல. பெண்களுக்கும் தான். அவர்களும் தம் செயல்கள் குறித்து விசாரிக்கப்படுவார்கள். அவர்களின் செயல்கள் நல்லவையாகயிருந்தால் நன்மையும் தீயவையாக இருந்தால் தீமையும் உண்டு. கேள்வி கணக்கும் கூலியும் தண்டனையும் ஆண்களுக்கு இருப்பது போலவே பெண்களுக்கும் உண்டு.
அந்நாளில் மக்கள் கடினமான தாகத்திலிருப்பார்கள். அன்றைய ஒரு நாள்(நம் கணக்குப் படி) ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்குச் சமமாகும். எனினும் முஃமினுக்கு ஒரு தொழுகையை நிறைவேற்றும் அளவுக்கு அந்நேரம் கழிந்துவிடும். முஸ்லிம்கள் நபி(ஸல்) அவர்களின் தண்ணீர்த் தடாகத்திற்கு வந்து தண்ணீர் அருந்துவார்கள். தண்ணீர்த் தடாகமென்பது நமது நபிகள் நாயகம்(ஸல்) அவர்களுக்கு மட்டும் அல்லாஹ் கொடுத்த மிகப்பெரும் மரியாதையாகும். மறுமை நாளில் நபி(ஸல்) அவர்களின் சமுதாயத்தினர் இதில் நீர் அருந்துவார்கள். அதன் தண்ணீர் பாலை விட மிக வெண்மையானதாகவும் தேனைவிட மிகச் சுவையானத கவும்; கற்பூர மணத்தை விட மிக நறுமண முள்ளதாகவுமிருக்கும். அதன் பாத்திரங்கள் வானின் நட்சத்திரங்கள் அளவு இருக்கும். அதில் ஒரு முறை நீர் அருந்தியவன் அதன் பின் ஒருபோதும் தாகிக்கவே மாட்டான்.
மஹ்ஷர் மைதானத்தில் மக்கள் தங்களிடையே தீர்ப்புச் செய்யப்படுவதையும் கேள்வி கணக்குக் கேட்கப்படுவதையும் எதிர்பார்த்தவர்களாக அங்கு நீண்ட நேரமிருப்பார்கள். கடினமான வெப்பத்தில் நிற்பதும் எதிர்பார்ப்பதும் நீண்டு விடுகிறபோது மக்கள் தங்களிடையே தீர்ப்புச் செய்யப்படுவதற்காக அல்லாஹ்விடம் பரிந்துரை செய்பவர்களைத் தேடுவார்கள். அப்போது ஆதம்(அலை) அவர்களிடம் வருவார்கள். அவர்கள் தம் இயலாமையைக் கூறிவிடுவார்கள். பிறகு முறையே நூஹ்(அலை) இப்றாஹீம் (அலை) மூஸா(அலை) ஈஸா(அலை) என ஒவ்வொரு நபியிடமும் வருவார்கள். அவர்கள் ஒவ்வொருவரும் தமது இயலாமையைக் கூறிவிடுவார்கள். இறுதியாக முஹம்மது(ஸல்) அவர்களிடம் வருவார்கள். அப்போது அவர்கள் அதற்கு தாமே தகுதியானவர் எனக் கூறி அர்ஷிற்குக் கீழ் சுஜுது செய்வார்கள். அல்லாஹ் அவர்களுக்கு உதிக்கச் செய்கின்ற எல்லாப் புகழ் வார்த்தைகளையும் கொண்டு அல்லாஹ்வைப் புகழ்வார்கள். அப்போது முஹம்மதே! உமது தலையை உயர்த்தும் நீர் கேளும் கொடுக்கப்படுவீர். பரிந்துரை செய்யும் உமது பரிந்துரை ஏற்றுக் கொள்ளப்படும் எனக் கூறப்படும். அப்போது அல்லாஹ் தீர்ப்புச் செய்யப்படுவதற்கும் கணக்குக் கேட்கப்படுவதற்கும் அனுமதிவழங்குவான். முஹம்மது(ஸல்) அவர்களின் உம்மத்தினர்தாம் முதன் முதலில் கேள்வி கணக்கு கேட்கப்படுவார்கள்.
அடியான் செய்த செயல்களில் கேட்கப்படும் முதல் கேள்வி தொழுகை பற்றியாகும். அது சரியாக இருந்து எற்றுக்கொள்ளப்பட்டு விட்டால் ஏனைய செயல்கள் கவனிக்கப்படும்;. அது மறுக்கப்பட்டு விட்டால் ஏனைய செயல்களும் மறுக்கப்பட்டு விடும். இதுபோன்றே ஒரு அடியான் ஐந்து காரியங்கள் பற்றி விசாரிக்கப்படுவான். அதாவது அவன் தனது வாழ்நாளை எவ்வாறு கழித்தான் தன் வாலிபத்தை எப்படி பயன்படுத்தினான் தன் பொருளை எப்படி சம்பாதித்து எவ்வழியில் செலவழித்தான் தான் கற்றதில் எந்த அளவுக்கு செயல்படுத்தினான் என்றெல்லாம் விசாரிக்கப்படுவான்.
மேலும் அடியார்களிடையே தீர்ப்புச் செய்யப்படும் முதல் காரியம் இரத்தங்கள் (கொலை, காயம்)பற்றிய தீர்ப்பாகும். அந்நாளில் நன்மை தீமைகளைக் கொண்டே நியாயம் வழங்கப்படும். ஒரு மனிதனின் நன்மை எடுக்கப்பட்டு அது அவனால் பாதிக்கப்பட்டவனிடம்; கொடுக்கப்படும். நன்மைகள் தீர்ந்து விட்டால் பாதிக்கப்பட்டவனின்; தீமையை எடுத்து இவனிடம் போடப்படும். அங்கு ஸிராத் என்னும்; பாலம் அமைக்கப்படும். அது முடியை விட மெல்லிய தாகவும் வாளைவிட கூர்மையானதாகவுமிருக்கும். அது நரகத்தின் மீது அமைக்கடிருக்கும். மக்கள் அதில் அவரவர் செயல்களைப் பொருத்து கடந்து செல்வார்கள். சிலர் கண் சிமிட்டும் நேரத்திற்குள் கடந்து விடுவார்கள். சிலர் காற்று வேகத்தில் செல்வார்கள்;. வேறு சிலர் மிக விரைவாகச் செல்லும் குதிரை போன்றும் செல்வார்கள்;. இன்னும் தவழ்ந்து தவழ்ந்து செல்பவர்களுமிருப்பார்கள். அப்பாலத்தின் மீது கோர்த்திழுக்கக் கூடிய கொழுத்துச் சங்கிலிகளுமிருக்கும். அது மனிதர்களைப் பிடித்து நரகில் தள்ளிவிடும்.
காஃபிர்களும் அல்லாஹ் நாடிய பாவிகளான முஃமின்களும் நரகில் விழுந்து விடுவார்கள். காஃபி‏ர்கள் நிரந்தரமாக நரகிலேயே இருப்பார்கள். பாவியான முஃமின்கள் அல்லாஹ் நாடிய அளவிற்கு வேதனை செய்யப்பட்டு பின் சுவர்க்கம் செல்வார்கள் நரகம் சென்று விட்ட சிலருக்கு பரிந்துரை செய்வதற்காக நபிமார்கள் ரசூல்மார்கள் நல்லடியார்களில் அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு பரிந்துரை செய்ய அனுமதி வழங்குவான். இவர்களால் பரிந்துரை செய்யப்படுபவர்களை அல்லாஹ் நரகிலிருந்து வெளியேற்றுவான்.
இப்பாலத்தை கடந்து சென்ற சுவர்க்கவாசிகள் சுவர்க்கத்திற்கும் நரகத்திற்குமிடையே அமைக்கப்பட்டிருக்கும்; ஒரு பாலத்தில் நிற்பார்கள். அங்கு அவர்களில் சிலருக்கு சிலரிடமிருந்து கணக்குத் தீர்க்கப்படும். யார் தனது சகோதரனுக்கு அநியாயம் செய்திருக்கிறாரோ அவருக்கு நியாயம் வழங்கப்படாதவரை அல்லது பாதிக்கப்பட்டவர் அவனை திருப்தி கொள்ளாத வரை சுவர்க்கம் செல்ல முடியாது. சுவர்க்கவாசிகள் சுவர்க்கத்திலும் நரக வாசிகள் நரகத்திலும் நுழைந்து விட்டால் மரணம் ஒரு ஆட்டின் வடிவில் கொண்டு வரப்பட்டு சுவர்க்கத்திற்கும் நரகத்திற்குமிடையே அறுக்கப்படும். சுவர்க்கவாசிகளும் நரகவாசிகளும் அதைப் பார்ப்பார்கள். பிறகு சுவர்க்கவாசிகளே! உங்களுக்கு மரணமே கிடையாது இதிலேயே நீங்கள் நிரந்தரமாக இருங்கள் என கூறப்படும்.
நரகமும் அதன் வேதனையும்
அல்லாஹ் கூறுகிறான்: நரகத்தைப் பயந்து கொள்ளுங்கள் அதன் எரிபொருள் மனிதர்களும் கற்களுமாகும். அது காஃபிர்களுக்காக தயாரிக்கப்பட்டுள்ளது. (2:24)
நபி(ஸல்) அவர்கள் தம் தோழர்களிடம் கூறினார்கள்: நீங்கள் எரிக்கும் நெருப்பு நரகின் நெருப்பில் எழுபது மடங்குகளில் ஒன்றாகும். அப்போது அவர்கள் அல்லாஹ்வின் தூதரே! (பாவிகளைத் தண்டிப்பதற்கு) இதுவே போதுமெனக் கூறினார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள் நிச்சயமாக இதில் அறுபத்தொன்பது மடங்குகள் அதிகமாக்கப்படும். அவையனைத்தும் இது போன்ற வெப்பமுள்ளதாக இருக்கும். எனக் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)
நரகம் ஏழு அடுக்குகளைக் கொண்டதாகும். அதில் ஒவ்வொரு அடுக்கும் மற்றதைவிட மிகக் கடுமையான வேதனை உள்ளதாகும். அதில் ஒவ்வொரு அடுக்கிலும் அதற்குத் தகுதியானவர்கள் தத்தமது செயல்களைப் பொறுத்து இருப்பார்கள். நயவஞ்சகர்கள் நரகத்தின் அடித்தட்டிலிருப்பார்கள். அதுதான் மிகக் கடுமையான வேதனைக்குரியதாகும். காஃபிர்களுக்கு நரகத்தில் வேதனை இடைவிடாத நிரந்தர வேதனையாகும். அவர்கள் நரகில் கரிந்துவிடும் போதெல்லாம் வேதனையை அதிகப்படுத்துவதற்காக திரும்பவும் பழைய நிலைக்குக் கொண்டு வரப்படுவார்கள்.
அல்லாஹ் கூறுகிறான்: அவர்களின் தோல்கள் கரிந்திடும் போதெல்லாம் அவர்கள் வேதனை அனுபவிப்பதற்காக வேறு தோல்களை நாம் ஏற்படுத்துவோம்.(4:56) எவர்கள் நிராகரித்தார்களோ அவர்களுக்கு நரக நெருப்புத்தானிருக்கிறது. அவர்கள் மரணம் அடையும் வகையில் அவர்களுடைய கதை முடிக்கப்படவும் மாட்டாது. நரகத்திலுள்ள வேதனை அவர்களுக்கு இலேசாக்கப்படவும் மாட்டாது. இவ்வாறே நாம் எல்லா காஃபிர்களுக்கும் கூலி வழங்குவோம்.(35:36)
அதில் அவர்கள் விலங்கிடப்படுவார்கள். அவர்களின் கழுத்துக்களிலும் விலங்கிடப்படும் அல்லாஹ் சொல்கிறான்: இன்னும் அந்நாளில் குற்றவாளிகளைச் சங்கிலிகளால் பிணைக்கப்பட்டவர்களாக அவர்களுடைய ஆடைகள் தாரால் (கீல் எண்ணையினால்) ஆகி இருக்கும்; இன்னும் அவர்களுடைய முகங்களை நெருப்பு மூடி இருக்கும்.(14:49-50)
நரகவாசிகளின் உணவு ஸக்கூம் என்ற கள்ளி மரமாகும். அல்லாஹ் கூறுகிறான்: நிச்சயமாக ஸக்கூம்(கள்ளி) மரம் பாவிகளின் உணவாகும். அது உருக்கப்பட்ட செம்பு போன்றிருக்கும். அது வெந்நீர் கொதிப்பதைப் போன்று வயிற்றில் கொதிக்கும்.(44:41-46)
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஸக்கூம் மரத்திலிருந்து ஒரு சொட்டு உலகில் விழுந்து விட்டால் உலகிலுள்ளவரின் வாழ்க்கை வீணாகிவிடும். அப்படியானால் அதுவே உணவாக கொடுக்கப்படுபவர்களின் நிலை எப்படி இருக்கும்? (திர்மிதி) நரக வேதனையின் கடுமையையும் சுவர்க்க பாக்கியத்தின் பெருமையையும் பின் வரும் ஹதீஸ் விளக்கிக் காட்டுகிறது: மறுமையில் உலகில் மிகுந்த வசதி வாய்ப்புடன் வாழ்ந்த காஃபிர்களில் ஒருவன் கொண்டு வரப்படுவான். அவனை நரக நெருப்பில் ஒரு முறை முக்கப்படும். பின்னர் அவனிடம் உனக்கு(உலகில்) ஏதேனும் வசதி இருந்ததா? எனக் கேட்கப்படும். அப்போது அவன் எந்தப் பாக்கியமும் எனக்கிருந்ததில்லையே எனக் கூறுவான். ஒரு முறை நரகத்தில் முக்கியதால் உலக பாக்கியங்கள் அனைத்தையும் அவன் மறந்து விடுகிறான். இவ்வாறே உலகில் மிகப்பெரும் கஷ்டத்தில் வாழ்ந்த ஒரு முஃமின் கொண்டு வரப்பட்டு ஒரு முறை சுவர்க்கத்தில் புகுத்தப்படுவான். பின்னர் (உலகத்தில்) ஏதேனும் உனக்கு கஷ்டமிருந்ததா? எனக் கேட்கப்படுவான். அதற்கவன் எந்தக் கஷ்டமும் வருமையும் எனக்கிருந்ததில்லையே எனக் கூறுவான். சுவர்க்கத்தில் ஒரு முறை புகுத்தப்பட்டதால் உலகில் அவன் அனுபவித்த கஷ்டம் வறுமை தூப்பாக்கியம் அனைத்தையும் அவன் மறந்துவிடுவான். (முஸ்லிம்)
சுவர்க்கம்
சுவர்க்கம் இறைவனின் நல்லடியார்களுக்குரிய கண்ணியமான நிரந்தரமான வீடாகும். அதிலுள்ள பாக்கியங்கள் எந்தக் கண்ணும் கண்டிராத எந்தக் காதும் கேட்டிராத எந்த மனித உள்ளத்திலும் உதித்திராதவையாகும். அது மனிதன் படித்ததற்கும் கேள்விப்பட்டதற்கும் அப்பாற்பட்டதாகும். அல்லாஹ் கூறுகிறான்: அவர்கள் செய்த(நற்)செயல்களுக்குக் கூலியாக மறைத்து வைக்கப்பட்டுள்ள கண் குளிர்ச்சியை எந்த ஒரு ஆன்மாவும் அறிந்து கொள்ள முடியாது.(32:17)
சுவர்க்கத்தின் அந்தஸ்த்துகள் முஃமின்களின் செயல்களைப் பொருத்து ஏற்றத் தாழ்வு உடையதாகும். அல்லாஹ் கூறுகிறான்: உங்களில் ஈமான் கொண்டவர்களுக்கும் கல்வி வழங்கப்பட்டவர்களுக்கும் அந்தஸ்த்துகளை அல்லாஹ் உயர்த்துகிறான்.(58:11)
சுவர்க்கத்தில் அவர்கள் விரும்பியவற்றை உண்ணவும் பருகவும் செய்வார்கள். அவற்றில் நிறம் மாறிவிடாத தண்ணீர் ஆறுகளும் ருசி மாறாத பாலாறுகளும் தெளிவான தேனாறுகளும் சுவையான மதுபான ஆறுகளும் உள்ளன. அவர்களின் மது உலக மது போன்றதல்ல. அல்லாஹ் கூறுகிறான்: தெளிவான பானம் நிறைந்த குவளைகள் அவர்களைச் சுற்றிக் கொண்டு வரப்படும் (அது) மிக்க வெண்மையானது அருந்துபவருக்கு மதுரமானது. அதில் கெடுதியுமிராது. அதனால் அவர்கள் புத்தி தடுமாறவும் மாட்டார்கள்.(37:45-47)
சுவர்க்கத்தில் ஹுருல் ஈன் பெண்கள் மணமுடித்து வைக்கப்படுவார்கள். நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ”சுவர்க்கத்துப் பெண்களில் ஒரு பெண் உலகத்தாரிடம் வந்துவிட்டால் வானம் பூமிமிக்கிடையே உள்ளவற்றை ஒளிமயமாக்கிவிடுவாள். அவற்றில் நறுமணத்தை நிரப்பிவிடுவாள்”.(புகாரி)
சுவர்க்கவாசிகளின் மிகப்பெரும் பாக்கியம் அவர்கள் அல்லாஹ்வைப் பார்ப்பதாகும். சுவர்க்கவாசிகள் மல ஜலம் கழிக்கவோ மூக்குச் சிந்தவோ உமிழவோ மாட்டார்கள். அவர்களின் சீப்புகள் தங்கமாகவும் வியர்வை கஸ்தூரியாகவுமிருக்கும். அவர்களின் இவ்வருட்பாக்கியம் நின்றுவிடவோ குறைந்திடவோ செய்யாத நிரந்தர பாக்கியமாகும்.
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் சுவர்க்கம் நுழைகிறாரோ அவர் பாக்கியம் பெற்று விட்டார். சிரமப்படவோ சோர்வடையவோ மாட்டார். சுவர்க்கவாசிகளின் குறைந்த பங்கு உலகமனைத்தும் பத்துமுறை வழங்கப்படுவதை விடவும் சிறந்ததாகும். நரகிலிருந்து வெளியேறி கடைசியில் சுவர்க்கம் நுழைபவன் தான் இக்குறைந்த பங்கை உடையவன்.


to thanks read islam.org

Popular Posts

Popular Posts